PDA

View Full Version : அப்துல் கலாமுக்கு கைது உத்தரவு - அழுவதா சிஅலை...
30-01-2004, 02:35 AM
மகாத்மா பிறந்த மாநிலத்தின் தலை நகர்...

எம்.எஸ். பிரம் பட் என்றொரு நீதிபதி - அண்ணார் காசு கொடுத்தால் எதை வேண்டுமானுலும் செய்பவராம்...??

zee தொலைக் காட்சி நிருபர் ஒருவர் ரூபாய் 40, 000 மட்டுமே லஞ்சமாகக் கொடுத்து சில கைது உத்தரவுகளிள் கையெழுத்து கேட்டிருக்கிரார். நம் அருமை நீதிபதியும் படித்துப் பார்க்காமலே சர் சர்ர்ரென்று கையெழுத்து போட்டு நீட்டியிருக்கிரார்...

<span style='color:#ec0000'>அந்த கைது உத்தரவில் முதல் பெயர் "முதல் குடிமகண் அப்துல் கலாம்"
இரண்டாம் நபர் "உச்ச நீதிமன்ற தமைமை நீதிபதி"</span>

இந்தியாவில் நீதித்துறை செல்லரித்துப் போய் விட்டது என்பதற்க்கு சிறந்த உதாரணம்....

சிரிப்பதா அழுவதா...வெட்க்கப்பட வேண்டிய விஷயம்....

அலை...
30-01-2004, 02:50 AM
அந்த நீதிபதி இப்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிரார்..

மூர்த்தி
30-01-2004, 02:53 AM
:!: நல்ல வேளை அந்த நிருபர் அந்த குறிப்பிட்ட நீதி வழங்கிய அவரின் பெயரையே அதில் எழுதி இருந்தால் நிலைமை இன்னும் கேலிக்கூத்தாகி இருக்கும்!

தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்..தர்மம் கடைசியில் வெல்லும் போன்றவை சினிமாவுக்காகவே தயாரிக்கப்பட்ட பொன்மொழிகள்!!!
விருப்பு,வெறுப்பு,தன்னலம் போன்றவற்றை ஒதுக்கித் தள்ளிவிட்டு தொலைநோக்கோடு நடுநிலையாக இருந்து சொல்லுங்கள்..இந்தியாவின் நீதி எப்படி,எந்த நிலையில் உள்ளது என்பதற்கு இதனைவிட வேறு என்ன சான்று வேண்டும்???எல்லாம்,எங்கும் காசேதான் கடவுளடா மயமாகிவிட்டது.இன்று உள்ளே போகும் அரசியல் தலைவர் அனைவரும் சிரித்துக்கொண்டே கையை அசைத்தவாறு வெளிவருகின்றனர்!!!நாட்டு விடுதலைக்காகப் போராடி சிறை சென்றவர்கள் கூட அவ்வாறு மிக்க சந்தோசமாக வெளிவந்ததாக வரலாறு சொல்லவில்லை!அரசியல் கைதிகளுக்கு மேம்பட்ட சிறைவகுப்பு...காற்றாடி,வானொலி,கட்டில்,மெத்தை,துருப்பிடிக்கா தட்டு..இன்னும் எத்தனை வசதிகள்?சாதாரண அன்றாடம் காய்ச்சி உள்ளே சென்றால் அவனின் சாப்பாட்டில் நெளிவது பூச்சியும் புழுவும்தானே...

எத்தனை வாய்தாக்கள்,இழுத்தடிப்புக்கள்,நீதிமன்றத்துக்கு வராமை,நீதிமன்ற அவமதிப்பு,மேல் நீதிமன்ற அப்பீல்,நீதிபதிக்கே கொலைமிரட்டல்,நீதிபதியின் மருமகன் வீட்டில் கஞ்சா வைத்து பின் பிடிப்பு...என்ன மாய்மாலங்கள்..இந்தியா முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பதில் இதனையும் சேர்க்கவேண்டுமோ???

அம்பேத்கர் இன்றிருந்தால் ஏண்டா எழுதினோம் என்று வாழ்க்கையையே வெறுத்திருப்பார்!சட்டத்தில் எத்தனை ஓட்டைகள்?அதனை பயன்படுத்துவதில் எத்தனை நுணுக்கம்?சட்டத்தை ஆராய்ந்து அதில் குறிபிட்ட மாறுதல்களைச் செய்து மீண்டும் அமுல்படுத்தலாம்.இப்போதெல்லாம் சட்டம் படித்த வழக்குரைஞரைவிட பேட்டை ரவுடிக்குதான் சட்டத்தின் நுணுக்கங்கள் எல்லாம் தெரிகின்றன!!!அந்த அளவுக்கு புகுந்து வெளிவருகிறார்கள்!!!

sara
30-01-2004, 06:01 AM
அப்துல் கலாம் என்று ஆரம்பித்திருப்பதால், இதை இங்கு குறிப்பிடுகிறேன். கீழ்க்கண்ட கட்டுரையையும் படித்துப் பாருங்கள். சில மாறுபட்ட கருத்துக்கள். சிந்திக்க வேண்டிய அவசியம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

http://www.vikatan.com/jv/2004/jan/0401200...04/jv0602.shtml

மற்றபடி, மேற்குறிப்பிட்டுள்ள சுட்டிக்கும், இந்த விவாதத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. சும்மா ஒரு தகவலுக்காக பகிர்ந்திருக்கிறேன். அவ்வளவே.

பரஞ்சோதி
30-01-2004, 11:48 AM
:!: நல்ல வேளை அந்த நிருபர் அந்த குறிப்பிட்ட நீதி வழங்கிய அவரின் பெயரையே அதில் எழுதி இருந்தால் நிலைமை இன்னும் கேலிக்கூத்தாகி இருக்கும்!நண்பர் சொன்னதை படித்து விட்டு, அழுவதா சிரிப்பதா என்று தோணுகிறது.

இந்தியாவில் நீதித்துறை தான் கொஞ்சமாவது உண்மையோடு இருக்கிறது என்ற எண்ணத்தில் மண் போட்ட சம்பவம். எவ்வளவு பெரிய வெட்கக்கேடு.

அலை...
01-02-2004, 05:46 AM
மூர்த்தியின் ஆழமானக் கருத்தில் இருக்கும் உண்மை சுடத்தான் செய்கிரது...கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி

இளசு
01-02-2004, 11:29 PM
வெட்கக்கேடு!

பாலமுருகன்
02-02-2004, 04:02 AM
மூத்த குடிமகனுக்கே இந்த கதியென்றால்....

மூர்த்தி
02-02-2004, 10:45 AM
*அந்த குஜராத் மெட்ரோபாலிட்டன் நீதிமன்ற நீதிபதியின் பெயர் எம்.எஸ்.பிரகாம்பட்.உச்சநீதிமன்றம் அவரை இடைநீக்கம் செய்யப்பட்டார்!
*அவர் பதவிகள் குறிப்பிடாமல் அப்துல்கலாம்,வி.என்.காரே,வி.பி.சிங்,ஆர்.கே.ஜெயின் ஆகிய நான்கு பேருக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடியாணையைப் பிறப்பித்தார்.இதற்காக அவர் பெற்ற லஞ்சத்தொகை ரூ.40ஆயிரம்!
*லஞ்சம் கொடுத்த மூன்று வழக்கறிஞர்களில் ஹதேஷ் பவானிவாலாவும் ஒருவர்.இவர் சமீபத்தில் அகமதாபாத் கிரிமினல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராகத் தேர்வுசெய்யப் பட்டார்!

*குடியரசுத் தலைவர் உட்பட நான்கு பேருக்கு பிடியாணை பிறப்பிக்க லஞ்சம் கொடுத்த செயலை அகமதாபாத் கிரிமினல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது!

மன்மதன்
02-02-2004, 11:50 AM
இது ஒன்றும் இந்தியாவிற்கு புதிதல்ல.. வரலாறை புரட்டினால் இது மாதிரி நிறைய கிடைக்கும்..
இருந்தாலும் கலாமின் பெயரை தெரியாமல் ஒரு நீதிபதி..அய்யோடா..

lavanya
02-02-2004, 12:35 PM
மக்களுக்கு சரியான நீதி கிடைக்கும் ஒரே இடத்திலும் இப்படி...
பாவம் அஹமதாபாத் மக்கள்...

வெளி தேசம் தெரிந்தால் வெட்க கேடுதான்...

இளசு
02-02-2004, 10:04 PM
இந்த விவகாரத்தால் ஒரு நன்மை..
நம் முதல் குடிமகனின் முழுப்பெயர்
அப்துல் பகீர் ஜெயினாலுதீன் எனத் தெரிந்துகொண்டேன்..

அன்று டெஹல்கா.காம்
இன்று ஜீ நீயூஸ் டி.வி.
நாளையும் வேறு ஒன்று வரும்.

அப்புறம்..? இந்தப்பரபரப்பு எத்தனை நாளைக்குத் தாங்குமாம்?

sara
02-02-2004, 10:34 PM
வெளி தேசம் தெரிந்தால் வெட்க கேடுதான்...

அதெல்லாம் எப்பவோ தெரிஞ்சிருச்சு..:(. கீழே உள்ள சுட்டியைத் தட்டுங்கள்!

http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/3441229.stm (http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/3441229.stm)

gankrish
03-02-2004, 04:02 AM
லஞ்சம் எதுவரை செல்லும் என்பதற்க்கு ஒரு சிறந்த உதாரணம். இதை படிக்கும் போது நாம் அடிக்கடி கேட்கிற ஜோக் ஒன்று ஞாபகத்திற்க்கு வருது.

ஆசிரியர்: ஜனகரின் வில்லை யார் உடைத்தது..
பையன்: சத்தியமா நான் இல்லை சார்.

அது போல் அந்த நீதிபதிக்கு அப்துல் கலாம் பெயரே தெரியாம இருப்பது எவ்வளவு பெரிய விஷயம்.

இளசு
04-02-2004, 01:09 AM
கான்கிரீஷ்...நல்ல நச் கருத்து!

samuthira
05-02-2004, 05:59 AM
குற்றவாளிகளுக்கு கூட பதவி அதிகாரம் அளிக்கும் நமக்கு இதில் என்ன பெரிய அவமானம்.,
சட்டத்தின் ஓட்டைகள் நாளுக்கு நாள் பெரிதாகி வெட்டவெளீச்சம் ஆவது ஒருவகையில் நல்லதானாலும் , திருத்துறதுக்கும் லஞ்சம் குடுக்கணுமே...

Vanambadi
11-02-2004, 06:15 AM
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிமுதல் நியமனம் செய்கின்ற அதிகாரத்தையும், அவர் செய்து வைக்கின்ற பதவிப்பிரமாணங்களையும் பெற்றுகொள்கின்ற நீதிபதிகள் நாட்டின் முதல் குடிமகனுக்கே வேட்டுவைக்கிற அளவுக்கு நம் நீதியின் தரம் பாதாளத்தில் விழுந்துவிட்டது!

அவர் தவறு செய்திருந்து அவருக்கு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால் நம் நீதியின் தரம் மேலோங்கியிருக்கிறது என்று பெருமை கொள்ளலாம்! ஆனால் என்ன காரியத்திற்கு, யாருக்கு கைது உத்தரவு வழங்குகிறோம் என்றெல்லாம் பார்க்காமல் பணத்திற்காக மட்டுமே வழங்குகிறோம் என்றிருப்பதால் இந்த நிலை! இவரை (இந்த நீதிபதி) போன்றோரின் பதவிகள் பணியிடை நீக்கம் மட்டுமின்றி - பணியிலிருந்தே நீக்கினால் தான் மற்றவர்களுக்கும் பயமிருக்கும்!