PDA

View Full Version : நதிநேசன் - தென்பாண்டி தூறல்-புதிர் நீச்சல்



nathinesan
26-11-2014, 12:17 PM
புதிர் நீச்சல்
=======
மறைந்திருக்கும் இறைவனை போற்றுவது மறையா
கலையாத ஆற்றலை நாம் அழைப்பது கலையா? !!
கடல் கரைக்காத மண்ணின் பெயரென்ன கரையா !
அலையாத கடலுக்குள் அடங்குவதா அலையா ?-
ஆறாத தாகத்தை ஆற்றுவது ஆறா !-
பார்க்காத இடம் மிகுந்த உலகம் தான் பாரா ?
பொய்யான உடலுக்கு உகந்த பெயர் மெய்யா ?
புதிர் நீச்சல் போட்டால் புரிந்திடுமோ ஐயா !!

--நதிநேசன்

ravisekar
16-08-2015, 04:41 AM
மறைபொருள் விதைத்ததால் க-விதையா?

நதிநேசனுக்கு பாராட்டுக்கள்