PDA

View Full Version : ஒரு பொண்ணும் நாலு அப்பாவி பொடியன்களும்!!!pasupathi
03-09-2016, 03:06 PM
ஒரு பொண்ணும் நாலு அப்பாவி பொடியன்களும்!!!!நாளை ‘பில்லா’ படம் ரிலீஸ்.

தல படத்தினை முதற் காட்சியிலே பாத்திட எவன் கையிலும் காசில்லை.

எத்தினியோ திட்டங்கள் தீட்டி ஒன்றும் சரிபட்டு வராததில், வழக்கம் போல வங்கிகணக்கிலிருந்து காசு புரட்ட ‘இந்தியன் வங்கி’ சென்றிருந்தோம்.

வங்கி கோடை வெயிலிலும் குளு குளு என்றிருந்தது .

ஆனாலும் வங்கியினுள் ஒரு பொண்ணும் இல்லாதது ‘எ’ பட தியேட்டரில் கணித மாஸ்டரை பார்த்த அவஸ்த்தை.

ஹபினுள் இருந்ததில்
ஒரே ஒரு பொண்ணு நாசா விஞ்ஞானியாகி கம்பியூட்டரையே பாத்துக் கொண்டிருந்தாள்.

ஆதலால் வங்கியிலிருந்து அரைமணி நேரம் நாங்கள் வெளி நடப்பு செய்தோம்.

வங்கி முன் இருந்த வேப்ப மரத்தின் குளுமையும் வீதியால் செல்லும் பெண்கள் வீசிச் செல்லும் ஓர விழிப்பார்வையும் மனசுக்கு புத்துனர்ச்சியூட்டியது.

மதிய நேர வீதி, ரஜினி படத்துடன் ரிலீசாகும் புதுநடிகன் பட தியேட்டர் மாதிரி வெறிச்சோடி கிடந்தது.

நான்,ரகு ,குட்டி , ரிஷி ஆகியோர் பில்லாவில் நமீதாவின் கஸ்ட்ரியூமை பற்றி காரசார விவாதம் செய்து கொண்டிருந்தபோது. சைக்கிள் பார்க்கினுள் ஒரு தேவதை , அளவான உதட்டுச்சாயம், காற்றில் பறந்து கொண்டிருந்த கூந்தல், காதோரம் வழியும் முடி, ஆர்ப்பாட்டமில்லா அழகு என, ஜீன்ஸ் அணிந்த நவநாகரிகத்தின் தேவதை.
மனசு நமீதாவை மறந்தே போனது.கையில் அழுத்தி பிடித்திருந்த கைக்குட்டையால் வானத்தினை பார்த்தவளாய் முகத்தினை ஒற்றினாள்.என் மனசு சூரியனை சாம்பலாகும்படி சாபமிட்டது .பர்சில் இருந்து திறப்பினை எடுத்து சைகிள் பூட்டினுள் சாவியை சொருகினாள்.

”பூட்டு திறப்படக்கூடாது”

மனசு அடித்துக் கொண்டது, மாரியாத்தாவை வேண்டிக்கொண்டது.நாலு மனசுகள் வேண்டி கொண்டதாலோ என்னவே பூட்டு திறக்கவே இல்லை.ம்ஹூம்……

மூன்று முறை முயற்சித்தும் பூட்டு திறக்கவேயில்லை. எங்கள் இருபது வருட வாழ்கையில் நங்கள் நினத்தது முதற்தடவை நடந்து விட்டது.நாளை நமீதாவுக்கு எக்ஸ்ரா மூணு குடம் பால் ஊத்தனும்.

நான்காவது முறை முயற்சித்தவாறு திரும்பியவள், எங்களை பார்த்து லேசாய் புன்னகத்தாள்.தெத்துப்பல் பாவனாவை நினைவூட்டியது.

முத்துபோல் வியர்வைகள் முகத்தில் பூத்திருந்தது அழகினை இன்னும் அதிகப்படுத்தியது.சத்தியமாதாங்க எங்களால் நம்பவே முடியவில்லை!.

அந்த ‘தேவதை’ புன்னகைத்தவாறு எங்களை நோக்கி வந்தாள்.

பாரதிராஜா படம் மாதிரி பூக்கள் சொரிந்தது. காற்றில் மிதந்தோம்.


“ஒரு கெல்ப் செய்வீங்களா ?

” அவள் முடிக்க முன்னரே“
உங்களுக்கு கெல்ப் செய்யாமை யாருக்கு செய்யிறது

” நாலு குரல்கள் கேரஸ் பாடின.“

பூட்டு திறக்குதில்லை திறந்து தருவிங்களா”“
அதுக்கென்ன திறந்துட்டா போச்சு”

திறப்பினை நீட்டினாள்.

குட்டி முந்திகொண்டு திறப்பினை வாங்கினான்.

விரைந்து சென்று பூட்டில் திறப்பினை சொருகி திறந்தான்.

“இப்பவும் திறக்கவே கூடாது”

மூனு மனசுகள் வேண்டி கொண்டது.ம்ஹும்………
திறப்படவேயில்லை திறப்பினை பிடுங்கினான்

ம்ஹூம் ,

நான் ம்ஹூம் ,

ரகு ம்ஹூம்,

யாராலுமே முடியவில்லை. குசேலன் படம் பாத்த ரஜனி ரசிகர்கள் மாதிரி நின்றிருந்தோம்.


“திறப்பு தேஞ்சிருக்கு போலை” ரகு குசுகுசுத்தான்.

“இன்டர்வியூ இருக்கு போகனும் டைம் ஆகுது
அவளின் வார்த்தைகள் குழைந்தது. செய்வது அறியாமல் நின்றிருந்தோம்.


“பூட்டை உடைச்சிட வேண்டியதுதான்” குட்டி ஐடியா கொடுத்தான். நான் அவளைப்பார்த்தேன்.

“சாவியில்லாம பூட்டை எப்படி உடைப்பீங்க


”“பூட்டை உடைக்க சாவி எதுக்கு கைக்குட்டை போதும்”பெருமிதமாய் சொன்னான் ரிஷி.

அவள் புரியாமல் விழித்தாள்.


ரிஷி கைக்குட்டை எடுக்க தன் பேன்ட்பாக்கெட்டில் கைவைத்தவன் வெடுக்கென கையை எடுத்தான் . மூனு மாசமா கைக்குட்டை தோய்க்காதது ஞாபகம் வந்திருக்கும்.

நான் எனது கைக்குட்டையை பூட்டின் செவியில் கட்டி விசையாய் இழுத்தேன், கைகுட்டையோடு சேர்ந்து என் மனசும் கிழிந்தது.

அதற்குள் குட்டி வீதியில் நின்ற ஆட்டோகாரனிடம் ஸ்கூருடயர் வாங்கி வந்திருந்தான்.

சில நிமிட போராட்டதின் பின் பூட்டு ஷகிலாவை பார்த்த தாத்தாவாய் வாய் பிளந்தது.

தேர்தலில் வென்ற ஒபாமாவின் மிதப்பாய் அவளைப்பார்த்தோம்."தாங்ஸ்”
சொல்லிவிட்டு குரங்கு பெடல் போட்டு சைக்கிலில் ஏறி சென்றாள்.நீண்ட நேரமாகவும் அவள் போன வீதியை வெறித்து பார்துக்கொண்டே இருந்தோம். தேர்தலில் வென்ற அரசியல்வாதியாகி எங்களை திரும்பி பாக்கவேயில்லை.
மீண்டும் வேப்ப மரத்தின் கீழ் தஞ்சமாகி, பதினைந்து நிமிடங்கள் கடந்திருக்கும். வங்கியினுள்ளிருந்து வந்த பெரியவர் கலவரத்துடன்,

“தம்பி பார்க்கிலை ஒரு லேடிஸ் சைக்கில் விட்டிருந்தன் பாத்தீயா பூட்டி போட்டு போனேன் சைக்கிலை கானலை


”நான் வீதியை நோக்கி ஓடினேன், நல்லவேளை ஆட்டோக்காரனை கானவில்லை.

dellas
06-09-2016, 11:26 AM
ஆஹா ...பசுபதி அவர்களே..அருமை.

சிரிப்பை அடக்க முடியவில்லை. எதார்த்தமான வர்ணணைகள் அழகு.

தொடருங்கள் வாழ்த்துக்கள் ..

pasupathi
07-09-2016, 05:52 AM
மிக்க நன்றி dellas

ரமணி
18-09-2016, 04:58 AM
நல்ல ட்விஸ்ட், கதை முடிவில்.
ரமணி

pasupathi
20-09-2016, 04:23 AM
Thank you ரமணி

Mano60
18-11-2016, 09:29 AM
சூரியனையே சாம்பலாகி போகணும்ன்னு ஒரு பெண்ணுக்காக சாபமிடுபவர்கள் அப்பாவி பொடியன்களா? அப் பாவி பொடியன்களா? வர்ணனைகள் நன்றாக இருந்தன. வாழ்த்துக்கள்.