PDA

View Full Version : மானிடம்



Sabeekshana
10-09-2014, 12:27 PM
http://blogs.swa-jkt.com/swa/11391/files/2013/04/Hurricane-Sandy-US.jpg


குருவி கூட உந்தன் செயல்
குந்தகம் என கருதிற்று
அதனாலே தன் கூண்டையும்
அதி உச்சியில் கட்டிற்று.....!

அருவி கூட அமைதி கொண்டு
அசையும் ஆற்றை இழந்திட்டால்
அதையும் கூட அழித்திடுவான்
என்ற அச்சம் கொண்டிற்று...!

உருவி உருவி உலகையே
உருக்குலைக்கும் மானிடா
உணர்ச்சி பொங்கி உன்னை அன்று
உலுக்கியது ஓர் சுனாமி...!

துருவி துருவி உலகெல்லாம்
துவம்சம் செய்யும் மானிடா
துட்டு தான் வாழ்வென்று
துள்ளுகிறாய் நீ இன்று....!

கருவி கொண்டு இயற்கையை
களங்கம் செய்யும் மானிடா
எண்ணி பார் ஒரு கணம்- இன்று
கூர்ப்பின் எக்கட்டத்தில் நீ என....!

dellas
11-09-2014, 01:17 PM
நன்று , பாராட்டுக்கள்.

ஆனால் ஓன்று, மனிதர்கள் நாம் என்னதான் செய்துவிட்டாலும், இயற்கை தன்னைத் தானே தகவமைத்துக்கொள்ளும் ஆற்றல் மிக்கது.

அந்த நிமிடங்கள் ஒரு சுனாமி, ஒரு தொடர்மழை, ஒரு கடும்புயல், ஒரு எரிமலையின் சீற்றம் என எந்த வடிவத்திலும் இருக்கலாம் என்பதே உண்மை.

வெங்கி
16-09-2014, 07:21 AM
"கூர்ப்பின் எக்கட்டத்தில் நீ என....!"

புரிய வில்லை...

Sabeekshana
17-09-2014, 01:46 PM
நன்றி டலஸ்

வெங்கி, கூர்ப்பு என்பது பல்வேறு பரிணாமங்களூடாக ஹோமோ சேபியன் சேபியன் என்ற நவீன மனிதன் எனும் நிலையை பெற்றது.

மனிதன் மூளையும் ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு கட்டமைப்பு மாற்றங்களுக்கு உட்பட்டு சிந்தனை ஆற்றல் அதிகம் பெற்ற தற்கால மூளையை பெற்றது.

ஆனால் மனிதன் அதனை முறையாக பயன்படுத்த அறியாதவனாய் பல்வேறு தவறுகளை இன்றும் புரிகிறான். அவனது இந்த செயல் ,விருத்தி குன்றிய கூர்ப்பின் அடி மட்டத்தில் உள்ள மூளையின் செயற்பாட்டை பிரதிபலிப்பதாய் அமைகிறது.

நன்றி

கும்பகோணத்துப்பிள்ளை
19-09-2014, 04:49 PM
மனிதம் உருவான காலந்தொட்டே
இயற்கையை எதிர்த்தோ அனைந்தோ மனிதன் போராடிக்கொண்டிருப்பதும் இயற்கையானதே!
சிலசமயம் இயற்கையை கட்டுப்படுத்துவதுபோன்ற பாசாங்குகளால் அதற்கு ஊறுவிளைவித்து
பாதிப்புகளை அதிகப்படுத்திக்கொள்கிறான்...
பாதிப்புகளிலிருந்து பாடமும் கற்றுக்கொள்கிறான்!
தற்காத்துக்கொள்ள தன்னை தயார்ப்படுத்திக்கொள்ள கற்றுக்கொள்கிறான்!
கற்றுக்கொள்ள கற்றுக்கொள்ள அதைப்பற்றிய அறிவையும் வளர்துக்கொள்கிறான்.
மறுபடியும் மறுபடியும் இயற்கை கற்றுக்கொடுக்கவும் தயங்குவதில்லை!

நிங்கள் கூறிய கூர்மவிரிதலின் பக்கவிளைவுகளால் மானுடம்மட்டுமில்லை
குருவிபோன்ற மற்ற உயிரினங்களும் பாதிப்படைவது கண்கூடான உண்மை!

இயற்கைச்சீற்றத்திற்கு மனிதனும் காரணம் என கூறும் உங்கள் கருத்து பற்றி
விழிப்புணர்வுபெற்றால் அதுவும் அறிவின் அடையாளம்!

பாராட்டு!