PDA

View Full Version : என்னை மூர்ச்சையாக்கியவன் அவனே!!



Sabeekshana
01-09-2014, 10:01 AM
http://2.bp.blogspot.com/-KSBOxxFL0PU/U5KqKkN4J7I/AAAAAAAABo8/BBaxL_AAXgA/s1600/man-portrait-knife-oil-painting.jpg





வானவில்லின் ஒளிக்கீற்றினின்று
வடித்தெடுத்த
வகை வகையான வர்ணங்களின் வார்ப்பில்
உதயமானவன் அவன்...!

நுணுக்குக்காட்டி வில்லையாலும்
வரையறுக்கமுடியா
நுட்பம் பொருந்தியவன்...!

ரோஜா செடியையும் - தன்
முட்களை உதிர தூண்டும்
முகம் கொண்டான் அவன்...!

பிரபஞ்ச ராஜனின்
முழு சொரூபமாய்
பிறவி எடுத்து
என்னை ரட்சிப்பவன்...!

விருந்தில் இளையனாரையும்
வித்தையில் அர்ஜுனனையும்
வீரத்தில் பீமனையும்
விந்தையில் சம்பந்தரையும்
வீம்பில் துரியனையும்
விஞ்சிய என் வேந்தன்...!

என் மூச்சும் அவன்
என் பேச்சும் அவன்...!

வாதனாளி வரை
காற்றை அழுத்தி
நுரையீரல் தரை முட்டும் வரை
அவன் பெயர் உச்சரித்தும்
நுரையாய் எழுந்து
என்னில் நிறைகிறான் அவன்...!

என்னை மூர்ச்சையாக்க வல்ல
கார்பன் டை ஒக்சைட்டு சிலிண்டரையும்
காவுகிறான் அவன் கண்ணில்...!

காலமெல்லாம் அவன் நாமத்தை
ஜெபித்த வண்ணம்
அவன் நினைவுகளால் துளைக்கப்பட்ட
ஒரு பொந்தில்- காதல் பொங்கும்
ஒரு சரவமாய் நான்...!

dellas
01-09-2014, 11:04 AM
படங்கள் எல்லாம் எங்கிருந்து ???

அருமை. பாராட்டுக்கள்.

Sabeekshana
02-09-2014, 04:20 PM
படம் வழமை போல் கூகிள் மூலம் தான். :lachen001:

நன்றி டெலஸ்