PDA

View Full Version : புலன்களை ஒட்டிப்பார்க்கிறேன்



பாவூர் பாண்டி
27-10-2014, 07:27 PM
ஒவ்வொரு

கதையும் கவிதையும்

வாசிக்கப்படும் பொழுதுகளில்

அதனதன் எழுத்துக்களுக்கு

ஏற்ற வடிவங் கொணர்ந்து

வேறு வேறு

உருவங்கள் வந்து

உருண்டோடும் மனதில்..

கடந்த

சில வாரங்களில்

வந்து போகும்

உருவத்தில் ஏனோ

காதும் கண்ணும்

மூக்கும் உதடும்

தொலைந்து போயிருந்ததால்..

சமயங்களில் புத்தகத்தின்

முகத்தை மூடிவிட்டு

உருவத்திற்கு அதன் புலன்களை

ஒட்டிப் பார்க்கும்

விருப்பில்

கரைந்து போகிறேன்...

ravisekar
21-07-2015, 02:21 PM
பாவூர் பாண்டி அவர்களுக்குப் பாராட்டுக்கள். இட்டு நிரப்பி முழுமை காண்பதும், தற்குறிப்பேற்றி சுயம் மகிழ்வதும் மானுட இயல்பு.
வாசிப்பவனாகவும் படைப்பாளியாகவும் அம்மனிதன் இருந்துவிட்டால் புலன் அடக்கம் இயலாததே.. அருமையான கருத்துக்கு பாராட்டுக்கள்.