PDA

View Full Version : சொல்லும் ஆடலும்



Santhosh Kumar
28-04-2015, 11:21 PM
எதிலும் இன்றி தவிக்கிறது ஆர்வம்
மதிலும் தோன்றி தடுமாறுகிறது கர்வம்
பதிலும் அன்றி எரிகிறது கோபம்
இதிலும் வெறி மன்றாடுகிறது குழப்பம்.

கேள்விகள் வீசுவோர் கேளிக்கை நாயகர்கள்
கேள்விகள் மறைப்போர் வாடிக்கை ஏமாளிகள்
கேள்விகள் எழுதுவோர் நம்பிக்கை படைப்பாளிகள்
கேள்விக்கே சிரிப்போர் வாழ்க்கை கோமாளிகள்.

இவனென்ன சொல்கிறான் பித்தானா இவன் ?
கருயென்ன உருவாக்குவான் பிரம்மனா இவன்?
எதுயென்ன எழுதுகிறான் கவிஞனா இவன் ?
பொதுவென்று சிந்திக்கிறான் சித்தனா இவன்?

புரிந்ததா படைப்பு ? புரியவில்லையா தொகுப்பு ?
புரியாமல் போகுமோ ?புரிந்தால் நோகுமோ ?
புரிந்து புரியாமல் புனைந்துதென்ன நான் ?
புரியாமலா எழுதியிருப்பேன். புரிகிறதா புலவனே?

-----------------இரா.சந்தோஷ் குமார்

ஆதவா
29-04-2015, 04:35 AM
வாங்க சந்தோஷ் குமார்,
எனக்குப் புரிந்ததோ புரியலயோ, கவிதையில் நிறைய சொற்கள் இருக்கின்றன. புதிதாக ஏதோ ஒன்று இருக்கிறது. அதை புரிந்து கொள்ள நாள் ஆகுமென்று நினைக்கிறேன்.
தொடர்ந்து எழுதுங்கள்.

jaffy
29-04-2015, 05:25 AM
வருக சந்தோஷ் குமார்.

எதுகைகள் அழகாக அடுக்கப்பட்டிருக்கின்றன. சந்தம் சேர எழுத முயன்றிருக்குறீர்கள். வாழ்த்துக்கள்.
தொடர்ந்து நிறைய எழுதுங்கள்

ravisekar
30-08-2015, 06:49 AM
சந்த அழ்கு நன்று சந்தோஷ்குமார். தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

Brawin Jack
01-09-2015, 11:20 AM
அருமை