PDA

View Full Version : தமிழ் எனும் சாகரம்



Sabeekshana
24-08-2014, 07:03 AM
http://images.freehdw.com/800/nature-landscapes_widewallpaper_beautiful-sea-sky_8342.jpg


தமிழிற்கு
பெண்ணென்றும் பெருமை என்றும்
கண்ணென்றும் கற்பகம் என்றும்
விண்ணென்றும் விந்தை என்றும்
பண் என்றும் பவித்திரம் என்றும்
பலவாறாய் வடிவம் தந்த
வண்ணக் கவிஞரே!!

நான் தமிழை
ஆழம் காண இயலா
ஆழி என
அர்த்தம் கொள்வேன் !!

ஆமாம்

பாவத்தால்
நாம் பெற்ற
பிறவி பெருங்கடல் அல்ல
நம்
பாவம் எல்லாம்
களையும்
ஒரு பவித்திரமான கடல்!!

நீச்சல்
அறியாவிடினும்
நீள விரிந்த
இந்த
நித்திய நீரில்
நீ மூச்சு திணறி
மூர்ச்சையாக மாட்டாய்
அறிந்துகொள்!!

மாறாக
முக்தி இன்பம் பெறுவாய்
தெரிந்துகொள்!!

உணவில் உப்பு
தூக்கலாக இருந்தால்
உதவாது அது விருந்துக்கு

ஆனால்

தமிழ் சாகரம்
தாங்கிய உவர்ப்பு
எம் உயிர்க்கு
தரும் சிலிர்ப்பு
உணர்வாய் அதை நீயும்
உட்கொண்ட பின்பு!!

ஆய்வு முடிவாக அன்று
அலெக்ஸ் கோளியரும் (Alex collier)
அகிலமெல்லாம் ஒரு நாள்
அமுத தமிழையே
அப்பியாசம் செய்ததாய்
அடித்து சொன்னதை
அடிக்கடி நான் எண்ணி
ஆனந்தம் கொள்கிறேன்!!

தமிழ் கடல்
தந்த கொடைகள்
கணக்கற்றவையாம்!!

அளவு கோல்
கொண்டு அதன்
ஆழம் அறியும்
அளவிற்கு
அறியாமை பொருந்தியவள்
அல்ல நான்!!

பரிசோதனை குழாயில்
நான்
பரந்து விரிந்த
தமிழ் சமுத்திரத்தின்
நீர் மாதிரியை
பத்திரமாய் இட்டு
பரிசோதிக்கும் ஏக்கம்
கொண்டேன்!!

சங்கம் வளர்த்த
எம் தமிழை
சல்லடையாக்கிய
சதிகளை
தமிழின் சலம் கொண்டு
சலவை செய்யும்
ஆர்வம் கொண்டேன்!!

ஆசிட் பேஸ் டெஸ்ட் (Acid base test)
அல்ல இது- தமிழின்
அற்புதம் பற்றிய டெஸ்ட்


இதன் விளைவாய்


சரித்திரத்தில்
சபை ஏறாத
பல பாடல்கள்
சந்தங்கள் பெறுமெனவும்
அரங்கேறாத
தமிழ் அத்தியாயங்கள்
அங்கீகரிக்கப்படுமெனவும்
நம்பினேன்!!

ஆகையால்

பரிசோதனை
முடிவுகளை
ஒரு முறை
பட்டியலிட்டு
காட்டுகிறேன்
படியுங்கள்!!

அங்கோர்வாட் (Ankor wat) என்ற
அகிலம் வியக்கும்
பிரமாண்ட ஆலயம்
கம்போடிய மண்ணில்
கவி பாடிய
தமிழ் சாகரம்
செய்த ஒரு சாகசம் அன்றோ!!

பூம்புகார் என்ற
புராதன துறைமுகம்
புவியினில் தமிழ் கடல்
புனைந்து வைத்த
புதுமையன்றோ!!

தமிழின்
பத்தாயிரம் ஆண்டு
பழமை தனை
நக்கீரர் நல்கிய
இறையனார் அகப்பொருளும்
இயம்பியதாய் ஒரு
ஞாபகம்!!

எகிப்திய ஈசா பிரமிட்டிலும்
எண் மடங்கு பெரிதான
தஞ்சை பெரும் கோவிலை
தானமாய்
எம் தரணிக்கு தந்தது
தமிழ் கடல்!!

ஆஸ்திரேலியா கமெரூன் என
உலகின் அத்தனை மூலைகளிலும்
ஆதிவாசிகள் வாயிலாக
ஆட்சி நடத்துகிறது
இந்த ஆழ்கடல்!!

புரோக்ரிதம் வேதம் கலந்து
புனித சமஸ்கிருதம் தந்து
பாளியின் சாயல் பெற்று
பைஞ்சிங்களமும் தந்தது
தெவிட்டாத எம் தமிழ் கடல்!!

திராவிடத்துக்கெல்லாம்
அதிபதியாய்
தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு
என பிதாமொழியாக தனது
பிம்பத்தை காட்டிற்று எம்
தமிழ் மா கடல் !!

ஜேசு கிறிஸ்து மரிக்கையில்
"எல் ஓய் லாமா சாவ தா நீ" என
தமிழிலே தரிசித்தார்
தம்பிரானை
அதனால் தமிழ்
தெம்மாங்கு பாடும்
ஒரு தெய்வீக கடல் !!

இவை வெறும்
எடுகோள்கள் இல்லை
பரிசோதனையால்
நிறுவப்பட்ட
சில நிர்மலமான
உண்மைகள் !!

என்றாலும்

புள்ளி விபரம்
சொல்லி நான்
புளாங்கிதம் அடையவில்லை
தமிழுக்கு புகழ் ஆரம் சூட்டவில்லை
தமிழ் சமுத்திரத்தில்
சத்தமின்றி
சவமாக உறங்கிக்கொண்டிருக்கும்
எம் சரித்திரத்தை
சனித்தெழ செய்யும்
சமரின் முதற் கட்டமே இது!!

M.Jagadeesan
24-08-2014, 09:42 AM
அமுதத் தமிழ்மொழியின் பரப்பை எல்லாம்
..அறியச் செய்தாயே ! சபீக்ஷ்ணா ! எம்தோழி !
இமிழ்கடலின் ஆழத்தை அறிந்தோர் கூட
...இருந்தமிழின் ஆழத்தை அறிய மாட்டார் !
தமிழினத்தால் உலகுபெற்ற தயவுகள் எல்லாம்
...தகவுடைய நும்பாட்டால் தெரிந்து கொண்டோம்
உமியொன்று அரிசியுடன் சேர்ந்தாற் போல
...உம்கவியைப் படித்தோரும் புலவ ராவார் !

கும்பகோணத்துப்பிள்ளை
25-08-2014, 05:10 AM
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே மூத்தகுடி எம் தமிழ்குடி என்பதறிவோம்!
ஒலிவடிவாய் முன் உதித்த மொழி தமிழ்மொழி என்பதற்க்கான ஆதாரம் அதன் உயிரெழுத்துகளிலேயே உண்டு!

மனிதனின் வாயினாலே அசைக்க முடிந்த பாவங்களில் எழுப்ப முடிந்த சப்தங்கள் கொண்டே தன்னிச்சையான மொழிதோன்றியிருக்கவேண்டும்

வாயினை
அகட்டி ஒலித்தால் 'அ' வரும் அதனையே சற்று நீட்டித்தால் 'ஆ' வரும்
இளித்து ஒலித்தால் 'இ' அதனையே நீட்டித்தால் 'ஈ'
குவித்து ஒலித்தால் 'உ' நீட்டித்தால் 'ஊ'
அகட்டுதலையும் இளித்தலையும் இனைத்தொலித்தால் 'ஜ'
இவ்வாறாக மற்ற தமிழ் ஒலிகள் உதித்தவாறை அறிந்துகொள்லாம்
தானாய்த்தோன்றிய தனிமொழி என்பதை அறிந்துகொள்ள இதுவும் ஒரு ஆதாரமென்பதை அறியலாம்

இத்துனை ஆயிரம்மாயிரம் ஆண்டுகளுக்கு முன்தோன்றி
பெருங்கடலாய் பொங்கியிருக்கும் தமிழ்கடலை எண்னவும் அறியவும் எம் ஒரு பிறவிகானாதே!

தமிழ்ப்பெருமை பாடிய தங்கள் கவிதைக்கு எனது வணக்கங்கள்!

நாஞ்சில் த.க.ஜெய்
25-08-2014, 11:55 AM
உணர்வுகளில் ஒன்றிய தமிழ் மொழி அவர் பரவிய இடமெங்கும் செழித்திடும் .மொழியின் பெருமை அறிந்தோர் சிலர் ஆனால் அம்மொழியினை மறப்போர் இன்று பலர் பலர்.அதனை தமிழொளி எங்கும் பரவிட அவ்வொளி பந்தத்தினை ஏத்தி பிடித்திடும் ஒரு தமிழ்பெண்ணின் இக்கவிதை அருமை.தொடரட்டும் சபீக்ஷ்னா.

Sabeekshana
26-08-2014, 11:17 AM
உளம் கனிந்த நன்றிகள் ஜெகதீசன் ஐயா, ஜெய் மற்றும் பிள்ளை அவர்களே.