PDA

View Full Version : பணம் படுத்தும் பாடு



முரளி
21-03-2015, 03:39 AM
தோழன் இருந்தான் காசும் இருந்தது :icon_b::icon_b:
கடனாய் கேட்டான் கொடுத்தேன் காசு
காலம் கழிந்தது காணோம் அவனை
கண்டேன் ஒருநாள் கேட்டேன் கடனை
காசும் தோழனும் இழந்தேன் அன்றே :icon_p::icon_p:

ஆதவா
21-04-2015, 07:53 AM
இதை எங்கோ படித்திருக்கிறேன்..
எழுதியது நீங்கள்தான் என்றால் வாழ்த்துக்கள்.

முரளி
21-04-2015, 09:18 AM
எனது நண்பர் ஒருவர் முகநூலில் அவரது முகநூல் நண்பர்கள் பணம் கேட்டது பற்றியும் அது இல்லை என்று இவர் மறுத்தவுடன், அவர்கள் நட்பை தவிர்த்து காணாமல் போனதாகவும் சொல்லி ஒரு ஆங்கில கோட் ஒட்டியிருந்தார். ஒரு மாதம் முன்பு. அதன் கருத்து என்னை பாதித்ததால், அதை உடனே தமிழ் படுத்தி அவர்க்கு அனுப்பினேன். அந்த கிறுக்கலின் பிரதி தான் இங்கே பதிவானது.



இதை எங்கோ படித்திருக்கிறேன்..
எழுதியது நீங்கள்தான் என்றால் வாழ்த்துக்கள்.

நீங்கள் பெரிய படிப்பாளி என அறிவித்தமைக்கு வாழ்த்துக்கள் !

முரளி
21-04-2015, 09:21 AM
:):) மத்தவங்க எழுதினதை காபி அடிச்சு எழுத எனக்கு கொஞ்சமும் பிடிக்காது. அதை நான் சுத்தமாக வெறுக்கிறேன். :):)

இதை பற்றி நானே ஒரு கதையாக எழுத ஆவல். மற்ற எழுத்தாளர்கள், என்ன எழுதியிருக்காங்க என்று படித்து விட்டு வந்து பிறகு எழுதுகிறேன். :icon_b::):). அப்புறம் வாழ்த்துங்கள் !

ஆதவா
23-04-2015, 10:52 AM
நீங்கள் பெரிய படிப்பாளி என அறிவித்தமைக்கு வாழ்த்துக்கள் !


இதெல்லாம் என்ன காலேஜிலா படிப்பாங்க?
எங்காவது வாட்ஸப்பிலோ ஃபேஸ்புக்கிலோ படித்திருப்போம்.
அவ்வளவுதான்.

முரளி
24-04-2015, 02:19 AM
நல்லது ! உங்களை போல் நான்கு பேர் இருந்தால் போதும், வேண்டாம் நீங்கள் ஒருவரே போதும், விளங்கிடும் ! பின்னூட்டம் எழுத தெரியாது புண்ணூட்டம் எழுதியதற்கு வருத்தம் கூட தெரிவிக்க மனதில்லாத உங்களுக்கு மகுடம் வேறு.

தாமரை
24-04-2015, 02:50 AM
கடனே என்றுதான் நட்புகொண்டிருந்தாய்
புரிந்து கொண்டேன்
கடனுடன் நீ
காணாமல் போன பின்பு!

உலகத்தில் இது எங்கெங்கும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த அனுபவம் எல்லோருக்கும் உண்டு..

கருத்து பழையது என்பதால்
கவிதை பழையதாகி விடாது
காதலைப் போல!!!

முரளி
24-04-2015, 02:59 AM
நன்றி தாமரை ! உங்கள் கவிதை அழகு !

ஆதவா
24-04-2015, 06:20 AM
நல்லது ! உங்களை போல் நான்கு பேர் இருந்தால் போதும், வேண்டாம் நீங்கள் ஒருவரே போதும், விளங்கிடும் ! பின்னூட்டம் எழுத தெரியாது புண்ணூட்டம் எழுதியதற்கு வருத்தம் கூட தெரிவிக்க மனதில்லாத உங்களுக்கு மகுடம் வேறு.

மன்னிக்கவும், உங்கள் கருத்தில் இருந்த அரசியலைக் கண்டுகொள்ளவில்லை,

//இதை எங்கோ படித்திருக்கிறேன்..
எழுதியது நீங்கள்தான் என்றால் வாழ்த்துக்கள்.//

//நீங்கள் பெரிய படிப்பாளி என அறிவித்தமைக்கு வாழ்த்துக்கள் !///

///இதெல்லாம் என்ன காலேஜிலா படிப்பாங்க?
எங்காவது வாட்ஸப்பிலோ ஃபேஸ்புக்கிலோ படித்திருப்போம்.
அவ்வளவுதான். ////

இந்த பின்னூட்டங்கள் உங்கள் மனதைப் புண்படுத்தியது என்றால்
கண்டிப்பாக நான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை,
நீங்கள் இன்னும் நன்றாக எழுத வேண்டும்,
பொதுவெளியில் ஒரு படைப்புக்கான கருத்தையோ விமர்சனத்தையோ எதிர்நோக்கும்பொழுது அதற்கான எதிர்வினையை எதிர்கொள்ள நீங்கள் ஆயத்தமாக வேண்டும்,

அன்புடன்
ஆதவா.

முரளி
24-04-2015, 06:58 AM
தேவையேயில்லை. !