PDA

View Full Version : மனம் வென்றாய் கர்ணா -1



arun karthik
18-10-2014, 02:45 PM
குந்தியின் புதல்வனாய்
மண்ணில் நீ உதித்த போது, தந்தை
கதிரவனும் ஒளிபெற்றான், உந்தன்
கவசத்தில் அவன் நிறைந்தான்...

ஆர்ப்பரிக்காத் தாயவளும் ,உன்னை
அர்ப்பணித்தாள் ஆற்றுக்கு,
உன்பொற்கரங்கள் நனைத்ததினால் அந்த
யமுனையும் சற்று புனிதமுற்றாள்...

தவம்செய்து காத்திருந்த புனிதர்கள் ,
நினை வரமென்று பெற்றார்கள்..
ராதாவும் நின் மாதாவானாள்..
கதிரவனின் குழந்தைக்கு,
அதிரதனும் அப்பனானான்...

சாரதியின் மகவானாலும்,
சத்ரியனாய் திறங்கொண்டாய்..
காண்டீபக் கலையதனில்
கைதேர்ந்து மறங்கொண்டாய்...

வில்லாற்றல் மேம்படவே
துரோணரிடம் போய்நின்றாய், அவர்
சொல்லாற்றல் முன் தோற்றாய், இருந்தும்
சுயம்புவாய் எழுந்து நின்றாய்...

பொய்யுரைத்துப் பயின்றாலும்
பரசுராமர் மனம்வென்றாய்..
பிரம்மாத்திர பானத்தால்
வரமுடன் சாபங்கண்டாய்...

திரௌபதியும் இகழ்ந்தனள்
துரோணரும் இகழ்ந்தனன்
ஊரோடு சேர்ந்து
உலகமும் இகழ்ந்தது...

மகிழ்வேயில்லை கர்ணா நினக்கு
மகிழ்வேயில்லை - உலகமது
இகழ்ந்தே கொன்றது கர்ணா, குலத்தால்
இழிந்தே கொன்றது...

நல்லோரெனப் பகன்றோரும்
விரியனாய்க் கொத்த,
பொல்லாதவன் ஆயினும்,
துரியனுனைக் காத்தான்...

- தொடரும்...

ravisekar
21-07-2015, 02:26 PM
மிக் அழகாய் எழுத வருகிறது உங்களுக்கு. பாராட்டுக்கள் அருண் கார்த்திக்.

இதிகாசத்தை அநாயசமாய் சொல்லும் வாக்குவளம் . சபாஷ்!

தொடருங்கள்.

( பானம் - பருகுவது; பாணம் - அம்பு)