PDA

View Full Version : நண்பேண்டா!!!



aren
04-05-2015, 08:02 AM
பணப்பிரச்சனை
யாரிடம் கேட்பது
யாரிடம் கேட்காமல் இருப்பது
எதுவும் தெரியாமல் நான்!!

சொந்தங்களிடம்
கேட்போமா
நண்பர்களிடம்
கேட்போமா
எதுவும் புரியாமல் நான்!!

தைரியம் வந்தது
நண்பனிடம் கேட்டேன்
பணம் கிடைத்தது
பிரச்சனை முடிந்தது!!

பணத்தைத் திருப்பி
கொடுக்க முடியாமல் நான்
பணத்தை திருப்பி
கேட்க முடியாமல் என் நண்பன்
இருதலைக் கொல்லி
எரும்பாக இருவரும்!!

பணம் பறிபோனது நண்பனுக்கு
நட்பு பறிபோனது எனக்கு!!

முடிவெடுத்தேன் நான்
நட்பு முக்கியம் என்று!!

மார்வாடியிடம் வட்டிக்கு
வாங்கினேன் கடன்
வட்டி கட்ட முடியாது
என்று தெரிந்தும்!!

நண்பனிடம் நேராக
சென்று மன்னிப்புடன்
பணத்தைத் திருப்பிக் கொடுத்தேன்
நட்புதான் வேண்டும் என்ற
நினைப்புடன்!!

நண்பன் பணத்தைத்
திருப்பிக்கொடுத்தான்
வட்டிக்கு வாங்கிவந்த பணம்
தனக்கு வேண்டாமென்று!!

உனக்கு எப்படி இது
என்று இழுத்தேன்
பணம் கொடுக்கும்போதே
எனக்குத் தெரியும்
உன்னால் திருப்பிக்
கொடுக்கமுடியாதென்று!!

இந்தப் பணத்தில்
பொருளை மீட்டுவா
நண்பனே என்றான்!!

சந்தோஷத்துடன்
பொருளோடு வந்தான்
கட்டிப்பிடித்தான்
ஆனந்தத்தில்
ஆனந்தக் கண்ணீருடன் நான்!!

நண்பேண்டா!!!!

jaffy
04-05-2015, 09:01 AM
நான் பழகிய மிக அற்புதமான மனிதர்களில், முக்கியமானவர்களில் ஒரு தோழி இந்த நண்பனை போன்றவர். கொடுத்து கொடுத்து கை சிவந்த சீதகாதி அவர். பணம் பெற்ற நண்பர்கள் பலர் எவ்வளவு ஏமாற்றினாலும், உதவும் மனப்பான்மையை இழக்காதவர். உங்கள் கவிதை பாசமிகு தோழியை நினைவுப்படுத்தியது.

வாழ்த்துக்கள் அண்ணா

ravisekar
25-05-2015, 05:16 PM
பாராட்டுக்கள் ஆரென். ஜாஃபியின் நண்பர் போல சிலர் இருப்பதால் மனிதம், நட்பு இன்னும் வாழ்கிறது

aren
26-05-2015, 02:27 AM
நன்றி ஜாஃப்பி மற்றும் ரவி.