PDA

View Full Version : வளமுடனா ? வளத்துடனா ?



M.Jagadeesan
28-08-2014, 04:10 AM
வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !


வாழ்க வையகம் ! வாழ்க வளத்துடன் !


இவற்றில் எது சரி ?


மனம் என்பது தனித் தமிழ்ச் சொல். (மனசு, மனது வேறு ). இச்சொல்லுடன் "இல்' உருவு சேர்த்தால் மனத்தில் என்று எழுத வேண்டும். ஏன்? மனம் + அத்து + இல் என்று இடையில் அத்துச் சாரியை சேர்க்க வேண்டும் என்பது இலக்கண விதி.
குளம் + இல் என்பதும் குளத்தில் (குளம் + அத்து + இல்) என்றுதானே சொல்லப்படுகிறது.

பணத்தில் பாதி என்று சொல்லுகிறோம். இங்கு பணம் என்ற சொல்லுடன் அத்துச் சாரியை இணைந்துள்ளது. ஆக, தமிழில் "அம்' என்று முடியும் பல சொற்களுடன் அத்துச் சாரியைச் சேர்த்தல் என்பது வழக்கத்தில் உள்ள இலக்கண விதியே.


இன்னும் வேண்டுமா? குலம் - குலத்தில், நலம் - நலத்தில், இனம் - இனத்தில், வலம் - வலத்தில். இப்படி எல்லாவற்றிலும் "இல்' உருபு சேர்த்தால் "அத்து' சேர்வதைப் பார்த்தோம்.

அத்துச் சாரியை இல் உருபோடு மட்டுமே வருவதா? இல்லை. உடன் எனும் உருபு சேர்த்துப் பாருங்கள். நலம் + உடன் = நலத்துடன், சினம் +உடன் = சினத்துடன் இன்னும் முன் கூறிய பணம், குணம், மனம், மணம் எச்சொல்லோடும் உடன் சேரும்போது அத்துச் சாரியைத் தோன்றும். அத்துச் சாரியையின் அவசியத்தை உணர இவை போதும்.

எனவே


" வாழ்க வையகம் ! வாழ்க வளத்துடன் ! "



என்று எழுதுவதே சரியாகும் .

Sabeekshana
01-09-2014, 09:57 AM
விளக்கத்துக்கு நன்றி ஐயா.

M.Jagadeesan
01-09-2014, 03:09 PM
சபீஷனா அவர்களின் பின்னூட்டத்திற்கு நன்றி .