PDA

View Full Version : நதிநேசன் - தென்பாண்டி தூறல்- கச்சேரி ஆரம்பம்



nathinesan
01-12-2014, 12:26 PM
கச்சேரி ஆரம்பம்
=========
களை கட்டியது - இது
கலை மாதம்
திசையெங்கும் இசைபாடும்
திசுக்கள் டிசம்பரில் ...

மார்கழி திங்களில்
மாறாத நல்லிசை
கலை சந்து பொந்தெல்லாம்
கர்நாடக கானா கச்'சேரி'...

பட்டுப் புடவைகளில்
பளபளக்கும் தாளங்கள் ..
ரகம் ரகமாய் ராகங்கள்
பலமாய் பக்க மேளங்கள் ..
அரசியல் பாடாத
அழகான சபாக்கள் ..
இடையிடையே இனிதாக்க
பவனி வரும் "பவன்"கள் ..

ஏழு ஸ்வரங்களில்
எட்டு லட்சம் கீதங்கள் ..
தப்பு தாளம் போட்ட படி
தலையசைக்கும் தனவான்கள்...

கச்சேரி ஆரம்பம்
காரணம்..இது கலை மாதம்!!

நதிநேசன்

ஜான்
06-02-2015, 02:15 PM
பன்னிரண்டு கோடி தமிழ் மக்களில் எத்தனை ஆயிரம் பேருக்கு கர்நாடக சங்கீதம் தெரியும்?

ravisekar
28-07-2015, 02:23 AM
மார்கழி (கவி)க்கோலம் அழகாய் வரைந்த நதிநேசனுக்குப் பாராட்டுக்கள்.