PDA

View Full Version : கார் காலம் !



முரளி
24-05-2015, 08:34 AM
இந்தியா போல் எங்கும் காணோம்
ஏழை நாட்டில் நடக்காது எதுவும்
எக்கச்சக்க சட்டம் எதற்கும் திட்டம்
ஏமாற்று வேலை பம்மாத்து எல்லாம்

கருப்பு பணம் கையூட்டு கூடவே குப்பை
கொடிய நச்சு சூழல் குடிநீரில் சாக்கடை
கூடும் பணவீக்கம் விவசாயி வேதனை
குண்டும் குழியுமாய் நெடுஞ்சாலை

கொள்ளையர் ஆளும் நொள்ளை நாடிதே
குறை ஒன்றும் இல்லை அவர் பாடுகிறார்
கூசாமல் பொய் கூடையாய் சொல்கிறார்
கோபம் ஆத்திரம் பொத்து கிட்டு வருதே

காரோட்டியின் மனைவி
-----------------------------
எல்லாம் போகட்டும் கதை தேவையில்லை
என்ன சொல்லியும் ஒன்னும் ஆவதில்லை
எதானாலும் சரி! நமக்கு ஒன்னும் பெரிதில்லை
எனது பிரச்னை இப்போ அதுவுமில்லை !


இந்த ரோட்டிலே இல்லியே இடம்!
இத்தனை கார் ! எங்கு நோக்கினும்?
எங்கே வண்டி பார்க் பண்ணுவோம்?
ஆச்சு பார் பார்ட்டிக்கு நேரம் !




http://laugh18.com/wp-content/uploads/2012/07/Fine-for-parking.jpg

ravisekar
25-05-2015, 05:11 PM
பாராட்டுக்கள் முரளி..

பொதுவாய் அங்கலாய்த்து தனக்காய் அட்ஜஸ்ட் செய்யும் சராசரி இந்தியனைப் படம் பிடித்த கவிதை

ravisekar
25-05-2015, 05:12 PM
பாராட்டுக்கள் முரளி.

பொதுவாய் அங்கலாய்த்து தனக்காய் அட்ஜஸ்ட் செய்யும் சராசரி இந்தியனைப் படம் பிடித்த கவிதை

முரளி
13-06-2015, 02:28 AM
நன்றி ரவிசேகர் :icon_b: