PDA

View Full Version : எனக்கென்று ஒரு நாள் வரும்...



arun karthik
22-11-2014, 06:24 PM
எனக்கென்று ஒரு நாள் வரும்...
என் பேச்சுகள் பொன்மொழிகளாகும்,
என் எழுத்துகள் கவிதைகளாகும்,
என் நடை உலகின் பாதையாகும்,
என் அசைவுகளால் ஆகாயநடுக்கம் வரும்..http://cdn.shopify.com/s/files/1/0239/0935/files/increase-confidence.jpg?2874.

தங்கங்கள் என் அங்கங்களில்
கிடக்கத் தவம் செய்யும்..
செல்வங்கள் பிச்சை கேட்டு
வீட்டு வாசல் தேடி வரும்..

என் கரங்கள் வரங்களாகும்,
என் கோபங்கள் சாபங்களாகும்,
நான் தொட்ட சாம்பல் கூட
கொல்லிநோய்களைத் தீர்க்கும்,

ஏசிய வாய்களும் அடைத்துப்
பேசாது போகும் - தூற்றிய
மண்ணின் ஒவ்வொரு துகளும்
மன்னிப்பு கேட்டு மன்றாடும்..

எந்நாள் என்று தெரியாத,
அந்நாள் வருமென்ற நம்பிக்கையிலேதான்
இந்நாள் உறக்கம்
என்னால் விதைக்கப்படுகிறது,
கட்டாந் தரையில் கூட...

ரமணி
23-11-2014, 03:40 AM
அந்நாள் வரும்போது 'என்' என்பதே இருக்காதே! கற்பனை நன்று.
ரமணி

arun karthik
23-11-2014, 07:49 AM
நன்றிகள் ரமணி ஐயா....