PDA

View Full Version : சொல்



முரளி
06-05-2015, 05:31 AM
சொல்ல நினைப்பதை சொல்
வெல்லும் சொல் இன்மை அறிந்தே

சொல்லும் சூடான கனலும் ஒன்றே
எறியும் முன் எரித்திடும் கையை
எடுக்கும் முன் எச்சரிக்கை நன்றே

அழகான ஆண்பெண் ஆடை போல
ஆர்வம் தூண்டு ! ஆபாசம் எதற்கு ?
அளவாய் பேசு ! ஆவேசம் எதற்கு ?


https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQhxS3hR1YbT21-XlpPwRtG-1NEWn0ffwfHxRacgIF-NSauK-591A

ravisekar
29-08-2015, 12:06 PM
சொல்வன திருநதச் சொல்லி, விளங்கச் சொல்லி, இனிக்கச் சொல்லி , சுருங்கச் சொல்லி.. சொல்லித்தரணும் அனைவருக்கும்..
நன்றி முரளி

முரளி
09-09-2015, 06:40 AM
நன்றி ரவி சேகர் :icon_b:

சொல்வன திருநதச் சொல்லி, விளங்கச் சொல்லி, இனிக்கச் சொல்லி , சுருங்கச் சொல்லி.. சொல்லித்தரணும் அனைவருக்கும்..

சூப்பர் :icon_good: நீங்கள் சொல்வதை அந்த காலத்திலேயே சொல்வதின் மகிமையை அழகாக நன்னூல் சொல்கிறது.

“சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
நவின்றோர்க்கு இனிமை நல் மொழி புணர்த்தல்
ஓசை உடைமை ஆழம் உடைத்தாதல்
முறையின் வைப்பே உலகம் மலையாமை
விழுமியது பயத்தல் விளங்கு உதாரணத்தது
ஆகுதல் நூலிற்கழகு எனும் பத்தே”

இன்னும் அழகாக குரள் ஒரு குரல் கொடுத்திருக்கிறது : இதை விட வேறு என்ன வேண்டும் ?

சொல்லுக சொல்லைப் பிறிது ஓர் சொல் அச்சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து