PDA

View Full Version : காலத்தின் மாற்றம்!



தாமரை
24-04-2015, 02:18 PM
மண்ணாய் போகட்டும் என்பது
வாழ்த்தா? திட்டா?

மரம் மாதிரி நிற்கிறான்
என்பது பாராட்டா?
இகழ்வா?

பணம் தண்ணீராய் செலவாகிறது
என்பது ஆனந்தமா?
ஆதங்கமா?

நாம் கீழானதாக
நினைத்த பலவும்
ஆய்ந்து பார்த்தால்
உயர்ந்து நிற்கின்றன
இன்று,,,

மனிதன்
இந்த நுட்பத்தை உணர்ந்தால்
மனிதனாகலாம்

ஓவியன்
25-04-2015, 04:41 PM
மண், மரம், நீர் மூன்றும் இன்று பொன் தானே..!!

இதுபோல, நாயே எனவும் திட்டுவார்கள்...
நாய்மனிதரிலும் எத்தனை மடங்கு மேலான பிராணி..!!

அமரன்
25-04-2015, 11:06 PM
பல இடங்களில் இந்த ஓட்டம் எனக்குள்ளும் நிகழ்ந்திருக்கிறது.
அருமை அறியாதவர்கள் என்ற விசனம் சுமந்து கடந்திருக்கிறேன்.
தேவையான கருத்து.

கவிதையில் மண், மரம் வரிசையில் நீர் கொஞ்சம் விலகி நிற்பதாக உணர்கிறேன்.

M.Jagadeesan
26-04-2015, 09:30 AM
ஒதியமரம் மாதிரி நிற்கிறான் என்றால் இகழ்ச்சி !

செம்மரம் மாதிரி நிற்கின்றான் என்றால் பாராட்டு !

ravisekar
03-08-2015, 05:12 PM
நிலவொளி, சூரியவெப்பம், காற்று இவையும் மனிதரின் பயன்பாட்டு தளத்தில் , பார்வையில் மாறலாம்.

திட்டுவோர் மட்டுமன்றி, கவிஞர் கூட கவனம் வைக்கணும்.

தாமரைக்கு பாராட்டுக்கள்.