PDA

View Full Version : எங்கள் தமிழ்மகள்- கவிதை



விஜயகுமார் வேல்முருகன்
18-03-2015, 07:38 PM
எங்கள் தமிழ்மகள்
~~~~~~~~~~~~~
அன்புகாட்டும் மங்கையும் அவள்
பொங்கிவரும் கங்கையும் அவள்
குணமதிலாவாள் தங்கமும் அவள்
குணகேடரை சீறும் சிங்கமும் அவள்
தென்றலைப்போல சாந்தமும் அவள்
கடலலையைப்போல சீற்றமும் அவள்

குலமதை காக்கும் குணமகளும் அவள்
கலைகளை வளர்க்கும்
கலைமகளும் அவள்

அடிப்பினை எரிக்க சுள்ளியையும் ஏந்துபவள்
அறியாமையைப் போக்க
கொள்ளியையும் ஏந்துபவள்

தரித்திரம் போக்கும் திருமகளும்மவள்
சரித்திரம் படைக்கும் அருள்மகளும்மவள்
சாஸ்திரம் உடைக்கும் பெருமகளும் அவள்
பாத்திறன் படைக்கும் கவிமகளும் அவள்

ஆன்றோரை போற்றும் அரும்மகள் அவள் -தமிழ்
சான்றோரை வணங்கும் எங்கள்
தமிழ்மகள் அவள்...

விஜயகுமார் வேல்முருகன்

jaffy
29-04-2015, 05:33 AM
//கலைகளை வளர்க்கும்
கலைமகளும் அவள்//

அழகு.

தொடர்ந்து எழுதுங்கள் விஜயகுமார்

அமரன்
29-04-2015, 12:12 PM
யாதுமாகி நிற்பவள் தமிழ்.

கமகமக்கிறது.

ஆதவா
29-04-2015, 02:44 PM
இப்பல்லாம் தமிழ்மகளை சீண்ட வெட்கப்படுகிறார்களே விஜயகுமார்?

தமிழுக்கு கவிதை என்றாலே அதில் ஒரு அழகு வந்துவிடுகிறது இல்லையா??

தொடருங்கள்!

Bknagini Karuppasamy
04-05-2015, 05:02 AM
மிக அருமை! தொடரட்டும் தமிழ் இலக்கியப் பயணம்! வாழ்த்துகள் தம்பி..

விஜயகுமார் வேல்முருகன்
04-05-2015, 05:39 AM
நன்றி நாகினி அக்கா. உங்கள் உறுதுணை என்றும்
எனக்கு உள்ளவரை என்றும் ஏற்றமே எனக்கு..

விஜயகுமார் வேல்முருகன்
04-05-2015, 05:51 AM
//கலைகளை வளர்க்கும்
கலைமகளும் அவள்//

அழகு.

தொடர்ந்து எழுதுங்கள் விஜயகுமார்

நன்றி நண்பரே jaffy தங்களைப் போன்றோர்
ஊக்கமிருந்தாலே போதும்
பா ஆக்கம் ஊற்றெடுக்கும் என்னுள்ளே

விஜயகுமார் வேல்முருகன்
04-05-2015, 05:54 AM
//கலைகளை வளர்க்கும்
கலைமகளும் அவள்//

அழகு.

தொடர்ந்து எழுதுங்கள் விஜயகுமார்

நன்றி நண்பரே jaffy தங்களைப் போன்றோர்
ஊக்கமிருந்தாலே போதும்
பா ஆக்கம் ஊற்றெடுக்கும் என்னுள்ளே

விஜயகுமார் வேல்முருகன்
04-05-2015, 05:59 AM
மிக அருமை! தொடரட்டும் தமிழ் இலக்கியப் பயணம்! வாழ்த்துகள் தம்பி..

நன்றி நாகினி அக்கா. உங்கள் உறுதுணை என்றும்
எனக்கு உள்ளவரை என்றும் ஏற்றமே எனக்கு..