PDA

View Full Version : உழைப்பாளிகள் தினம்



Mano.G.
30-04-2015, 12:04 PM
முதுகொடிய உழைத்த உனக்கு நாளை அங்கிகாரம்,
உழைப்பளிகள் தினம்,
உன்னால் வசதிபடைக்க வாழ்பவனுக்கு உனக்கு கொடுக்கப்படும் இந்த அங்கீகாரம் வீண் என தோன்றும்,
எப்போது நிமிர்வாய் தொழிலாளியே,
எத்தனை உழைப்பாளிகள் தினம் வந்தாலும் நீ தொழிலாளியே

அமரன்
30-04-2015, 12:21 PM
உலகில் எல்லாரும் உழைப்பாளிதான்.

முதல் போட்டவர் சும்மா இருந்தால் குத்து விளக்கில் கணக்க்குப் பார்க்க வேண்டியதுதான்.
இலாபம் ஈட்ட அவர் உழைப்பளியாக வேண்டும்.

வேலை செய்வது மட்டும் உழைப்பு அல்ல
வேலை தேடுவதும் உழைப்புத்தான்..

உத்தியோகம் பார்க்காமல்
வீட்டை நிர்வாகம் செய்யும் தாய்மாரை விட
சிறந்த உழைப்பாளி உண்டா?

ஆக,
அனைவரும் உழைப்பாளிதான்
ஊதியம் மட்டும் மாறுபடுகிறது.

நாளை அனைவருக்குமான நாள்..

வாழ்த்துகள்

ஆதவா
30-04-2015, 12:29 PM
இந்த இயற்கையைக் காட்டிலும் பெரிய உழைப்பாளி யார் இருக்க முடியும்? எத்தனை வருடங்கள் தேயத் தேய/ தேயாமல் உழைத்துக் கொண்டேயிருக்கிறது. நாம் இன்னும் பூச்சிகளை உதாரணமாகச் சொல்லுகிறோம். எந்தவொரு உயிரினமும் தனது உழைப்பை இன்னொரு உயிர் மேல் செலுத்தி அதன் பயனை அமர்ந்துகொண்டே அனுபவிப்பதில்லை, மனிதனைத் தவிர.. உழைப்பில் இரண்டே வகைதான். ஒன்று உடல் உழைப்பு, இரண்டாவது மன உழைப்பு... உடல் உழைப்பு மட்டுமே இருந்தவைகள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. மன உழைப்பும் பெற்ற குரங்குகள் மனிதர்கள் ஆனார்கள். இவ்விரண்டு இல்லாமல் இன்னொரு உழைப்பு உண்டு.. அது ஆன்ம உழைப்பு. மரங்களும், செடிகளும், ஐம்பெரும்பூதங்களும் செய்வது அதைத்தான்... மே 1ல் நான் இவைகளையே நினைக்கிறேன், தன்னையே அர்பணிக்கும் ஒவ்வொரு இயற்கை கடவுளரின் உழைப்புக்கும் தலை வணங்குகிறேன்..

----------------
ஒரு நாள் கொண்டாடுவதில் என்ன அங்கீகாரம் இருக்க முடியும் அண்ணா? அது மற்றுமொரு நாள் தான். உழைப்பாளிகளுக்கு அன்றைய நாள் விடுமுறை என்பதைத் தவிர்த்து வேறெந்த வசதியுமில்லை. கவிதை குறிப்பிட்டது போல, வீண் தான்.
ஒருவகையில் பார்த்தால் எல்லாரும் ஒவ்வொரு விதத்தில் முதலாளிகளாக இருந்துவிடுகிறோம். நான் ஒரு முதலாளியாக இருக்கிறேன், ஆனால் எத்தனை பேரை மிதித்திருப்பேன் என்று யோசித்தால் முதலாளிகளே இல்லாமல் போய்விடுவார்கள், தொழிலாளியும் இல்லாமல் போய்விடும். இரண்டுமே தேவைதான்.

செல்வா
30-04-2015, 01:41 PM
அனைவருக்கும் இனிய மேதின வாழ்த்துக்கள்...!

மேதினி என்றால் உலகம்... என்ன ஒரு பொருத்தம். :)