PDA

View Full Version : கடவுளின் வருகையை எதிர்நோக்கிய நியாயப்படுத்தல்கள்



Sabeekshana
18-08-2014, 05:50 PM
https://watercolorjournal.files.wordpress.com/2009/03/28march2009-016.jpg?w=529


தமிழரின் தாயகமாம் குமரி தனை
ஆர்ப்பரித்த ஆழி பேரலை
அள்ளி செல்கையில் நீ வரவில்லை!!

அவல பெண்ணின் மானம் டெல்ஹியில்
அசுரர் நால்வரால்
அபகரிக்கப்பட்ட போது நீ வரவில்லை!!

எங்கோ பறந்த மலேசிய விமானம்
மதியற்ற ரஷ்யரால்
மடக்கி வீழ்த்தப்பட்ட போது நீ வரவில்லை!!

இஸ்ரேல் காசா யுத்தத்தில்
இயம்பிட இயலா விபரீதங்கள்
இருந்தும் நீ வரவில்லை!!

துள்ளி விளையாடிய பள்ளி சிறார்- ஈழத்தில்
துவம்சம் செய்யப்பட்டார் - குண்டுகளால்
குருதி துடைக்க நீ வரவில்லை!!

முப்பது வருட தமிழர் போராட்டம்
சில மூர்க்கர்களால் மூன்றே நொடியினில்
முற்று பெற்ற போது நீ வரவில்லை!!

பாசுரம் பாடினேன் - பற்பல
பணிகள் அற்றோர்க்கு புரிந்தேன்
அப்போதும் நீ வரவில்லை!!

நீறு தரித்திட்டேன்
நீளமாய் நெற்றியிலே - உனை
நினைந்து ஆயினும் நீ வரவில்லை !!

உலக பந்தின் ஒவ்வொரு மூலையிலும்
உரைத்திட முடியா அநீதிகள்
உபாயம் தேட நீ வரவே இல்லை!!

இதற்கு பின்னும்
நீ வர காரணம் ஒன்று
உண்டோ என அறியேன்!!

ஜான்
20-08-2014, 01:24 AM
இயற்கை மாறுபாடுகளின் காரணமாக உயிர்கள் அழிவது,நிலப்பரப்பு மாறுபடுவது...இவை இரண்டும் மனிதனால் அறிந்து கொள்ள இயலாத நிகழ்வுகள்..

போர்களுக்கும் வறுமைக்கும் காரணம் இறைவன் அல்ல ..மனிதனின் சுயநலமும் ஆசையும்....

சம்பவாமி யுகே என்று காத்திருக்க வேண்டியதுதான்...

அஹம் பிரம்மாஸ்மி என்று அமைதியுற வேண்டியதுதான்..வேறு வழி இல்லை

Sabeekshana
20-08-2014, 10:54 AM
ஆக்கமும் அழிவும் இன்றி பூவுலகில் உயிர்ச்சமநிலை பேணப்பட முடியாது என்பதனையும், மனிதனின் அழிவுகளுக்கு பல வழிகளில் அவனே காரணகர்த்தா என்பதனையும் நன்கு அறிவேன்.

எனினும் உலகில் மிகவும் ஜீரணிக்க இயலாத விபரீதங்களை கண்ணுற்றதும், என்னை அறியாமலே இறைவனின் வருகை வேண்டி மனமானது ஏங்குகிறது.

நன்றி ஜான்

நாஞ்சில் த.க.ஜெய்
25-08-2014, 12:04 PM
என்னுள் சிலநேரங்களில் தோன்றும் இக்கேள்விகள் தங்கள் கவிதைகளில் ..என்றும் அதிசயங்கள் நிகழ்வதில்லை நிகழ்ந்தால் நன்றாயிருக்கும் என்னும் நம் மனநிலை என்றும் மாறுவதில்லை.காரண காரியங்களின்றி நிகழ்வுகள் நிகழ்வதிலை .இறைவனின் செய்கை மிகவும் மாறுபாடானது, உணர்ந்தவர்கள் அறிவர்.உணராதோர் மனம் புழங்கி உழல்வர் .தொடரட்டும் சபீக்ஷ்னா..