PDA

View Full Version : மந்திரவாதி - பாகம் இரண்டு



முரளி
23-05-2015, 04:21 AM
மந்திரவாதி - பாகம் ஒன்று இந்த திரியில் பார்க்க
http://www.tamilmantram.com/vb/showthread.php/32609


பாகம் ஒன்று :

மறைந்தான் மந்திரவாதி மாயமாய்
தெரிந்தான் மீண்டும் தந்திரமாய் – அவன்
தேர்ந்த செயல்திறனை தெரிந்து கொள்ள
தைரியமாக எழுந்து கேட்டான் ஒருவன்

பறைவாய் இம்மன்றத்தில் தெளிவாய்
மறைந்த முறை மறைக்காது பகர்வாய்
சிந்தித்தான் மந்திரவாதி சிறிது நேரம்
செப்புவேன் ஆயின் சிக்கல் உண்டு

செத்து விடுவாய் நீ கேட்டால் ! சம்மதமா ?
சலசலப்பு மன்றமதில் : சளைத்தானா நம் ஆள்?
சிரித்தான் அச்சமின்றி : சரி சொல்
சீக்கிரமாய் ! என் மனைவியிடம் மட்டும் !

அமர்ந்தோரின் ஆர்பரிப்பு அமர்க்களம்!
ஆயிரம் குரல் அங்கே ! அதிர்ந்தது அரங்கம்!
என் சதிக்கு சொல் ! என் பதிக்கும் சொல் !
அடடா ! என்ன ஒரு அவசரம் ! எல்லோருக்கும்!


https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcT7nl4u25heRU3hdqR6Xg6WVJThJEIxwQg9P7t5n4vjlUr4Xl3ctA



... தொடர்ச்சி -மந்திரவாதி - பாகம் இரண்டு

அவை நடுவே அந்த அவை நடுவே
அழுகைக் குரல் சிறுமியின் குரல்
அங்கிள் ! என் அம்மாவுக்கும் சொல்
அரங்கம் அடங்கியது! ஆச்சரியம் அங்கே!

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcSxAv7jTeqxbEs9eF_72jVWWNhYv8pcduw0yrJLkOy5ku0JLBTh

அது ஏன்! அங்கலாயித்தான் மந்திரவாதி
"அம்மா செத்துவிடுவாள் அதுவா வேண்டும் ?"

அழுகை நிறுத்தி சொன்னது அக்குழந்தை
அம்மா தான் செத்து மறைந்தாளே!
அவள் உன் போல் மீண்டும் தெரியனும்
அங்கிள் ! ப்ளீஸ் என் அம்மாவுக்கும் சொல் !


/Inspired by a joke read in Web/

ravisekar
16-08-2015, 05:59 PM
கலங்க வைத்த கவிதை. சிலர் இழப்பைப் பார்க்கும்வேளை இப்படி ஒரு சக்தி தேவை என மனம் தவிக்கும்.

முரளிக்கு பாராட்டுக்கள்

முரளி
13-09-2015, 03:15 AM
நன்றி ரவிசேகர் :icon_b: