PDA

View Full Version : காப்பாற்று !



முரளி
23-11-2015, 02:34 AM
காப்பாற்று கடவுளே !எனக்கு கருணை காட்டு
கேசவா மாதவா கோவிந்தா உன்னருள் நீட்டு
கண்ணனின் கதறல் : கரியவன் காதோ செவிடு
கைவளை ஓசை ! கதவு தட் தட்டு !அம்மா அதட்டு !

பள்ளி கொண்டது போதும் கண்ணா எழுந்திரு
பள்ளிக்கு நேரமாச்சு :பர பரவென்றே புறப்படு
பக்கத்து வீட்டு பையன் கூட பறந்து விட்டான்
போகத்தான் வேண்டும் வேண்டாம் வீண் வாதம்

பள்ளிக்கா? மாட்டேன் அம்மா ! போகமாட்டேன் !
புரிந்து கொள் அம்மா !பாடம் சொல் வாத்திகளுக்கும்
பின்னே பசங்களுக்கும் என்னை பிடிக்கவில்லையே
போகத்தான் வேண்டுமெனில் ஏனென்று சொல்?
.
.
.
.
.
.
.

படுத்தாதே கண்ணா ! பள்ளி ஆசிரியரே நீ தான் !


https://external.fmaa1-1.fna.fbcdn.net/safe_image.php?d=AQAbT9a-pJVfBP6Z&w=188&h=188&url=https%3A%2F%2Fencrypted-tbn3.gstatic.com%2Fimages%3Fq%3Dtbn%253AANd9GcR1keR5untjwD4dUZkBMNZLRi2IP3nnidv9VXgUq4Jyf_UYbiAOfQ

(படித்த ஜோக்கின் தழுவல்)

ravisekar
25-11-2015, 02:53 PM
மிக அழகாக தமிழாக்கித் தருவதில் முரளியின் கைவண்ணமே தனி..

முரளி
24-12-2015, 07:25 AM
நன்றி ரவி சேகர் !

ஓவியன்
05-06-2016, 08:42 AM
இத்தகைய ஆசிரியர்கள் இருக்கையில் மாணவர்களைத்தான் காப்பாற்றணும்!

வாழ்த்துகள் முரளி!

முரளி
08-06-2016, 05:06 AM
நன்றி ஓவியன் !