PDA

View Full Version : கண்கள் பெற்றபயன் எது ?



M.Jagadeesan
26-08-2014, 02:59 PM
கண்கள் பெற்றபயன், இருவர்
...காதல் செய்யவே என்றார்
கண்கள் பெற்றபயன், வள்ளுவன்
...கல்வி கற்கவே என்றான்
கண்கள் பெற்றபயன், திண்ணன்
...கண்ணை அப்பவே என்றான்
கண்கள் பெற்றபயன்,இவற்றுள்
...எதுசரி எனச் சொல்வீரே !



திண்ணன் -கண்ணப்பன்

கும்பகோணத்துப்பிள்ளை
26-08-2014, 07:08 PM
கண்னொற்றிக்காதல் செய்தார் பெற்றார் பெண்மகவு பின்
கன்னிகாதானம் தந்தார் பெற்றார் தாத்தாவென்றபட்டம்!

கல்வியெனும் அகக்கண் பெற்றார் பெற்றார் அறிவாளிப்பட்டம் பெற்றதாலே
பெற்றோர் பெற்றார் அருந்தவத்தாலே நன்மகவு பெற்றார்யென்ற பட்டம்!

முக்கண்பெற்ற அப்பனுக்கே முன்னால் காலாலுதைத்தே கண்னப்பியதாலே
திண்ணப்பர் பெற்றார் கண்ணப்ப நாயனார்யென்ற பட்டம்! - இதுவே சரியென்று

முன்பின்தெரியாத முனுசாமிக்கு கண்தெரிய கண்தானம் கொடுத்தநம்
கண்ணபிரானோ மேலோர் எனும் பட்டம் பெற்றார் மேலுலகு போனபின்னும்!

அதுவும் சரிதான்! ஆதலினாலே கண்தானம் செய்வீரே உலகத்தீரே!

Sabeekshana
27-08-2014, 04:19 PM
கண்கள் பெற்ற பயன் கல்வி கற்பதே என கருதுகிறேன் ஐயா. :)

M.Jagadeesan
22-04-2015, 09:03 AM
கண்கள் இல்லாமலும் காதல் செய்ய இயலும், நாம் இறந்த பிறகு , நம்முடைய கண்களைப் பிறருக்குத் தானமாகக் கொடுக்கமுடியும் ஆனால் நாம் வாழும் காலத்தில் கல்வி கற்க கண்கள் மிகவும் இன்றியமையாதன. ஆகவே கண்கள் பெற்றபயன் கல்வி கற்க என்பதே பொருத்தமான விடையாக இருக்கமுடியும்.




சபீக்ஷனா மற்றும் பிள்ளையவர்களின் பாராட்டுக்கு நன்றி.

தாமரை
23-04-2015, 03:53 AM
காதலுக்கு கண்ணில்லை.. கண்கள் பெற்ற பயன் காதலில்லை.
கண்தானம், நாம் உபயோகித்த பின் கொடுக்கும் தர்மம். அது கண்ணைப் பெற்ற பயனாகாது. அது வீணடிக்காத சிக்கனமாகும்

கல்வியே கண்கள் பெற்ற பயன். இதை யோசிக்கக் கூட கல்விதானே தேவைப்படுகிறது.

ஆதவா
23-04-2015, 10:58 AM
என்னையெல்லாம் கேட்டால்....

கண்கள் பெற்ற பயன்... இந்த உலகைப் பார்க்க, ரசிக்க.... கல்வி கற்கவும் நாம் ”பார்க்க”வேண்டியிருக்கிறது அல்லவா?
கண்கள் இல்லையேல் இந்த உலகின் தேவதைகளை தரிசிப்பது எப்படியாம்??
இவ்வுலகமே பூட்டிய சுவர்க்கம்,
கண்களே அதன் திறவுகோல்.