PDA

View Full Version : நதிநேசன் தென்பாண்டி தூறல்-ஞாயிறுக்கும் உண்டோ சனி ?



nathinesan
30-11-2014, 01:13 AM
சூரியனுக்கும் சோம்பல்...
மேகப் போர்வைக்குள்ளிருந்து
மெதுவாக பள்ளி எழுந்து
பனித்துளி புல்லில் பல்துலக்கி
தாவர பச்சையில்
தாமதமாய் பசியாறி ...
கடல் தொடுவானில் நீராடி
மலைமுகட்டில் தலைசீவி
ஆற்றங்கரையில் நீர் ஆவிபறக்க
காபி குடித்த பின்...
மதிய உணவிற்கு நிலத்தை சுட்டு
வாயு வாய் ஆனவற்றை வாய்ப்பு
கிடைக்கும் போதெல்லாம்
பலவாய் உண்டு, அந்த
மயக்கத்தை மறைக்க
மதிய வானில் மஞ்சளாய் உருண்டு
இரவில் நிலவின் மடியில்
இருண்டு உறங்கும், ...
ஞாயிற்றுக்கும் உண்டோ சனி?

நதிநேசன்

ravisekar
29-07-2015, 06:06 PM
ஞாயிறுக்கும் உண்டு '' மடி''.

அழகிய இயற்கையை அதைவிட அழகிய பார்வையால் பதிந்த நதிநேசனுக்குப் பாராட்டுக்கள்.