PDA

View Full Version : ஈன்ற பொழுதின்..



முரளி
04-03-2015, 01:47 AM
தாயின் புலம்பல் தோழியிடம் :

இவனைப்பெற, வேண்டி அழுதேன் அன்று
இவனைப் பெற்றேனே, அழுகிறேன் இன்று


வேலைக்கு போக மாட்டானாம்
வீணாய் அடிமை ஆகானாம்
சொந்த தொழிலும் வேண்டாமாம் அது
சூனியம் கொள்வது போல்தானாம்

சும்மா சோம்பி அலைகின்றான்
சொகுசாய் சுகமே தேடுகிறான்
படித்தவன் பகுத்தே பேசுகிறான்
எதிர்த்தால் சினந்து ஏசுகிறான்

ஏதுமிலை ஜோலி குடிப்பதே ஜாலி
இருந்த வீடு நகை எல்லாம் காலி
ஏகமாய் கொடுத்து விட்டான் எனக்கே
ஏக்கம் இதயநோய் அல்சர் எல்லாமே

இதுதானடி என் சோகக் கதை
ஏன்தானோ இந்த சித்ரவதை
என்ன செய்ய என் மகன் உய்ய
ஏதேனும் வழி சொல்வாயா தோழி நீ ?


தொடரும் ... :sprachlos020: முதல் கிறுக்கல் :

முரளி
05-03-2015, 03:01 AM
ஈன்ற பொழுதின்..2 தொடர்ச்சி )
--------------------------


தோழியின் சொல் :


பறந்திடுமே கவலை தோழி
மறைந்திடுமே உந்தன் வலி
மனதினில் உறுதி கொள் - மகன்
மாறிடுவான் ஒரு நாள்

குறை உன்னிடமில்லை- மகன்
குறை தீர்க்க மருந்துமில்லை
குறையற்ற மனிதர் யாருமிலை
குறைத்திடுவாயே குமுறலை

வாழும் வழி வழுக்கினான் விடு
வயதின் கோளாறு வினையாகாது
விருப்பம் போல் நடக்கிறவன் போக்கு
வெந்து விம்முவதால் அது மாறாது

வளர்ந்த மகன் உன் பையன் - நீ
வருந்தி மட்டும் என்ன பயன் ?
விடியும் நிச்சயம் ஒருநாள் வருவான்
விதிப்படி விடு ! வேறு வேலை எடு !


நன்றி :
https://s-media-cache-ak0.pinimg.com/736x/c4/4d/46/c44d46dbca533b256b96789bf2c7212e.jpg

ஓவியன்
22-04-2015, 02:47 AM
காலத்தினை விட நல்ல ஒரு மருந்து இதற்கு உண்டோ?
காலம், நிச்சயமாக பாடம் கற்றுக் கொடுக்கும் எல்லோருக்கும்!


சந்தம் அழகாக அமையப் பெற்ற உங்கள் கவிதைகள் அருமை முரளி!
தொடர்ந்து நிறைய எழுதுங்க!

M.Jagadeesan
24-04-2015, 06:01 AM
தோழியின் சொல்
===================
வளர்த்தவிதம் சரியில்லை தோழி ! - ஒரு
...வானரத்தை மகனாகப் பெற்றாய் !
இளகிய நெஞ்சுனக்கு வேண்டாம் ! - அவனை
...இரும்புக் கரங்கொண்டு அடக்கு !

வேலைசெய்ய மறுத்தால் தோழி ! - ஒரு
...வேளைகூட சோறுபோட வேண்டாம் !
வேலைசெய்து வருகின்ற பணத்தில் - கால்
...வயிற்றுக்குக் கூழெனினும் அமிர்தம் !


குடித்துவிட்டு வருகின்ற போதில் - தெருக்
...கதவை நீ சாத்திடுவாய் தோழி !
படிக்கின்ற வயதினிலே தோழி - அவனைப்
...பாழாக்கி விட்டது இக்குடிதான் !

கால்கட்டு அவனுக்கு வேண்டாம் - சொந்தக்
...காலிலே நிற்கின்ற வரையில்
வேல்கொண்ட முருகனை வேண்டி - நித்தம்
...விளக்கேற்றி வைத்திடுவாய் தோழி

முரளி
24-04-2015, 08:12 AM
அருமை ! மிக அழகு ! அம்மாவை ஆசிரியர் போல் நடந்து கொள்ள அறிவுரை. முடியுமா அம்மாவால் ? முயன்று பார்க்கட்டும் ! நல்ல கருத்து. நன்றி ஜெகதீசன் !

சொல்லி பார்த்தேன் . அவள் பதில் இது !


தாயின் குமுறல் ( கொஞ்சம் வொரியிங் டைப் போல !)
---------------------------------------------------------------------------

சொல்லி விட்டாய் எளிதாய் நீ தோழி
சோகம் தீர ஒரு வழி தெள்ளியதாய்
காசே இல்லை அவனிடம் இதில்
கால் கட்டுக்கு நான் எங்கே போவேன்

வீட்டுக்கே வருவதில்லை என் மகன்
இதில் சாத்துவதேங்கே கதவை இங்கு
இரும்புக்கரம் கொண்டு அடக்க ஆசைதான்
என்னை விட்டே எகிறிவிட்டால் என் செய்ய

எதுவும் புரியவில்லை தோழி
ஏனிந்த வாழ்க்கை தெரியவில்லை !
சொன்ன படி முருகன் தான் காக்க வேண்டும் !
சுகமாய் அவன் வாழ வழி வேண்டும் !

***