PDA

View Full Version : நினைவலைகள்



இனியவள்
27-04-2015, 09:46 AM
சிரித்த நிமிடங்கள்
ரசித்த தருணங்கள்
கனவுகளை ஊடுருவி
உயிரினைத் தழுவிய
நினைவலைகள் அனைத்தும்
இன்று - அனு அனுவாய்
உயிரைத் துழைத்தெடுக்கும்
உயிர் கொள்ளியாய்

aren
27-04-2015, 10:10 AM
கைகூடிய நினைவலைகள் அனைத்தும் மனதிற்கு ஆறுதலாக இருக்கும் ஆனால் கைகூடாத நினைவலைகள் அனைத்தும் நெருஞ்சி முட்களாக நம் மனதை குத்தும்.

அமரன்
27-04-2015, 12:42 PM
சிறைப்பிடிக்க முடியாதவற்றை
சிறைப்பிடித்து வைத்திருக்கும்
நினைவலைகள்...!

நிகழ்காலத்தின் நிழல்கள்
உயிருருக்கும் தழல்கள்...!

தொடரட்டும் கவிதைகள்..

ஆதவா
27-04-2015, 01:25 PM
இதுவும் கடந்து போகும்!!

ஓவியன்
28-04-2015, 10:44 AM
இனியவளின் கவிதையைக் கண்டதே இனிமை...!!

என் மேல் சொன்ன வரியே உங்கள் கவி வரிகளுக்குமான பின்னூட்டமாகும் இனியவள்...!!

நல்ல நினைவலைகளில் மூழ்கி,
நல்லதே நினைப்போம்
நல்லதே நடக்கும்..!!

ஆதவா கூறியது போல் “இதுவும் கடந்து போகும்”.

இனியவள்
30-04-2015, 11:41 AM
நிதர்சனமான உண்மை ஆரேன்.. ஆனால் கைகூடியதோ கூடவில்லையோ அது நினைவுகளின் கனத்தை பொருத்தது. சிலருகு சில நினைவுகள் முட்களாய் குத்துவதை விட தென்றலாய் இதயத்தை வருடிச் செல்வதுமுண்டு..!

இனியவள்
30-04-2015, 11:42 AM
கவி வரிகள் அருமை அமரன்.. நன்றி

இனியவள்
30-04-2015, 11:43 AM
நிச்சயமாக, காலம் அதற்கு மருந்தாகக்கூடும்..நன்றி ஆதவா...!

இனியவள்
30-04-2015, 11:45 AM
நன்றி ஓவியன்...!