PDA

View Full Version : நகரத்து காலை



பாவூர் பாண்டி
14-11-2014, 02:05 AM
முகில்கள் அற்ற
தெளிவான வானில்
இதுகாறும் மறையா
முழுநிலவு
அதையொட்டி சிறகு விரித்த
கரும்புறா
வாகன இரைச்சலில்
தேம்பி அழும் குளிர் தென்றல்
தெளிவற்ற மனநிலையில்
போக்குவரத்து சமிக்ஞை
பிறந்த குழந்தையின்
பிசுபிசுப்பு இவன் கைகளில்
முழுமைபெற காத்திருக்கும்
நகரத்து காலை

Mano60
12-12-2014, 09:13 AM
ஒரு நகரத்தில் விடியும் காலையின் இயற்கை வர்ணனை அருமை.

முரளி
03-03-2015, 11:04 AM
நன்று !

ravisekar
09-08-2015, 07:37 PM
கரும்புறா.. இய்ற்கை நிறமா? இல்லை மாசுக்காற்றாலா?

குழந்தை பிசுபிசுப்பு புரியவில்லை.

பாவூர் பாண்டி விளக்கினால் நன்றியுடன் கேட்டிடுவேன்.