PDA

View Full Version : சுதந்திர தினம்



Sabeekshana
16-08-2014, 07:19 AM
http://madhusameer.files.wordpress.com/2010/08/15-august-independence-day-of-india_14215.jpg



அடிமை உணர்வுடன்
ஆங்கிலவர் ஆட்சியில்
விழிகளில் நீர்படலம்
வீணாகிப் போக
புடைத்த நாளங்களும்
புதுவிதி காட்ட மறுக்க
மாற்றானுக்கு தினம் தினம்
மண்டியிட்ட நாட்கள்!!

ஜனநாயகம் என்பது- வெறும்
ஜடமாகிப் போக
துப்பாகிகள் பெருகி - எம்
வாழ்வினை துவம்சம் செய்ய
ஆங்கிலத்தின் பிடியினில்
தமிழின் ஆரோக்கியம் சீர் கெட
வறுமையே வாழ்வான
வெறுமையின் அனுபவங்கள்!!

சமவுடைமை ஆட்சி
வெறும் சருகாகிப் போக
அவர் சாட்டைகளுக்கு
எமை சமர்ப்பணம் செய்து
யுகங்கள் தோறும் -அவர்
யுக்திகளுக்கு அடி பணிந்து
யுத்தம் புரிதல் மறந்த
யூதர்கள் நாம்!!

மகாத்மா போன்ற
மகான்களின் உதவியுடன்
அந்நியரை நாம்
அடித்து விரட்டினோம்
பூட்ஸ் அணிந்த
புலம் பெயர் கால்களுக்கு
புத்தி புகட்டி
புனர் வாழ்வு அளித்திட்டோம்!!

சுதந்திர காற்றின்
சுகமே தனியன்றோ!!
பக்குவமாய் அடை காத்து
பருவம் வந்ததும்
விடிவினை கண்டது- எம்
வீர சுதந்திரம்
கவசம் பூட்டி அதனை
காலமெல்லாம் காத்திடுவோம்!!

உருண்டு கொண்டிருக்கும் - உலகின்
ஒரு மூலையில்
திரண்டு நாம்- பாரதத்தின்
திறம் பாடி பயன் ஒன்றில்லை
எம் திறமை கொண்டு
திசை அனைத்தும்
இச்சை தீர "இந்தியன்" என
இடியென முழங்கிடுவோம்!!

அனுராகவன்
16-08-2014, 07:22 AM
வாவ்....அருமை...தொடருங்கள்..

Sabeekshana
17-08-2014, 05:31 PM
நன்றி அச்சலா!!

அனுராகவன்
18-08-2014, 03:54 AM
அசத்தலான கவிகள்..இன்னும் எதிர்ப்பார்கிறேன்..

dellas
18-08-2014, 05:45 AM
நல் கவிதை. வாழ்த்துக்கள்.

Sabeekshana
18-08-2014, 04:40 PM
நன்றி அச்சலா மற்றும் டெலஸ்

ஜான்
19-08-2014, 01:30 PM
நல்ல வரிகள் ..வாழ்த்துகள் sabeekshanaa
ஆங்கிலேயர் பிடியினில் அடிமையுற்றுக்கிடந்தோம்
ஆனால் ஆங்கிலத்தின் பிடியிலா தமிழின் ஆரோக்கியம் சீர்கெட்டது?

Sabeekshana
19-08-2014, 02:53 PM
நன்றி ஜான்

தமிழின் ஆரோக்கியம் சீர் கெட ஆங்கிலம் மட்டுமே ஒரு காரணம் அன்று.

தமிழர் தமிழ் மீது கொண்ட பற்றினை படிப்படியாக இழக்க ஆரம்பித்தனர்.

அதன் விளைவே இன்று காணும் ஆங்கிலத்தின் அபரித வளர்ச்சி.

நாஞ்சில் த.க.ஜெய்
25-08-2014, 11:35 AM
அடிமை மோகம் மீண்டும் துளிர்த்தெழும் காலமிது. மாறட்டும் இந்நிலை..கவிதை அருமை சபீக்ஷ்னா...