PDA

View Full Version : வெண்பா எழுதும் முயற்சி - பிழை திருத்தம் வேண்டுதல்



arun karthik
12-04-2015, 03:01 AM
மன்ற நண்பர்களுக்கு வணக்கம்.

என் திருமண அழைப்பிதழில் அச்சிட, ஒரு வெண்பா எழுத முயன்றுள்ளேன். எனக்கு மிக அடிப்படையான இலக்கண அறிவே உள்ளது.
இதில் ஏதேனும் பிழை இருப்பின், திருத்தி உதவுங்கள்.

"பொன்னெழிலாள் இதழுதிரும் புன்னகையும் நிலைபெறவே
மன்னனவன் இன்னலின்றி மகிழ்வுடனே வாழ்ந்திடவே
இந்திரனும் ஈஸ்வரனும் இவர்களினும் பெருமக்கள்
வந்திருந்து வாழ்த்தருளிச் செல்க..."

இது நேரிசை வெண்பா ஆகும்.
முதல் மூன்று அடிகளும் நந்நான்கு சீர்களும்,
இறுதி அடி மூன்று சீர்களும்,
ஒவ்வொன்றும் காய்ச் சீராகவும் (இறுதிச் சீர் மட்டும் நாள் மலர் காசு பிறப்பு எனும் அடிப்படியில் உள்ளது),
முதல் இரண்டாம் அடிகள் மற்றும் மூன்றாம் நான்காம் அடிகளில் முதற்சீர் எதுகையும்
ஒவ்வொரு அடியிலும் முதற்சீரும் மூன்றாம் சீரும் மோனையாக
பெற்று அமைத்துள்ளேன்...

பொருள் மிகவும் நேரடியாகவே அமைந்துள்ளது..

இதில் பிழை இருப்பின் கோபம் கொள்ள வேண்டாம்.
பிழை திருத்தம் செய்து உதவுங்கள்.

நன்றி..

ரமணி
13-04-2015, 03:11 AM
உங்கள் வெண்பாவில் தளைதட்டுகிறது, பல இடங்களில். அத்துடன்
ஈற்றுச்சீர் வாய்பாடில் இல்லை. அதை இப்படி எழுதலாம்:

பொன்னெழிலாள் வாயுதிரும் புன்னகையும் தங்கிடவே
மன்னனிவன் இன்னலின்றி மாண்புடனே வாழ்ந்திடவே
இந்திரனும் ஈஸ்வரனும் இன்னுமெங்கள் சுற்றநட்பும்
வந்திருந்து வாழ்த்தியருள் வீர்.

ரமணி

M.Jagadeesan
13-04-2015, 09:48 AM
பொன்னொத்த வண்ணத்தாள்; புன்னகையின் சின்னத்தாள்
மன்னனிவன் கைப்பிடிக்கும் நன்னாளில்- அன்புடையீர் !
இந்திரனும் ஈஸ்வரனும் இன்னுமுள சுற்றமுடன்
வந்திருந்து தந்திடுவீர் வாழ்த்து.

தாமரை
23-04-2015, 04:01 AM
இது நல்ல முயற்சி, நமது இல்ல அழைப்பிதழ்கள் போன்றவற்றில் தமிழ் பாக்கள் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

தக்கசமயத்தில் உதவிய இரமணி மற்றும் ஜெகதீசன் ஆகியோருக்கு நன்றி

அமரன்
23-04-2015, 09:51 PM
பாராட்டத்தக்க முயற்சி.

செல்வா
25-04-2015, 11:37 AM
இத்தோடு நின்றுவிடாமல் மேலும் மேலும் தொடரட்டும் உங்கள் முயற்சிகள்.

arun karthik
26-04-2015, 02:18 AM
அனைவருக்கும் நன்றிகள். ரமணி ஐயா மற்றும் சகதீசன் ஐயாவின் உதவிக்கு நன்றி. நான் இன்னும் நிறைய கற்க வேண்டும்..