PDA

View Full Version : இன்றும் ஒருநாள் அவ்வளவே



பாவூர் பாண்டி
27-10-2014, 08:25 PM
மஞ்சள்நீர் தெளிக்கப்பட்ட

கடையின் முன்வாசல்..

நீரை உறுஞ்சும் காக்கை

அழைத்துக் கொண்டது

தன் உறவுளை..

தென்னங்கீற்றில்

பரவிக் கிடக்கும்

சிகப்புமஞ்சள் சூரியனின்

கீற்றுகள்..

அலைபேசியின் அழைப்பில்

அகச்சிணுங்கல்கள்..

இவைகளுக்கிடையே

அழிக்கப்பட்ட குயில்களின்

கேட்காத ஓசைகள்..

இன்றும்

உண்டியாக நெகிழிப்பைகளை

உண்ணும் இந்த மாடுகள்...

ravisekar
13-08-2015, 12:59 PM
செல்போன் டவர் அதிர்வலைகள் = குருவிகள் அழிவு

நெகிழிப்பை (பிளாஸ்டிக்) உண்ணல் = விலங்குகள் மரிப்பு

பிரக்ஞை ஏற்றும் கவிதை

பாவூராருக்கு பாராட்டுக்கள்