PDA

View Full Version : அப்பாவின் ஆஸ்தி



முரளி
09-06-2015, 04:08 AM
அமரராகிவிட்டார் அப்பா ஆனால்
அகலவில்லை அவர் எங்களை விட்டு
அங்கங்கே பிரித்து கொடுத்தார் ஆசையாய்
அவர் இறந்த பின்னும் இருக்கும் சொத்தாய்

அவர் ஆஸ்தி அத்துடன் ஆஸ்துமா என்னிடம்
அவர் முட்டைமுழி முகச்சாயல் என் மகனிடம்
அவர் அறிவு அகச்சாயல் ஆணவப் பேத்தியிடம்
அவர் தம் அழியா பிம்பம் மட்டும் அம்மாவிடம்!

அப்பாவி என்னப்பா! அவரை - அடபாவி மனுஷா
அநியாயாமா எனை அம்போன்னு விட்டாயென
அவர் நினைவை கண்ணீரால் நனைக்காமல்
அனுதினமும் அம்மா உலர்ந்ததேதில்லை !

அவர் நிழலை நிஜமாக நினைந்து அழுதபடி
அவருடன் அளவளாமல் விட்டவளுமில்லை
அவர் எங்கே போனார் எங்களை விட்டு?
அவர் அணுக்கள் எங்களிடம் உள்ள போது!



https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcRwer5Gls7cXd7HQClrWUX3xDbfXqnc512rilaNJ7R1PU4p_6q7

dellas
10-06-2015, 01:54 PM
சிறப்பு முரளி...

முரளி
11-06-2015, 02:24 AM
நன்றி டல்லஸ் !:icon_b:

ravisekar
11-06-2015, 04:50 PM
உணர்வுகளை அழகாய்ச் சொன்ன கவிதை. மரபுச்சங்லியின் கணுக்கள் தொடர்கதைதான் இல்லையா? முரளி அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

முரளி
12-06-2015, 02:49 AM
நன்றி ரவிசேகர் :icon_b:

முரளி
12-06-2015, 02:50 AM
:icon_b: நன்றி சுஜாதா ! நன்றி ரவிசேகர் :icon_b:

"சாவுங்கறதே ஒரு முடிவு இல்லை. ஒரு தொடர்ச்சிதானாம். நம்ம உடம்பில் அறுநூறு கோடி செல் உயிரணுக்கள் இருக்கு. ஒவ்வொரு இருபத்துநாலு மணி நேரமும் அதில ஒரு பகுதி செத்துக்கிட்டே இருக்கு. முப்பது வயசுக்கப்புறம் நம்முடைய மூளை வருஷத்துக்கு ஒரு பர்சென்ட் செத்துக்கிட்டு இருக்காம். கொஞ்சம் கொஞ்சமா, செதில் செதிலா அழிஞ்சுண்டு வர்றோம். அதனால நாம எப்போ சாகறோம். எப்போ உயிரோட இருக்கோம்கிறதே சரியா சொல்ல முடியாது. பிறந்த நிமிஷத்திலிருந்து இறந்து கொண்டே இருக்கோம்…”“அதனால…?”“இறந்து போயிட்டாங்கன்னு சொல்றதில அர்த்தமேயில்லை..”“எப்படி ?”“நம்ம மனசிலே அவங்களைப் பத்திய நினைப்புகள் இருக்கிற வரைக்கும் தே டோன்ட் டை !”- – சுஜாதா சிறுகதையில் படித்தது. என்ன அழகாக சொல்லியிருக்கிறார் !