PDA

View Full Version : எவ்வளவு நஷ்டம்? IAS தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி



lenram80
12-11-2014, 07:32 PM
ஒருத்தி ரூ 1000 நோட்டை கொடுத்து கடைக் காரரிடம் ரூ 200 மதிப்புள்ள பொருளை வாங்குகிறாள். கடைக்காரரிடம் சில்லரை இல்லாததால் அவர் பக்கத்து கடையில் கொடுத்து சில்லரை வாங்கி வந்து, மீதி ரூ 800 மற்றும் ரூ 200 மதிப்புள்ள பொருளை அவளிடம் கொடுத்தார். அவள் சென்று விட்ட பிறகு, பக்கத்து கடைக்காரர் வந்து 'நீ கொடுத்த 1000 நோட்டு போலி நோட்டு."என்று சொல்லி தான் கொடுத்த பணத்தை திருப்பி வாங்கி விட்டார்.

(ரூ 200 பொருளை எந்த லாபமும் இல்லாமல் அதன் அடக்க விலைக்கே விற்றார் என்று வைத்துக் கொள்ளவும்)

ஆக, கடைக்காரர் எவ்வளவு நஷ்டம் அடைந்தார்?
a) 1000
b)1200
c)1800
d)2000
e)800
f)200

(இது IAS தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி)

dellas
17-11-2014, 05:58 AM
கடைக்காரர் பெற்றுக்கொண்டது கள்ள நோட்டு.

பக்கத்து கடைக்காரருக்கு சில்லறைக்கு பெற்றுக்கொண்டு 1000 ருபாய் கொடுத்தார். அதில் நஷ்டமில்லை.

எனவே 800 ருபாய் + 200 மதிப்புள்ள பொருள் = 1000 ருபாய் நஷ்டம்.

lenram80
18-11-2014, 02:40 PM
கடைக்காரர் பெற்றுக்கொண்டது கள்ள நோட்டு.

பக்கத்து கடைக்காரருக்கு சில்லறைக்கு பெற்றுக்கொண்டு 1000 ருபாய் கொடுத்தார். அதில் நஷ்டமில்லை.

எனவே 800 ருபாய் + 200 மதிப்புள்ள பொருள் = 1000 ருபாய் நஷ்டம்.

எப்படி நஷ்டம் இல்லை இல்லை என்று சொல்கிறீர்கள்?

அந்த 1000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டு என்றால், அந்த நோட்டுக்கு மதிப்பே இல்லை. எனவே.. கடைக்காரர் பெற்றது 1000 ரூ கடன் (சில்லைரையாக பெற்றது). சரியா?

இப்போது சரியான விடையை சொல்லுங்கள்!

dellas
19-11-2014, 06:06 AM
சரி உங்கள் கோணத்திலே பார்க்கலாம்.

பக்கத்து கடைக்காரருக்கு லாபம் உண்டா? இல்லை. ஆயிரம் ரூபாய்க்கு அவர் சில்லறை கொடுத்தார். அதற்காக வேறு ஆயிரம் ருபாய் பெற்றுக்கொண்டார்.

இப்போது கள்ள நோட்டு உரியவரிடமே சேர்ந்து விட்டது.

பக்கத்து கடைக்காரருக்கு லாபம் இல்லை என்றால். அவரால் முதல் கடைக்காரருக்கு மட்டும் எப்படி நஷ்டம் ஆகும்.?

நீங்கள் முதல் கடைக்காரர் சில்லரையாக பெற்ற ஆயிரம் ரூபாயை மறந்து விட்டீர்கள்.

1. முதல் கடைக்காரருக்கு வரவு = சில்லறை 1000 + கள்ளநோட்டு 0 ருபாய். = 1000 ருபாய்.

2. செலவு = பக்கத்து கடைக்காரருக்கு கொடுத்த 1000 + அவளுக்கு கொடுத்த 800 + 200 ருபாய் பொருள். = 2000 ருபாய்.

எனவே 1000 - 2000 = -1000

நஷ்டம் 1000 ருபாய். சரியா.

sarcharan
19-11-2014, 07:05 AM
1800 ருபாய் + 200 மதிப்புள்ள பொருள் = 2000 ருபாய்

800 ருபாய் + 200 மதிப்புள்ள பொருள் + பக்கத்து கடைக்காரருக்கு கொடுத்த 1000 ருபாய்

dellas
19-11-2014, 07:19 AM
அப்போ பக்கத்து கடைக்காரரிடமிருந்து பெற்ற 1000 ருபாய் கணக்கில் இல்லையா?

dellas
19-11-2014, 07:24 AM
அந்த பெண் 1000 ருபாய் கள்ள நோட்டு கொடுக்கவில்லை என்றால் யாருக்குமே நஷ்டம் இல்லை . அப்படித்தானே.

அப்படி என்றால். கொடுக்கப்பட்டது 1000 ருபாய் கள்ள நோட்டு . எனவே கண்டிப்பாக அந்த கள்ள நோட்டிற்கான மதிப்பு மட்டும்தான் நஷ்டமாக முடியும். அதற்குமேல் என்ன வர முடியும்.?

lenram80
19-11-2014, 12:59 PM
பக்கத்து கடைக்காரருக்கு லாபம் உண்டா? இல்லை. ஆயிரம் ரூபாய்க்கு அவர் சில்லறை கொடுத்தார். அதற்காக வேறு ஆயிரம் ருபாய் பெற்றுக்கொண்டார்.?

கேள்வியை மீண்டும் நன்றாகப் படியுங்கள். கடைகாரரிடம் ஏற்கனவே 1000 ரூபாய் சில்லரை இருந்திருந்தால், எதற்கு போய் சில்லரையை பக்கத்து கடைக்காரரிடம் வாங்கவேண்டும்? அவரிடம் பணமே இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அவர் அவளிடம் கொடுத்த 800 போய், இப்பொது 200ரூ தான் கையில் இருந்திருக்க முடியும். எனவே அவர், பக்கத்தவரிடம் திருப்பிக் கொடுத்தது 200 ரூபாயாகத் தானே இருந்திருக்க முடியும்.

ஆக, 800ரூ கடன் இன்னும் உள்ளது. இது போக, அவளிடம் ஏமாந்தது 800 +200. ஆக மொத்தம் 1800.

என்ன இது விடை சரியா?

dellas
20-11-2014, 05:35 AM
1800 கடைக்காரருக்கு நஷ்டம் என்றே கொள்வோம். அப்படியானால் 1800 ருபாய் லாபமடைந்தது யார்.?

lenram80
20-11-2014, 12:44 PM
1800 கடைக்காரருக்கு நஷ்டம் என்றே கொள்வோம். அப்படியானால் 1800 ருபாய் லாபமடைந்தது யார்.?

ஒரு தள்ளுவண்டி காரர் 10 ரூயாய்க்கு வாழைப்பழம் வாக்க்கி விற்கலாம் என்று இருந்தார். ஒருவரும் வாங்கவில்லை. அத்தனை பழங்களும் அழுகி விட்டது. இதில் இவருக்கு நஷ்டம் ரூ 10. லாபம் யாருக்கும் இல்லை.

ஆக
ஒருவர் நஷ்டப்பட்டால், இன்னொருவர் லாபம் அடைந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

dellas
23-11-2014, 04:34 AM
இங்கே எந்த பொருளும் அழுகவில்லை. எதையும் தூர வீசவும் இல்லை. அப்படி இருக்க, வரவுக்கும் செலவுக்கும் சமநிலை இல்லையே !!!

அப்படியானால் நீங்கள் சொன்ன கணக்கும,. கேட்ட கேள்வியும் சரியாக இல்லை என்றுதான் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.

dellas
23-11-2014, 05:39 AM
https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=9284276e69&view=fimg&th=149db651d397d27a&attid=0.1&disp=emb&realattid=ii_149db63a92b125e6&attbid=ANGjdJ915AP0rnS1r0A2LHBnq9_QXMp2Q0tMIp9Btq4fng36x0ajVCnTYUPNqz0_xSA3qVGcUBGbT0o2_Bh1C70PZ7UgIjmXVYe4IT1l0FH9zDj6Ilw7plYHeK-pcVw&sz=w912-h470&ats=1416725079227&rm=149db651d397d27a&zw&atsh=1

aren
16-12-2014, 08:24 AM
நஷ்டம் 1000 மட்டுமே. அந்தப் பெண் சரியான செல்லும் ஆயிரம் ரூபாயைக் கொடுத்திருந்தால் யாருக்கும் நஷ்டம் இல்லை யாருக்கும் லாபம் இல்லை, இது சரிதானே. அப்படியானால் அந்த செல்லாத காசு மட்டுமே நஷ்டம். ஆகையால் கடைக்காரருக்கு 1000 ரூபாய் மட்டுமே நஷ்டம். (800/- ரூபாய் ரொக்கமாகவும், 200/- ரூபாய் பொருளாகவும் மொத்தம் 1000/- ரூபாய் கடைக்காரருக்கு நஷ்டம்)