PDA

View Full Version : என்ன செய்ய முடியும்..... இந்த நினைவுகளை..



பாவூர் பாண்டி
27-10-2014, 08:26 PM
என்ன செய்ய முடியும்..... இந்த நினைவுகளை..

பெயருக்குப் பின்

எழுத்தாகவோ எண்ணாகவோ

உருமாற்றிக் கொள்ள முடியும்..

நாட்குறிப்பில் எழுதி

பின்

அடையாளத்தோடு கிழித்தெறிய முடியும்..

கண் துஞ்சும் நேரம்

கனவுகள் செய்ய முடியும்..

தேவையற்ற மின்னஞ்சல் முகவரிக்கு

கடவுச் சொல்லாக்கி மறக்க முடியும்..

புனைக்கதைகளில் மாந்தராக்கி

நடமாட விட முடியும்..

கவிதையின் மென் வார்த்தைகளில்

நுழைத்திட முடியும்..

மதுப்புட்டியில் போடப்படும்

பனிக்கட்டியில்

உருக்கிவிட முடியும்...

காலையில் கண்புரை

கழுவும் நீரில்

கரைத்து விட முடியும்...

கசங்கிய காகிதத்தில் நிரப்பி

குப்பையிலும் எரிந்துவிட முடியும்...

ravisekar
16-08-2015, 07:01 PM
இப்படி மன்றத்தில் ஏற்றி படிப்பவர் மனதுக்குக் கடத்தி பதியன் போடவும் முடியும்.

பாவூர் பாண்டிக்கு பாராட்டுக்கள்