PDA

View Full Version : இன்னுயிரும் பிழைத்திருக்கும்...



arun karthik
22-10-2014, 05:26 PM
பிணையொத்த நடை
கோணல்விற் புருவம்
மதியொத்த வதனம்
மலர்கொண்ட தேகம்

காரொத்த கூந்தல்
நேர்க்கொண்ட நோக்கம்
தேன்கொண்ட வன்சொல்
தேவமிர்த மென்றோள்

இவையொன்றாவது பிழையின்
இன்னுயிருமினிதே பிழைத்திருக்கும் !!!

ravisekar
11-08-2015, 12:10 PM
தேன் குடத்தில் வீழ்ந்த வண்டு தேனில் இனிப்பு குறைவாய் இருந்திருந்தால் நான் பிழைத்திருந்திருப்பேன் எனச் சொல்லலாமா?

அப்படி பிழைத்திருப்பதைவிட இந்த இனிப்புச்சாவே மேலல்லவா?

அருண்கார்த்திக்கு பாராட்டுக்கள்.