PDA

View Full Version : ஊடுறுவல்!!!



aren
27-04-2015, 09:18 AM
அவன் கண்கள் ஊடுறுவின
பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியவில்லை
அவனை திட்டவும் முடியவில்லை
அனுமதிக்கவும் முடியவில்லை
பொட்டி பாம்பாகவும் இருக்க முடியவில்லை
பணம் கொடுக்கும் முதலாளியாய்
இருந்தாலும் அவன் ஊடுறுவலை
ஏற்கமுடியவில்லை!!!

வாசலில் துப்பியிருக்கும்
எச்சிலைப் பார்த்தேன்
நான் பார்பதை
அவனும் பார்த்தான்
நான் அவனைப் பார்த்தேன்
என் கண்களை காணமுடியாமல்
அவன் முகம் திருப்பினான்!!!

என் வேலையில் மும்முரமானேன்
சாதித்த சந்தோஷத்துடன்!!!

ஆதவா
27-04-2015, 09:30 AM
நிறைய பெண்கள் வேலைக்கு வந்துவிட்டார்கள், இரவு பகல் பாராமல் உழைக்கிறார்கள். காலம் மாறிக் கொண்டே வருகிறது. ஆனால் ஆங்காங்கு சில இடங்களில் சில்மிஷங்கள் நடக்கத்தான் செய்கிறது. பொதுவாகவே ஆண்களுக்கு வேட்டைநாயின் கண்கள். பெண்களை நன்கு உற்று நோக்குவார்கள். அதில் அவர்கள் தவறு பெரிதாக இருக்காது. ஆனால் நாயின் எச்சில் ஒழுகும் வெறித்தனத்துடனான பார்வைதான் பெண்களிடையே சில்மிஷம் பண்ணத் தோணவைக்கிறது. சுயக்கட்டுப்பாடு மிக அவசியம்,

அவன் கண்கள் ஊடுறிவின” என்பதன் நோக்கம் எதன் பால் என்பதைப் பொறுத்து அவனை எச்சில் உமிழ்ந்து தண்டிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம்.
ஏனெனில் அவளைப் பெற, அவள் மனதை ஊடுறுவ வேண்டியிருக்கிறது.

வாழ்த்துக்கள் அண்ணா,
மீண்டும் கவிதைகள் எழுதத் துவங்கிவிட்டீர்கள்!
ஒரு எனர்ஜி ஏறிக் கொண்டேயிருக்கிறது மன்றத்தில்..

aren
27-04-2015, 10:12 AM
நன்றி ஆதவா. எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம் என்று மன்றத்தில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இருந்தாலும் ஏதாவது எழுதலாமே என்ற ஆசை சில சமயங்களில் இப்படி எழுத வைக்கிறது.

தாமரை
27-04-2015, 12:20 PM
அப்போ எச்சில் துப்பி வைப்பது நல்லதுதான் என்று சொல்கிறீர்கள்..

அமரன்
27-04-2015, 12:35 PM
முழுமையான மாற்ரம் வரும் வரை. இந்த மாதிரிக் கவிதைகள் தேவைதான்.
ஆதவாவின் பார்வையும் நன்று.

வாழ்த்துகள் ஆரென் அண்ணா

அமரன்
27-04-2015, 12:37 PM
அப்போ எச்சில் துப்பி வைப்பது நல்லதுதான் என்று சொல்கிறீர்கள்..

முந்தி எங்கள் ஆச்சி மண்நிரப்பிய் ஒரு ஏதனம் வைச்சு எச்சில் துப்பிட்டு இருப்பார். அது இதுக்குத்தானா?

தாமரை
27-04-2015, 12:40 PM
பல நேரங்களில் இந்தப் பார்வைகளுக்கு காரணம் தேடியதுண்டு.

இதன் காரணம் வெறும் பாலுணர்ச்சி அல்ல.

புணர்வே பெண்ணை ஆளும் வகை என மனதில் இறுகிப் போன ஆளுமை உணர்வு.

இதைத் தண்டனைகளால் திருத்த முடிவது இல்லை. காரணம் தன் ஆளுமையைக் காட்ட மேலும் அதிக வக்கிரத்தை நாடிச் செல்லும் மனது.

இதைத் திருத்த மனோதத்துவ வல்லுனர்களே நல்ல வழி தர வேண்டும்.

M.Jagadeesan
27-04-2015, 01:50 PM
எச்சிலுக்குப் பதிலாக " செருப்பு " என்று எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் . அலுவலக வாசலில் யாரும் எச்சில் துப்பமாட்டார்கள் . மற்றபடி கவிதையின் கருத்து மிகவும் நன்று .

jaffy
29-04-2015, 05:45 AM
//வாசலில் துப்பியிருக்கும்
எச்சிலைப் பார்த்தேன்//

வக்கிரக்காரர்களின் பார்வைகள் உண்டாக்கும் அருவருப்பை இதை விட அழகாக சொல்ல முடியாது.

வேலைக்கு செல்லும் பெண்கள் நாளும் சந்திக்கும் வேதனை மிக்க அவலம் இது. இவ்வளவும் கடந்து வேலைக்கு சென்று வீடு திரும்பினாலும், பெரும்பாலான பெண்களுக்கு வீட்டிலும் நிம்மதி வாய்ப்பதில்லை. இதை எல்லாம் பெரிதாக பார்த்தால் எங்கே வேலையை விட்டுவிடுவாளோ என்று சில கணவர்கள் எல்லாம் அறிந்து அறியாதது போலவே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட கணவர்கள் என்னை பொருத்தவரை இன்னும் கேவலமானவர்கள்.

வாழ்த்துக்கள் அண்ணா.

தாமரை அண்ணாவின் பின்னூட்டக் கருத்தை வாசிக்கும் போது நிர்பயா குற்றவாளி சமீபத்தில் கொடுத்த பேட்டி நினைவுக்கு வந்தது.