PDA

View Full Version : கரிக்கோல்



பாவூர் பாண்டி
28-10-2014, 06:55 PM
இன்று ஒரு உருவத்திற்கு
வடிவம் கொடுத்தாக வேண்டிய
கட்டாயத்தில் அமர்ந்ததால்
எனது கரிக்கோலின் நுனி
சிதறி கிடக்கிறது
சிதறல்களை
ஒருங்கிணைத்த வேளை
சின்னஞ்சிறிய பல உருவங்கள்
தன்னைத் தானே
காட்சிப் படுத்தியதில்
எனது உருவமும்
இல்லாமல் இல்லை....

ravisekar
06-09-2015, 06:32 PM
பிறரில் நம்மின் சிறுதுளி காணலாம் என்கிறீர்களா?

எண்ணம், செயலிலா?

அறிவியல்படி கார்பன் அணுவியல்படி நம் ஒவ்வொருவரிலும் ஹிட்லர், காந்தியின் சிறு கார்பன் ( கரி) அணு இருக்கும் என்கிறார்கள்.