PDA

View Full Version : மீண்டும் சிரிக்க மணமில்லை...



kulirthazhal
15-10-2014, 12:16 PM
ஒரு
தேவதையை
தொலைத்ததாய் தேடுகிறான்..
பேரலையில் சிக்கி அழும்
கட்டுமரம்போல.....

எட்டிவிடுவான்
அவளை ...

வானம் முழுக்க
தேவதையென்றாலும்,
கட்டுமரத்துக்கு
சிறகுகள் முளைக்குமெனில்....?

எண்ணங்கள்
காற்றில் மிதந்தாலும்,
உடலை விட்டு
உயிர் பிரியுமெனில்....?

அவளை
தேடிக்களைத்த மணம்
ஓய்ந்து கிடந்தது
பாத்த்திற்கு கீழே..
உலகமே படுக்கையானபின்
நடக்க விழைவேது ..

அளவாய் சிரித்து
குறைவாய் பேசி
முழுதாய் கொன்றதால்
உறவுகள் களைத்தபின்
சித்தனென்பார்கள்...
பித்தனென்பார்கள்...
உலக பேச்சுக்களின் அசுரத்தனம்...

ஒருநாள் சிரித்தான்
உண்மையாக ..
அவள்
எங்கோ இருக்கிறாள்...

மீண்டும் சிரிக்க
மணமில்லை...

பைத்தியமென்றார்கள்
பேசாமல் கிடந்தால்..
சோம்பேரி என்றார்கள்
படுத்துக்கிடந்தால்..
உலகத்துடன்
தோல்வியில்லை..
பிச்சைகாரனில்லை..

நடந்துகொண்டே இருக்கிறான் ..

தேவதைகளை தேடவில்லை
தேவைகளை தேடவில்லை
பந்தங்களை தேடவில்லை
பாதைகளையும் தேடவில்லை ...

போகும் வழியெங்கும்
ஞானியாகிவிட்டான்..
குறுநிழலில் குடும்பம் அமைத்து
நிம்மதிக்காய்
கடவுளை தேடும்
சம்சாரிகளிடையே.....

நிற்கவும் தோன்றவில்லை ..
பேசவும் ஆசையில்லை ...

இனி பயணங்களில்
ஒளிந்துகொள்ளவும்
இடம் கிடைக்கப்போவதில்லை...

அவள் கிடைத்தாலும்,
கனிந்து அனைத்தாளும்.......

வசீகரன்
25-11-2014, 10:55 AM
குறுநிழலில் குடும்பம் அமைத்து
நிம்மதிக்காய்
கடவுளை தேடும்
சம்சாரிகளிடையே.....


வீரிய வரிகள்...
அற்புதமான வரிகளின் கவிதை!

ravisekar
03-11-2015, 11:29 AM
மனம்?
மணம்?

ஒன்று நெஞ்சு, நினைவு
ஒன்று வாசம் , கல்யாணம்

எதைச் சொல்றீங்க தலைப்பில் குளிர்தழல்.?
காதல் தோல்வி கவிதை என்ற வகையில் சொல் அமைப்பில் விறு விறு. பாராட்டுக்கள்.