PDA

View Full Version : பானை!!!

தாமரை
18-04-2015, 09:44 AM
சுட்டவனாய் இருந்தாலும்
அவனுக்குத் நான் தருவது
சில்லென்ற நீர்தான்.

முரளி
20-04-2015, 07:01 AM
சுட்டவனாய் இருந்தாலும்
சொர்க்கம் காட்டும் சுட்ட அப்பளம்
பசி நேரத்தில் பிசி பேளாவுடன்!

https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTUX7MBWP4FbOx4F6qxDnMMPzfFM4YCnlflkw6Ze9AYkOs2ZVg9OA

ஓவியன்
20-04-2015, 09:58 AM
களிமண்ணை பானையாக்கிய நன்றிக் கடன் போலும்....!!

கீதம்
21-04-2015, 02:14 AM
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு

களிமண்ணுக்கும் யார் கற்றுத்தந்தார் குறள்?

ஓவியன்
21-04-2015, 05:50 AM
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு

களிமண்ணுக்கும் யார் கற்றுத்தந்தார் குறள்?

அக்கா இன்னும் ஒன்றுள்ளதே....

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண: நன் நயம் செய்து விடல்"

M.Jagadeesan
21-04-2015, 08:04 AM
இதுபோன்ற ஹைக்கூ கவிதைகள் சட்டென்று உள்ளத்தில் தைத்துவிடுகின்றன . பாராட்டுக்கள் தாமரை !

செல்வா
21-04-2015, 04:06 PM
ஓவியனின் கேள்வியே எனக்குள்ளும்.
களிமண்ணைப் பானையாக்குதல் இன்னாவாக எப்படியானது மக்களே?

சுட்டால்தான் பானை தட்டினால் தான் தங்கம். இவற்றை இன்னாவெனக்கொள்ளலாமா?

கீதம்
22-04-2015, 05:56 AM
ஓவியனின் கேள்வியே எனக்குள்ளும்.
களிமண்ணைப் பானையாக்குதல் இன்னாவாக எப்படியானது மக்களே?

சுட்டால்தான் பானை தட்டினால் தான் தங்கம். இவற்றை இன்னாவெனக்கொள்ளலாமா?

சுட்டவனுக்குத் தருகிறேன் சில்லென்ற நீர் என்றிருந்தால் இன்னாவென்ற எண்ணம் எழுந்திருக்கவாய்ப்பில்லை. சுட்டவனாய் இருந்தாலும்... என்று உம் சேர்க்கும்போது அப்படித் தோன்றுகிறது.

அமரன்
22-04-2015, 07:21 AM
அண்ணன் தன் தொப்பையைச் சொல்றாரப்பா..

அதை வெச்சு யார் கிண்டலடிச்சாலும் அண்ணன் அதை எல்லாம் மனசுல வெச்சுக்காம அவங்களுக்கு நன்மைதான் செய்வாராம்..

செல்வா
22-04-2015, 10:52 AM
அண்ணன் தன் தொப்பையைச் சொல்றாரப்பா..

அப்டின்னா சில்லென்ற நீர் ? ?

யாரும் அடிக்க வரதுக்குள்ள செல்வா ... எஸ்கேப்.

செல்வா
22-04-2015, 10:57 AM
சுட்டவனுக்குத் தருகிறேன் சில்லென்ற நீர் என்றிருந்தால் இன்னாவென்ற எண்ணம் எழுந்திருக்கவாய்ப்பில்லை. சுட்டவனாய் இருந்தாலும்... என்று உம் சேர்க்கும்போது அப்படித் தோன்றுகிறது.

அதெப்படி ஒத்துக்க முடியும். பானை என்ற தலைப்பு. அப்படின்னா பானை சொல்றதாத்தான் இருக்கு. என்னென்ன கேள்விகள் வருது.
பானைய சுட்டால் என்னாகும்?
எதால சுட்டா?
நெருப்பால ?
துப்பாக்கியால ?

உடைந்த பானை எப்படி தண்ணீர் தரும் ?

குழப்பமான உதாரணத்த பிடிச்சிருக்கிறதால கவிதைய ஏத்துக்க முடியாது (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே .... எக்கோ ...)

நெற்றிக்கண் திறக்கிறதுக்குள்ள செல்வா எஸ்கேப்....:icon_ush:

சிவா.ஜி
22-04-2015, 02:36 PM
பானைன்னு சொன்னாலே நெருப்பால சுடறதுதான்...செல்வாவுக்கு தோட்டா ஏன் ஞாபகம் வரனும்?

பென்ஸ்
22-04-2015, 05:35 PM
பானை
சுட்டவன் வாங்கியவன்
என்று பாகுபாடு பார்ப்பதில்லை...

கவிதை கருத்து நன்று...
நண்பர்களின் அலசல் கவிதையை இனிமையாக்குகிறது...

அமரன்
22-04-2015, 09:20 PM
இன்னா செய்தாரை சுட்டும் கவிதையாக தோன்றவில்லை..

எந்நிலையும் எவருக்காகவும் "இயல்பு" மாற்றாமல் இருக்கும் இயல்பை சொல்லும் கவிதையாகவே புரிகிறது எனக்கு..

இயலாத ஒன்றல்ல.

தாமரை
23-04-2015, 02:35 AM
மண்பானை சுட்டவனுக்கும் குளிர்ந்த நீர் தரும் மற்றவனுக்கும் குளிர்ந்த நீர் தரும். "உம்" அப்படின்னு இருக்கும் கீதாக்கா, இனிமே சிரிக்கலாமா?

தாமரை
23-04-2015, 02:40 AM
அதெப்படி ஒத்துக்க முடியும். பானை என்ற தலைப்பு. அப்படின்னா பானை சொல்றதாத்தான் இருக்கு. என்னென்ன கேள்விகள் வருது.
பானைய சுட்டால் என்னாகும்?
எதால சுட்டா?
நெருப்பால ?
துப்பாக்கியால ?

உடைந்த பானை எப்படி தண்ணீர் தரும் ?

குழப்பமான உதாரணத்த பிடிச்சிருக்கிறதால கவிதைய ஏத்துக்க முடியாது (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே .... எக்கோ ...)

நெற்றிக்கண் திறக்கிறதுக்குள்ள செல்வா எஸ்கேப்....:icon_ush:

பானை - பா- நஹி - அதாவது பாட்டு இல்லைன்னு தலைப்பை எடுத்துக்கோயேன். நீ ஏன் உன் மூளையால செய்ததை மட்டுமே எடுத்துக்கற?

யார் தமிழ் நாட்டுக்கு வந்தாலும் நாங்க ஜில்லுன்னு குளிர்ந்த நீர் குடிக்கக் குடுத்துதானே வரவேற்போம். சுட்டவனா இருந்தாலும்... அது மீனவர்களைச் சுடுகிற சிங்களச் சிப்பாயா இருந்தாலும் சரி, மரம்வெட்டிகளைச் சுடுகிற ஆந்திரா போலீஸா இருந்தாலும் சரி..