PDA

View Full Version : இன்டர்வியூ ஜோக்



pasupathi
21-09-2016, 09:21 PM
இண்டர்வியூ ஜோக்


நெருங்கிய நண்பர்களானா சந்தாவும், பந்தவும், தங்களூடைய திறமை காரணமாக வெவ்வேறு இடத்தில் இருந்தனர். சந்தா சிங் கொஞ்சம் இன்டலிஜென்ட் அதனால் நல்ல வேலையில் இருந்தார், ஆனால் பந்தா சிங்கோ ஒரிஜினல் சர்தார்.ஒரு நாள் இருவரும் ஓர் இடத்தில் சந்தித்து, தங்களுடைய வேலை பற்றி பேசி கொண்டிருக்கும் போது, பந்தா சொன்னார் " நாம் இருவரும் ஒரே ஆபிஸில் வேலை செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..., ஆனா இரண்டு பேருக்கும் ஒரே இடதில் வேலை கிடைப்பது கஸ்டமாச்சே.. என்ன செய்யலாம்..?
"அதற்க்கு சந்தா "என்கிட்ட ஒரு நல்ல ஐடியா இருக்கிறது, அதன்படி நாம் இரண்டு பேரும் ஒரே இடத்திற்க்கு வேலை கேட்டு போவோம், இண்டர்வியூவிற்க்கு முதலில் நான் போகிறேன், அதில் என்ன கேள்வி கேட்டார்கள், அதற்க்கு என்ன பதில் என்று நான் உனக்கு சொல்லி விடுகிறேன், நீ அடுத்து இண்டர்வியூவை ஈசியாக பாஸ் செய்து விடலாம்" என்றார். திட்டமிட்டபடி, ஓரு இடத்திலிருந்து இருவருக்கும் இண்டர்வியூவிற்க்கு அழைப்பு வந்தது...
இண்டர்வியூவிற்க்கு சந்தா சென்றார், அங்கு கேட்கப்பட்ட கேள்வி & பதில்.....

இ.செ : இந்தியாவுக்கு எப்போது சுதந்திரம் பிறந்தது...?

சந்தா : கி.பி 1860 - இருந்து முயற்சி ஆரம்பித்தார்கள், ஆனால் 1947 -ல்தான் பிறந்தது...

இ.செ : வெரிகுட், தற்போதைய இந்திய பிரதமர் யார் ?

சந்தா : தினமும் ஆள் மாறுகிறார்கள்,தற்போதைக்கு திரு. நரேந்திரமோடி அவர்கள்...

இ.செ : வெரிகுட், தற்போது இந்தியாவின் மக்கள் தொகை எவ்வளவு?

சந்தா : இன்னூம் ஆராய்ச்சி நடந்து கொண்டு இருக்கிற்து, சரியான தகவல் தெரியவில்லை..

இ.செ : வெரிகுட், நீங்க போகலாம்...

வெளியே வந்த சந்தா, பந்தாவிடம் தனக்கு கேட்கப்பட்ட கேள்விகளையும் அதற்க்கான பதிலையும் சொல்லி, இந்த கேள்விகள்தான் கேட்கப்படும் என்றும் சொன்னார். பந்தா, பதில்களை மட்டும் ஞாபகம் வைத்து கொண்டு இண்டர்வியூவிற்க்கு சென்றார்..
அங்கு பந்தாவிடம் கேட்கப்பட்ட கேள்வி& பதில்.....

இ.செ : நீங்கள் பிறந்தது எப்போது ?

பந்தா : கி.பி 1860 - இருந்து முயற்சி ஆரம்பித்தார்கள், ஆனால் 1947 -ல்தான் பிறந்தது...

இ.செ : ( ஒரு மாதிரி பார்த்துவிட்டு.) உங்களுடைய தகப்பனார் யார்? (who is your father?)

பந்தா : தினமும் ஆள் மாறுகிறார்கள்,தற்போதைக்கு திரு. நரேந்திரமோடி அவர்கள்..

இ.செ : (கோபமாக) உனக்கு என்ன பைத்தியமா?

பந்தா : இன்னூம் ஆராய்ச்சி நடந்து கொண்டு இருக்கிற்து, சரியான தகவல் தெரியவில்லை..

இ.செ : கெட் அவுட்

Mano60
17-11-2016, 05:44 AM
சிரிப்பு வருகிறது. அதேநேரத்தில் கொஞ்சம் அசிங்கமாகவும் தெரிகிறது. சிரிக்க வைத்ததற்கு நன்றி நண்பரே. உங்களுக்கு யாரும் பதில் தரவில்லை என்பதால் நான் தருகிறேன்.

sures
18-11-2016, 07:16 AM
இப்படித்தான்.. சொந்த ஜோசிக்காம மற்றவர்களை காப்பி அடித்தால் அசிங்கமா போயிடும்.

tonybrooks
01-07-2019, 07:13 AM
சிரிப்பு வருகிறது