PDA

View Full Version : வெளிநாட்டில் நான் ...



ஷேக் முஹைதீன்
04-04-2015, 04:20 PM
உயிரை
உறவுகளிடம்
ஒப்படைத்துவிட்டு ஓடிவந்துருக்கிறேன்
என் உடலை மட்டும் எடுத்துக்கொண்டு..

வெளிநாடு
வெளிப்பார்வைக்கு தேன்கூடு:

பிரிவில்
பிழியப்பட்டுதென்னவோ நான்தான்!!

கருவறையும் சில மாதத்து சிறை!

மீண்டும் நான்
மீண்டு வரஇயலாத
ஆயுள்சிறை
அரபு வாழ்க்கை!!

எத்தனை மலைகள்
கடல்கள்;

என் தூரமான துயரம்
இத்தனை நீளமா??


வாழ்வை சல்லடையில் சலித்தப்பிறகு
தேங்கியவை பிரிவு

நாஞ்சில் த.க.ஜெய்
04-04-2015, 04:31 PM
துயரங்கள் வரினும் பிரிவுகள் தூரமாயினும் பணம் பண்ணும் வாழ்வு இதனை மறக்கடித்துவிடுகிறது..தொடரட்டும்..

M.Jagadeesan
05-04-2015, 08:36 AM
இக்கரைக்கு அக்கரை பச்சை என்று
...இயம்பினர் தமிழகத்து முன்னோர் அன்று !
சக்கரை என்றெண்ணி அக்கரை செல்கின்றார் !
...சாறாய்ப் பிழிந்தங்கே வேலை வாங்குகிறார் !
எக்கரை என்றாலும் இக்கரைக்கு ஈடாமோ ?
...எடுபிடியாய் இருந்தாலும் நம்மூரில் இருந்திடுவோம் !
துக்கங்கள் துயரங்கள் இருந்தாலும் கைப்பிடித்த
...துணையுடனே மக்களுடன் வாழ்வதுவே பேரின்பம் !