PDA

View Full Version : சிகப்பு வண்ண புடவைக்காரிvc43497
01-10-2014, 01:45 PM
அவளை முதலில் கவனிக்க வில்லை.
லட்சுமி ரோடும், பீஜா பாய் ரோடும் இணையும் இடத்தில்தான் பார்த்தேன். ஐம்பது வயது இருக்கும். மிகவும் தளர்ந்து இருந்தாள்.
சாப்...என்ற குரல் எனக்கு முதலில் கேட்ககவில்லை. ஹிந்தி தெரியாததினால், யாரையோ அழைப்பதாக எண்ணி கொண்டேன் .
இருட்டில் ஒரு பெண் என்பது மட்டும் தான் தெரிந்தது. கட்டிய புடவை சிகப்பு .வண்ணம். இருட்டிலும் நன்றாக தெரிந்தது.
ஓரடி முன்னால் வந்து, வெளிச்சத்தில் வந்தாள்.
கொஞ்சம் வாங்க என்று அழைப்பது மாதிரி இருந்தது.
என்ன....ச்...க்யா
தேமிலா...என்றாள்.....அந்த தமிழ் மிக புதுமையாக இருந்தது
. ஆமாம்.....
வரீங்களா..
நான்....அப்படிப்பட்டவன் இல்லை. விட்டுட்டுங்க
என்று சொல்வதார்க்கு பதில்,
நீங்களும் தமிழா...எங்க என்றேன்...
இங்கதான்...ஒரு மணி நேரம் இருநூறு ரூபாய்...என்றாள்.
நான் முடியாது என்று சொல்லி இருந்தால், அதை விட குறைவான தொகைக்கு சம்மதித்து இருப்பாள் என்று தோன்றியது.
பணம் பிரச்சனை இல்லை என்றேன். உடனே மலர்ந்தாள்
வாங்க என் பின்னாடி என்றாள்....
பூனா நகரம் எனக்கு முற்றிலும் புதிய நகரம். அந்த இருட்டான சந்தில் சில சாக்கடைகள் கடந்து அந்த பழய லாட்ஜை அடைந்தோம்.
கேள்வி கேட்காமல், உள்ளே அனுமதித்தார்கள்.
சுண்ணாம்பு சாயம் போன அறை. , உடைந்து போய் இருந்த மின்விசிறி. மண் பானையில் குடிநீர்.
நீங்களும் தேமிலா ....என்ன ஊரு....என்று மீண்டும் கேட்டாள்.
சென்னை
வேலை விஷயமா வந்தீங்களா
ஆமாம்....இங்க ஒரு இலக்கிய மாநாடு...அதுக்கு வந்தேன்...
அப்படின்னா
பத்திரிகைகளில் கதை எழுதுவேன்....
அப்படிப்பட்டவங்க கூட இங்க வந்து இருக்காங்க...கல்யாணம் ஆயிடிச்சா
நான் பதில் சொல்லவில்லை.
விளக்கை அணைக்கட்டுமா .
வேணாம்....
இது என்ன பேஜாறு ...வெளிச்சத்திலேயேவா..
எதுவும் வேணாம்.....பேசாம ஒரு மணி நேரம் உட்கார்ந்திரு..ஒரு மணி நேரத்துக்கு நான் பணம் குடுத்ூதிரேன்.
அவள் முதல் முதலாக என்னை வியப்பாக பார்த்தாள்.
அப்புறம் எதுக்கு வந்தே...சும்மா காசு வாங்கினா ஒரு மாதிரியா இருக்கும்...கிளம்பு என்றாள்.
சு.....எதுவும் பேச கூடாது.....அப்படி உக்காரு...
அவள் சங்கடமாய் உட்கார்ந்தாள்
அவள் காலை கவனித்தேன். செருப்பு இல்லை. தெருவில் நடந்து நடந்து பாதம் எல்லாம் மண். நரம்பு புடைப்பு தெரிந்தது
கால் ஏன் வீங்கி இருக்கு...
ஏதோ வெறின்னு ஆரம்பிக்குமே அந்த வியாதி....
வெறிக்கோஸ் வேயின்
அங்.
அது ஏன் வருது தெரிுயுமா
தெரியலியே....
நாள் முழுவதும் நின்னுக்கிட்டே இருந்தா வரும்.
அப்ப கண்டிப்பா எனக்கு வரும்....பொழுதனினிக்கும் நீ வந்த பாரு அங்கேயெதான் நின்னுகீனே கிடப்பேன்..
உனக்கு கல்யாணம் ஆயிடிச்சா என்றேன்..
இது என்னடாது உள்ளே கூட்டிட்டு வந்து, உடனே மேல கைய வைக்கிரானாவதான் பார்த்திததிருக்கேன். உனக்கு இன்ன வேணும்...என்னைய கேள்வி கேட்டுக்கினு இருக்கே...
சும்மா....நான் ஒரு எழுத்தாளர் பாரு....நான் பார்க்கிற, உணர்ர விஷயதிதை பத்திரிகைல எழுதுவேன்..
இத கூட எழுத போறியா
தெரியல
உனக்கு இன்ன வேணும் கரீக்தா சொல்லு
எனக்கு எதுவும் வேணாம்....நீ ஒரு மணி நேரம் உட்ககாரு ..அது போதும்..
நீ போலீஸா
சே...சே...
பின்ன உனக்கு என் கிட்ட பேச என்ன இருக்கு
இங்க பாரு...நல்ல புரிந்சுக்கோ.....நான் உன்னை ஒண்ணும் செய்ய மாட்டேன்....நான் இங்கதான் பக்கத்தீல ஒரு லாட்ஜுல தங்கி இருக்கேன். என் வேலை கதை எழுதறது....நீ என்னை கூப்பிட்ட விதம் என்னை ரொம்பை பாதிச்சதது....உனக்கு நான் வேறு எந்த விதத்தீலும் உதவி செய்ய முடியாது...ஒரு மணி நேரம் உன்னைய பத்தி சொல்லு...எனக்கு ஏதாவது தோனிசின்னா எடுத்துக்கறேன்....
என்னை பற்றி எழுதி நீ காசு சம்பாதிக்க நான் கதை சொல்லணுமா...கிளம்பு முதல்ல...
சரி....வேணாம்...எதுவுமே சொல்ல வேணாம்....என்னை கூப்பிட்டியே....உனக்கும் எனக்க்கும் எவ்வளவு வயசு வித்யாசம் இருக்கும்...இது தப்பு இல்லை.
ஓ...அதுவா.....ரொம்ப பசி....நேத்து மத்தியானம் சாப்பிட்டது....வயசு ஆயிடிச்சு இல்ல.....முன்ன மாதிரி இல்ல....இங்க வேலை செண்சாததான் அன்னிக்கு கூலி....நான் ஒன்னை சாதாரணமாததான் கூப்பிட்டேன்....உனக்கு பிடிககளேண்ன கிளம்பு...
சே...அது எல்லாம் ஒண்ணும் இல்லை...நேத்துக்கப்புறம் சாப்பிடாலையா.....அய்யோ பாவம்....
நீ என்ன ஒரு நாளைக்கே பேஜார் ஆயிட்த...சில நேரங்களிலே கஸ்டமர் வரலேன்ன, மூணு நாலு நாள் சாப்பாடு இருக்காது...வெறுமா தண்ணி குடிச்சிட்டு போய் நீப்பென்....இப்பத்தான் சக்கறை வந்தத்துக்கு அப்புறம் தான் நேரத்துக்கு சாப்பிட சொல்லி ஏஜெண்ட் சொல்லி இருக்காரு...
சுகர் இருக்கா
அதெல்லாம் யாரு பார்க்கிறா...ஏதோ நீ கேட்கிற ...நான் சொல்லிட்டேன்...நானும் உங்களை மாதிரி சாதாரணமான ஆளுதான்..எனக்கும் கால காலத்துல கல்யாணம் ஆகி இருந்தா....உன் வயசுல பையன் இருந்து இருப்பான்.....
ஓ....கல்யாணம் ஆகலைய்யா
ஊ..ஹூம்....அது நடந்திருந்தா நான் ஏன் இந்த தொழிலுக்கு வந்து இருக்க போறேன்.....
ஏன் கல்யாணம் ஆகலை...
இதுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்கா என்ன....கல்யாணம் ஆகலே....அவ்வளவுதான்...
நீங்க படிச்சி இருக்கீங்களா
ஹ்ம்.....ரெண்டாவது...அப்புறம் படிப்பு ஏறலை...அப்புறம் பதினாறு வயசில அண்ணன் இட்டுகீனு விட்டாரு....
அண்ணனா...
அண்ணன்னா கூட புரந்தவங்க கிடையாது...எனக்கு அப்ப, அப்ப உதவி செய்வாரு...
அப்பா, அம்மா...
அப்பா யாரு என்ன விவரம் எல்லாம் தெரியாது.....அம்மா வந்து நான் புரந்து பத்து நாளிலே பெங்களூர் பக்கத்தில மாளூர் இல்ல, அங்க பஸ் ஸ்டந்டில விட்டுட்டு போய்திச்சு.....அது யாருன்னு எண்னக்கு தெரியாற்ு....அப்புறம் சர்ச் ஆண்ட ஒரு இஸ்கூலு இருக்கு பாரு அங்கேயெதான் படிச்சேன்....
அப்புறம்
அப்புறம் என்ன....பதினாறு வயசுல...என்ன வரும்....அதே கன்றாவித்தாதான்.......கூட இருந்த இன்னொரு அனாதை பயனை லவ் பண்ணணிகிஎன்....அந்த பொரம்போக்கு என்னை ஈஷ்த்துகிட்டு ஓடி வந்து, இங்க விட்டுட்டு, ஊட்டுட்டு போயிடுச்சு....எவ்வளவு நாழைக்கு சோறு தண்ணி இல்லாம இருக்கறது.....எல்லாம் வீதி....சரி இப்ப என் கதையை கேட்டுக்கியாயா...
ஹ்ம்....உன் கதை ரொம்ப கஷ்டமா இருக்கு....
சரி நான் கிளம்பறேன்...பணம் எதுவும் வேணாம்.....வேற ஆள பார்க்க போறேன்
நான்தான் பணம் தரேன்னு சொன்னேன் இல்லை.....
சும்மா வர காசு ஓட்தாது....நான் கிளம்பறேன்....ஏதோ என்னைய மதிச்சு என் கிட்ட பேசினயே....அதுவே போதும்....அப்படியே நீ என் கதைய போட்டாலும், இதையும் சேத்து எழுது.....அய்யா ஆம்பளைங்களே, நாங்களும் உங்களை மாதிரி மனுசங்கதான்....ஏதோ இந்த வயித்திதது பசிக்கு, இந்த மாதிரி பாவம் செய்யோற்மே.....எங்களை கஷ்ட படுத்ாடீங்க....அப்புறம் இத எழுத மறந்துராதீங்க......வீட்டில ஆம்பல சரியா இருந்தா, நாங்க என் இங்க வறோம்.....அதனாலே, தாயி தகப்பானே, அக்கா தங்காச்சிய காஞ்சிஓ, கூழோ உங்க வசததிக்கு காப்பதுங்க...அவ்வளவுதான்..நான் வரட்டுமா...
********************************************************************************
மறுநாள் காலை பத்து மணிக்கு மேல்தான், மாநாடு....டிபன் சாப்பிட ஹோட்டல் நோக்கி நடந்தேன்...அதே லக்ஷ்மி ரோடில் கூட்டம்....யாரோ இறந்திருந்தார்கள்...உள்ளே ஒருவன் அழுது கொண்டு இருந்தான்.
பூக் மே...மர் காயி.....
பூக் என்றால் பசி என்று புரிந்தது
அவன் அழுகையிலேயே, அது பொய் அழுகை என்று தெரிந்தது. நின்று கொண்டு இருந்தவர்களிடம் காசு வாங்கி கொண்டு இருந்தான்.
உள்ளே எட்டி பார்த்தேன்....கூட்டத்தில் ஒன்றும் தெரிய வில்லை சிகப்பு வண்ண புடவை காற்றுக்கு ஆடி கொண்டு இருந்தது......கூட்டத்தை விட்டு விலகி, ரூம் வந்தேன்.....
இந்த கதையை எழுதி முடித்தேன்.

dellas
01-10-2014, 02:30 PM
நிஜம் சுடுகிறது. பசிக்காக உடலை வாடகை விடும் நிலை கொடுமை. அந்த உடலை வாடகைக்கு பேசும் மாந்தர்கள் அதைவிட கொடுமை. இந்நிலையில் இருப்பவர்களுக்கு புலி வாலை பிடித்த கதைதான். வாலை விட்டால் புலி நம்மை குதறிவிடும்.

சரளமான நடை.

வாழ்த்துக்கள்.

aren
06-01-2015, 05:11 AM
நல்ல கதை. வீட்டில் ஆம்பிளை சரியில்லையென்றால் பெண்களின் நிலை இப்படியும் ஆகலாம் என்று அழகாக சொல்லியிருக்கிறீர்கள். இன்னும் நிறைய எழுதுங்கள்.