PDA

View Full Version : சொத்து !



முரளி
04-07-2015, 05:42 AM
ஆசுபத்திரியில் அவன்
ஆவி போகும் நேரம்
அருகில் மனைவி மக்கள்
அழகான நர்சும் ஆங்கே

அன்பு கோவிந்தா : அப்பா நீ
ஆரெம்ஸி நகரில் அபார்ட்மென்ட்
இருவதும் இன்றே எடுத்துக் கொள்

ஆசை மகனே !அருகே வா ! சுப்புடு !
அடையாரில் உனக்கு பதினைந்து வீடு
அளித்தேன் அப்படியே உன் ஆசைப்படி

அருமை கடைக் குட்டி நந்தலால் !
அறிவில் சிறந்தவன் நீ ஆதலால்
ஆழ்வார்பேட்டை ஆபீஸ் ஐந்துமுனக்கு

அன்பே ஆருயிரே ! அனிதா ! என் இதர
எல்லா வீடுகளையும் நீயே எடுத்துக் கொள்
இருமினான் நோயாளி! செருமினாள் நர்ஸ் !

ஆச்சரியம் நர்சுக்கு ! அம்பானிக்கும் மேல்
அநியாய பணக்காரரா இவர் ?அடடா!
அறிந்திருந்தால் அமுக்கியிருக்கலாமே!

இவ்வளவு சொத்தா ! என்ன ஒரு பாக்கியம்!
எல்லாம் உங்கள் பூர்வ ஜன்ம புண்ணியம்!
என்னையும் கொஞ்சம் கவனியுங்கள் என்றாள்

எரிந்து விழுந்தாள் மனைவி ! எடு கட்டைய!
எல்லாம் இவன் பால் பாக்கட் போடற வீடு !


(நன்றி Pogo jokes 2013 - முகநூலில் ரசித்ததின் தமிழாக்கம் )

https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcRo8tQm8zbc4xcwTN-kK8SIwZdOrbDySbYTE24tdX_8sQ4y5j3RlA

ravisekar
23-07-2015, 05:44 PM
ஆஹா! அபாரமய்யா. நல்ல ஜோக்கை எதுகை முகனையாய் அழகான கவிதையாக்கியது அபாரம்.

இல்லார்க்கு '' எல்லாம்'' சொந்தம் !!!!????

பாராட்டுக்கள் முரளி.

முரளி
24-07-2015, 04:13 AM
நீங்கள் ரமணி மற்றும் ஜெகதீசன் எழுதிய கவிதைகளை படித்ததில்லையே ! மிக அழகாக இருக்கும்.