PDA

View Full Version : மீண்டு(ம்) முதல்வராகிறார் ஜெயலலிதா

jaffy
11-05-2015, 05:51 AM
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை: நீதிபதி குமாரசாமி அதிரடி தீர்ப்பு!!

மீண்டு(ம்) முதல்வராகிறார் ஜெயலலிதா ??

jaffy
11-05-2015, 05:55 AM
100 கோடி அபராதத்தையும் தள்ளுபடி செய்தார் நீதிபதி குமாரசாமி

சசிகலா, இளவரசி, சுதாகரனும் விடுதலை- அபராதமும் ரத்து

முடக்கப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துக்களை விடுவிக்கவும் நீதிபதி உத்தரவு

குன்ஹா தீர்ப்பு செல்லாது என்று நீதிபதி குமாரசாமி தீர்ப்பு

aren
11-05-2015, 06:16 AM
ஒரு சந்தோஷமான விஷயம், இனிமேல் பொம்மையாட்சி இருக்காது.

jaffy
11-05-2015, 07:46 AM
பவானிசிங் வாதாடியது செல்லாது என்று சுப்ரீம்கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகும், அவருக்கு மாற்றாக யாரும் நேரில் வாதாட முடியவில்லை. இதுதான் ஜெயலலிதா வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாக காரணமாகும் என்று கருதுகிறேன். - அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா

jaffy
11-05-2015, 07:47 AM
தீர்ப்பைக் கேட்டு ஷாக் ஆகி விட்டேன், இருப்பினும் ஜெயலலிதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுக மாட்டேன் - சுப்பிரமணியம் சாமி

jaffy
11-05-2015, 08:03 AM
அன்பழகன் இவ்வளவு போராடியது, அம்மாவை விடுதலை செய்யத்தான் என்று தோன்றுகிறது. அம்மா இல்லாத காரணத்தால், சின்ன சின்னக்கட்சிகள் எல்லாம் ஆட்டம் போட்டன, இனி அது முடியது. அடுத்த தேர்தலில், அதிமுக, திமுக என்ற இரு பெரும் அரசியல் கட்சிகளே களத்தில் பலப்பரிட்சை நடத்தும், என்று தோன்றுகிறது.

அம்மா மீண்டும் முதல்வரானால், அடுத்த தேர்தல் வரை முதல்வர் பதவியை தொடர, 6 மாதத்திற்குள் சட்டசபை உறுப்பினராக வேண்டும். தமிழக சட்ட சபை தேர்தலுக்கு, ஒரு வருட கால அவகாசமே இருக்கும் நிலையில், முன் கூட்டியே தேர்தலை நடத்த அதிமுக முயலும் என்றே தோன்றுகிறது

அமரன்
11-05-2015, 09:35 PM
அறம் தவறியதாகவே அதிகமான பதிவுகள்..
அறம் தழைத்ததாக ஏன் இருக்கக்கூடாது?

தாமரை
12-05-2015, 08:05 AM
கடவுள் இல்லை என்று சொல்லி ஆரம்பிக்கப்பட்ட இயக்கத்தின் பேரக்கட்சி, ஆறுமாதம் இடைவிடாமல் எல்லாகோவில்களிலும் ஆராதனை செய்ததை பார்க்கும்பொழுது

கடவுள் தன் இருப்பைக் காட்டி இருக்கிறார் என்றே தெரிகிறது.

அலாவுதீன் கில்ஜியின் கதை ஞாபகம் வருகிறது, மாலிக்காபூர் காத்திருக்கிறார்

தாமரை
12-05-2015, 08:06 AM

13-05-2015, 07:56 AM
தீர்ப்பில் குறிப்பிட்டு இருக்கும் கணக்கில் பிழை இருக்கிறது என்கிறார்கள். ஆகவே உச்ச நீதி மன்றம் சென்று, தீர்ப்பின் மீது தடை வாங்க வாய்ப்பிருப்பதாக தோன்றுகிறது.

தாமரை
13-05-2015, 08:48 AM
கணக்கில் மட்டுமல்ல வரலாற்றிலும் பிழை உள்ளது.

அதாவது கடனை வருமானமாக காட்டிய நீதிபதி, வட்டியை மட்டுமே செலவீனமாக காட்டி உள்ளார். சம்பந்தப்பட்ட காலத்தில் திருப்பு செலுத்தப்பட்ட அசல் செலவீனமாக காட்டப்படவில்லை. அதனால் சதவிகிதம் இன்னும் அதிகமாகும்.

இன்னொரு பிரச்சனை, பொதுப்பணித் துறையின் மதிப்பீடு ஆறு மடங்கு என்பதை சுட்டிக் காட்டி இருக்கிறார். அதாவது பொதுப்பணித் துறை மீது நீதிபதி குற்றம் கூறியுள்ளார். பொதுப்பணித்துறை மந்திரி இதை ஏற்றுக் கொண்டு இராஜினாமா செய்வாரா? என்ன செய்வார் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.

அதேபோல் தன்னுடைய சொத்து மதிப்பு 2 கோடி என 1991 இல் ஜெயலலிதா வருமானவரித்துறைக்கு காட்டியதை கணக்கில் எடுக்கவில்லை. இதை நிராகரிப்பதாகவும் சொல்லவில்லை.

வளர்ப்பு மகன் என அறிவித்ததும்.... இனி வளர்ப்பு மகன் இல்லை என அறிவித்ததும் ஊரறிந்த உண்மை. அதுமட்டுமல்லாமல், ஊரெங்கும் வரவேற்பு வளைவுகளுக்கு மின்சாரம் திருடிய வழக்கில் 3,00,000 இலட்ச ரூபாய் மின்சாரம் திருடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு அதை அதிமுக கட்சி கட்டிய தீர்ப்பு இருக்கிறது, மின்சார செலவே 3 இலட்ச ரூபாய்.

சுதாகரன் இவரின் வளர்ப்பு மகனும் இல்லை. அதிமுக அடிப்படை உறுப்பினரும் இல்லை என்னும் பட்சத்தில் அதிமுகவினர் அவர் கல்யாணத்திற்கு ஏன் செலவு செய்தனர் என்ற கேள்வி கேட்கப்படவே இல்லை,

சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாற வற்புறுத்தப் பட்டு அதிகார பலம் உபயோகப்படுத்தப்பட்டதால்தான் இந்த வழக்கு கர் நாடகாவிற்கு மாற்றப்பட்டது என்பதால் பிறழ் சாட்சிகள் சொன்னதால் அந்த சாட்சியங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்ற வார்த்தை அர்த்தமிழக்கிறது.

ஆக, தினம் தினம் அரசியல் நடப்புகளை நுணுக்கமாக கவனித்து வரும் ஞாபகசக்தி மிக்கோருக்கு இந்த தீர்ப்பு ஜீரணிக்க இயலாததாகவே இருக்கிறது.

14-05-2015, 08:01 AM
கர்நாடக உயர்நீதின்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் விவகாரம் தொடர்பாக தகுந்த ஆலோசனை வழங்குமாறு ஆச்சார்யாவுக்கு சட்டத்துறை செயலர் சங்கப்பா கடிதம் எழுதியுள்ளார். இந்த ஆலோசனைக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யும் போலிருக்கிறது

aren
14-05-2015, 08:11 AM
இதில் ஏதோ தப்பு நடந்திருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும், ஆகையால் ஏதாவது இந்த மாதிரி வரும் என்று நினைத்தேன். பார்க்கலாம் கர்நாடகா என்ன செய்கிறதென்று.

ஆதவா
15-05-2015, 04:57 AM
ஒருவகையில் நீதிபதி நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறார் என்றே சொல்லலாம். கணக்கை சரி செய்தால் 77 சதவிகிதம் அதிகம் சொத்து சேர்த்ததாகிவிடும் என்பதால் ஜெ. குற்றவாளி என்பது நிரூபணமாகிவிடும். கணக்கு விஷயத்தில் கோட்டை விட்டுட்டார்.... அதே கணக்கு விஷயத்தில் ஜெ.வும் கோட்டையை விட்டுட்டார்..

M.Jagadeesan
15-05-2015, 09:03 AM
கடவுள் இல்லை என்று சொல்லி ஆரம்பிக்கப்பட்ட இயக்கத்தின் பேரக்கட்சி, ஆறுமாதம் இடைவிடாமல் எல்லாகோவில்களிலும் ஆராதனை செய்ததை பார்க்கும்பொழுது

கடவுள் தன் இருப்பைக் காட்டி இருக்கிறார் என்றே தெரிகிறது.

அலாவுதீன் கில்ஜியின் கதை ஞாபகம் வருகிறது, மாலிக்காபூர் காத்திருக்கிறார்

பேரக்கட்சி என்றால் என்ன ?

எந்த ஒரு வேலை நடப்பதற்கும் " பேரம் பேசுகிற கட்சி " என்று பொருள் கொள்ளலாமா ?

கடவுள் தன்னுடைய இருப்பை மட்டும் காட்டவில்லை. ஜெயலலிதாவின் இருப்பையும் காட்டியிருக்கிறார். அதாவது ஜெயலலிதாவின் வருமானத்தில் அதிகப்படியாகச் சேர்த்த ரூ 13,50,00,000 யையும் காட்டியிருக்கிறார்.

jaffy
15-05-2015, 09:37 AM
"ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு மிகுந்த அக்கறை காட்டுவது ஏன் என்பது புரியவில்லை. இந்த வழக்கில் கர்நாடக அரசு அப்பீல் செய்ய கூடாது. ஹைகோர்ட் தீர்ப்பில் தவறு இருப்பது தெரியவந்தால், சுப்ரீம்கோர்ட் தானாக முன்வந்து (சுமூட்டோ) வழக்கை விசாரணைக்கு எடுக்க முடியும். அவ்வாறு விசாரித்துக்கொள்ளட்டும்" - இல. கணேசன்

அமரன்
15-05-2015, 09:50 AM
என்னமோ போங்க.. அம்மையார் விஷயத்தில தமிழகக் கட்சிகள் பல ஒன்றுபட்டு நிற்பது அம்மையாரின் சக்தியைக்காட்டுது. அம்மையார் வெளிய இருந்தால் ஏனையோர் வெளிய வருவது கஷ்டம் போல. அந்த வகையிலும் அம்மையார் பிரம்மிக்க வைக்கிறார்.

jaffy
15-05-2015, 10:37 AM
நாடாலும்ன்ற தேர்தலில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல், 40ற்கு 38 இடங்கள் ஜெய்தாரே அப்போது வந்த பயம் இது. திமுக ஒரு இடம் கூட பெறவில்லை என்றாலும், வாக்கு வங்கியை பொருதவரை அவர்கள் தான் இரண்டாம் இடத்தில் இருந்தார்கள். என்றாலும், தற்பொது கட்சி ஸ்டாலின் கையில் இருப்பதால், நிர்வாகத்தில் பல கோளாறு இருக்கிறது, அதுவே திமுகவின் பலவீனத்திற்கு காரணமாக இருக்கிறது. இந்த சூழலில் அம்மா வெளியே இருந்தால் திமுகவிற்கு பாதகமாக அமையும். அதே போல பிற கட்சிகள் அம்மா இல்லாத சூழலை பயன்படுதி, தம் கட்சியை வளர்க்க முயன்றார்கள். அந்த கனவு மீதும் மண் விழவே எல்லோரும் ஒரே போல துடிக்கிறார்கள்.

ஆதவா
15-05-2015, 02:17 PM
எனக்கு ஜெயலலிதாவைப் பார்த்தால் ஔரங்கசீப் ஞாபகம்தான் வருகிறது. அதிமுகவின் கடைசி சுடர். அதற்குப் பிறகு ஆள ஆளில்லை.... ஆனால் தி.மு.க அப்படியாகாது என்று நினைத்தேன். அதிலும் பல கோளாறுகள் இருக்கின்றன. இதெயெல்லாம் பயன்படுத்தி கருப்பு எம்.ஜி.ஆர் சாதிப்பார் என்றால் அவரும் கிடைப்பதையெல்லாம் தூக்கி அடிக்கிறார்...
தமிழகம் அல்லாடப்போகிறது..

அமரன்
15-05-2015, 02:36 PM
திராவிடர்கழகம்==>திராவிட முன்னேற்றக் கழகம்==> அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

இப்ப சொல்லுங்க பேரக்கட்சி எது?

பேரக்கட்சி என்றால் என்ன ?

எந்த ஒரு வேலை நடப்பதற்கும் " பேரம் பேசுகிற கட்சி " என்று பொருள் கொள்ளலாமா ?

கடவுள் தன்னுடைய இருப்பை மட்டும் காட்டவில்லை. ஜெயலலிதாவின் இருப்பையும் காட்டியிருக்கிறார். அதாவது ஜெயலலிதாவின் வருமானத்தில் அதிகப்படியாகச் சேர்த்த ரூ 13,50,00,000 யையும் காட்டியிருக்கிறார்.

தாமரை
15-05-2015, 02:48 PM
எனக்குத் தெரிந்து இந்த 19 வருட வழக்கில் மிக அக்கறையாக நீதி துலாக்கோலை சரியாகப் பிடித்தவர் நீதிபதி குன்ஹா மட்டுமே.