PDA

View Full Version : உயர் குருதி அமுக்கம்Sabeekshana
21-08-2014, 04:46 PM
http://st1.thehealthsite.com/wp-content/uploads/2014/02/hypertension.jpg
உயிர்ப்பாய் தினமும்
உழைக்கும் மனிதா
உயர் குருதி அமுக்கம் பற்றி
உரைப்பதை நீயும்
சற்றே உன்னிப்பாய் கேட்பாய்!!

பக்கவாத (stroke) நோயை
பரிசாக தந்து
படுத்த படுக்கையாக்கி
பாதகம் புரியும் இந்த
உயர் குருதி அமுக்கம்!!

குருதி கலன்களின்(blood vessels)
குறுக்குவெட்டு பரப்பினை குறுக்கி
குருதி காவுதலில் (blood transfer)
குறைவினை ஏற்படுத்தும்- இந்த
உயர் குருதி அமுக்கம்!!

கண்குழல் அழற்சியால்(Retinopathy)
மங்கும் கண்பார்வை
சிறுநீரக கோளாறால்
சிதைவுறும் சிறுநீரகம் -உயர்
குருதி அமுக்கத்தின் விளைவாய்!!

இதயத்தின் சந்தம் - இயல்பிழந்து
இதய மின் வரையத்தில் (ECG) தோன்ற
இதயவறை சுவர்களும் பருத்து (hypertrophy)
இதய செயலிழப்பும் தோன்றுமன்றோ- இந்த
உயர் குருதி அமுக்கத்தால்!!

உப்பினை அளவாய்
உணவில் சேர்ப்போம்
உடல் பயிற்சியை
உணர்ந்தே செய்வோம் - உயர்
குருதி அமுக்கம் காக்க!!

புகையையும் மதுவையும்
புறந்தள்ளி வைப்போம்
எடையையும் எண்ணெய்யையும்
எண்ணியே குறைப்போம்- உயர்
குருதி அமுக்கம் காக்க!!

பழவகைகள் தாங்கிய
பல வகையான விட்டமின்கள்
பலப்படுத்துமே குருதி கலன் அகவணியை (Endothelium)
பற்பல நச்சுக்களை பதம் பார்த்து -உயர்
குருதி அமுக்கமும் காத்து!!

தொற்றாத நோய்களில்
தொல்லை பல தந்திடும்
உயர் குருதி அமுக்கம்
தொலைந்தே போயிட- இன்றே
தொடங்கிடுவோம் எம் முயற்சியினை!!
http://www.connecttoresearch.org/images/pubs/AZ_d0240-1.jpg

M.Jagadeesan
22-08-2014, 12:08 PM
மருத்துவக் குறிப்புகளைக் கவிதை வடிவில் தருகின்ற சபிக்ஷனா அவர்களுக்கு வாழ்த்துக்கள் .


ஊறுகாய் அப்பளம் உணவில் சேர்க்காதீர் !
...உப்பின் அளவைப் பாதியாய்க் குறைத்திடுவீர்
சோறுதனை அதிகமாய் உண்பதைத் தவிர்த்திடுவீர்
...சோளம் கம்புடனே கேழ்வரகு சேர்த்திடுவீர்
ஏறுகின்ற கோபம் அழுத்தத்தை அதிகரிக்கும்
...எப்போதும் புத்தனைப்போல் சாந்தமுடன் இருந்திடுவீர்
வீறுகொண்ட நடைப்பழக்கம் தினமும் மேற்கொண்டால்
...விதியையும் வென்றேநாம் நூறாண்டு வாழ்ந்திடலாம்!

Sabeekshana
23-08-2014, 08:31 AM
உறுப்பினர்களின் வருகை மிகவும் அரிதான இந்த மன்றில் தாமும் இல்லை எனில் நான் என்றோ ஆக்கங்களை எழுவதனை நிறுத்தியிருப்பேன்.

தமது ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி ஐயா

M.Jagadeesan
23-08-2014, 11:06 AM
தொய்வின்றித் தங்கள் பணியைச் செய்திடுவீர் !
...தோல்வி என்பது நிரந்தர மானதல்ல !
மெய்வருத்தம் பாராது படைப்பினை நல்கிவந்தால்
...மேன்மையுறு நிலைமைக்கு நிச்சயம் வந்திடலாம் !
ஐயனாம் வள்ளுவரும் அவருடைய திருக்குறளை
...அரங்கேற்றம் செய்திடவே பட்டபாடு நாடறியும் !
எய்கின்ற அம்பெல்லாம் இலக்கை அடையாது
...ஏதேனும் ஓர்அம்பு வெற்றிக்கு வித்திடலாம் !

Sabeekshana
24-08-2014, 09:37 AM
நன்றி ஜெகதீசன் ஐயா

நாஞ்சில் த.க.ஜெய்
25-08-2014, 12:41 PM
மருத்துவ குறிப்புகள் ஒரு கவிதையில் ..அவசியம் தொடரவேண்டும்...சபீக்ஷ்னா தங்கள் கவிதைகளை ஒரு அழகு தலைப்பில் தொகுப்பாய் தொகுத்து ஒரு பதிவில் இட்டால் நன்றாயிருக்கும் என எண்ணுகிறேன்.தொடர்ந்து அளியுங்கள் கவிதை படைப்புகளை ..