PDA

View Full Version : ஆத்திகர்-நாத்திகர்



முரளி
19-05-2015, 02:59 AM
பற்றினை விடு பாசத்தை விடு
பாரம் ஏன் ? ஆண்டவன் தேன் !
ஆசை கொள் : அவனிடம் மட்டும்
அடித்து சொன்னார் ஆத்திகர்

ஆசைப்படு அத்தனையும்! அறிவிலியே !
ஆண்டவனை விடு ! அவனே இல்லையே!
ஆதாரம் எங்கே ?அறிவு கொண்டு அலசு !
அனலாய் ஆணித்தரமாய் நாத்திகர்

விடிய விடிய வாக்கு வாதம்
விடை தான் தெரியவில்லை
வந்ததே ஐயம் சிறந்தது எது?
விடிந்த பின் நடந்தது இது!

பற்றினை விட்டார் நாத்திகர் !
பற்றினார் பாண்டவ தூதனை !
பரமனை விட்டார் ஆத்திகர் !
பற்றினார் டாஸ்மாக் பார்தனை!

மறுநாளும் தொடர்ந்தது வாதம்
மறுபடியும் மாறியது மனங்கள்
தொடர் கதை இது தொக்கியே நிற்கும்
துவக்கமும் இல்லை தொய்வும் இல்லை !


https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcQ0AIR4rLoohkS6VHSEsTu1IN_lrOOqZIOWke3oskDK-zdrpcj7lA


/எங்கோ படித்த ஜோக் ! /

ravisekar
16-08-2015, 03:45 AM
சர்க்கஸ் பாரில் மாறி மாறி தொற்றித்தொங்குவதே மனித மனம்.
எதையாவது சார்ந்து, சாராமல் இருப்பது அன்றி வேறு மார்க்கமில்லை.

குவாண்ட்டம் தியரி போல் பார்க்காதவரை இருக்கும், பார்த்தால் இருக்காது என்ற கதைதான் இதுவும்.
Schrödinger's cat
நாயைக் கண்டால் கல்லைக் காணோம் .. இத்யாதி

முரளிக்கு பாராட்டுக்கள்

Keelai Naadaan
16-08-2015, 06:15 AM
உடலின் அமைப்பும் இயக்கமும்
எண்ணி வியந்தவர் ஆத்திகன் ஆனார்.

பலரின் குணமும் அதன் விளைவும்
கண்டு தவித்தவர் நாத்திகன் ஆனார்.

முரளி
16-08-2015, 10:19 AM
நன்றி ரவிசேகர் ! "Schrödinger's cat"அருமையான உதாரணம். படித்து தெரிந்து கொண்டேன் !. சில நாள் முன்பு, படித்தது நினைவுக்கு வந்தது. ஒரு பூகம்பத்திற்கு பிறகு, அங்கிருந்த ஆத்திகர் சிலர் வேதனையால்வெறுத்துப் போய் " கடவுளே இல்லை" என்று தூற்ற ஆரம்பித்து விட்டார்கள். சில நாத்திகர்கள் " ஆஹா ! இறைவன் இருக்கிறான் ! இல்லாவிடில், எனது குடும்பம் பிழைத்திருக்காது " என்றனராம். :)

முரளி
16-08-2015, 10:24 AM
நன்றி கீழை நாடன் ! அருமையான எண்ணம் !

ravisekar
16-08-2015, 05:56 PM
கீழைநாடனின் எண்ணம் படித்து நானும் ரசித்தேன் முரளி.

உங்கள் ஊக்கமான கருத்துக்கு என் நன்றி முரளி.