PDA

View Full Version : கணவன் மனைவி கடிஅனுராகவன்
16-08-2014, 04:28 AM
தம்பதிகளுக்கு பத்து கட்டளைகள்
கட்டளை : 1
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
அதனால்தான் அவ்வப்போது இடியும் மின்னலும் உண்டாகிறது
கட்டளை : 2
உங்கள் மனைவி உங்கள் ஒவ்வொரு சொல்லையும் கவனமாகக் கேட்க வேண்டும் என நினைக்கின்றீர்களா?
உறங்கும்போது சொல்லுங்கள் - அதாவது நீங்கள் உறங்கும் போது.
கட்டளை : 3
திருமணம் என்பது பெரும் கொடை
அதனால்தான் விவாகரத்து 500ரூபாய்க்குள் கிடைக்கிறது
கட்டளை : 4
திருமண வாழ்வு பெரும் ஏமாற்றம். திருமணமான முதல் வருடம் கணவன் பேச மனைவி கேட்கிறாள். இரண்டாம் ஆண்டு மனைவி பேச கணவன் கேட்கிறான். முன்றாம் ஆண்டில் இருவரும் பேச ஊரார் கேட்கிறார்கள்.
கட்டளை : 5
ஒரு கணவன் தன் மனைவிக்காக தன் கார் கதவைத் திறந்து விடுகிறானென்றால் ஒன்று நிச்சயம்: ஒன்று கார் புதிதாக இருக்கும் அல்லது மனைவி...
கட்டளை : 6
ஒருவனும் ஒருத்தியும் ஒன்றாகும் போதுதான் திருமண வாழ்வின் துவக்கம். எந்த ஒன்று என்று நிச்சயிக்க முயற்சிக்கும்போதுதான் பிரச்னையின் துவக்கம்.
கட்டளை : 7
திருமணத்துக்கு முன், ஆண் நீ சொன்ன ஒரு வார்த்தையைப் பற்றி யோசித்துக் கொண்டே இரவு முழுக்க விழித்திருப்பான். திருமணத்துக்குப் பின் நீ பேசி முடிப்பதற்குள் அவன் உறங்கியிருப்பான்.
கட்டளை : 8
மனிதர்கள் ஒவ்வொரு மனைவியும் அழகானவளாயும், புரிந்து நடப்பவளாயும், சிக்கனக்காரியாயும், நல்ல சமைக்கத் தெரிந்தவளாயும் இருப்பதையே விரும்புகிறார்கள். ஆனால் சட்டப்படி ஒருவனுக்கு ஒரு மனைவி மட்டும்தானே அனுமதி.
கட்டளை : 9
காதலும் திருமணமும் இருவருக்கிடையில் ஏற்படும் வேதி மாற்றமாம். அதனால்தான் கணவனை விஷமுள்ள கழிவு போல சில மனைவிகள் நடத்துகிறார்களோ.
கட்டளை : 10
ஒரு ஆண் திருமணம் செய்து கொள்ளும் வரை குறை மனிதன்தான். அதன் பின், அவன் முழுதாய் முடிந்தான்.

நன்றி:முகநூல்

அனுராகவன்
16-08-2014, 04:30 AM
மனைவி: “ என்னங்க! நேற்று தூக்கமே வரல்ல... கால்வலி பொறுக்க முடியல்ல கொஞ்ச நேரம் உங்க மேல கால தூக்கி போட்டுப் பாத்தேன் ம்... கொஞ்சம் கூட குறையல்ல.. அப்புறம் எப்படியோ தூங்கிட்டேன்..! “
கணவன்: “ உன் கால்தானா அது ..!?”
மனைவி: “ஏன் அப்படி கேக்கறீங்க ?”
கணவன் : “ இல்லே.. நேத்து யானை மிதிக்கிற மாதிரி கனவு கண்டேன்..!!!”

அனுராகவன்
16-08-2014, 04:31 AM
”என்னோட கணவர் கல்யாணமான
புதுசுல என்னை 'தேவயானி,
தேவயானி'ன்னு ப்ரியமா கொஞ்சுவார்.
"இப்ப என்ன ஆச்சு?"
"தேவையா நீ,
தேவையா நீ'ன்னு எரிஞ்சு விழறார்."

அனுராகவன்
16-08-2014, 04:33 AM
மனைவி : வீட்டு சுவரில் crack விழுந்துள்ளது. அதை பூச கொத்தனாரை அழைத்து வாங்க...

கணவன் : சரி அழைத்து வருகிறேன்,,
( பல முறை சொல்லியும் கணவன் மறந்து விடுகிறார். ஒரு நாள் மனைவியே பூசி விடுகிறார் )

பின்பு ஒருநாள்
கணவன் : என்ன crack காணலையே..? யார் பூசுனா..?

மனைவி : ஒரு வீட்டுல ரெண்டு crack இருக்க கூடாதாம்.. அதான் ரெண்டுல ஒன்ன நானே பூசிடேன்..

கணவன் : ???

அனுராகவன்
16-08-2014, 04:35 AM
கணவன், இரவில் அவரது மனைவிக்கு ஒரு sms அனுப்பினார்
ஹாய் எனக்கு நேரமாகிறது, நான் திரும்ப வர்றதுக்கு முன்னாடி கொஞ்சம் என் அழுக்கு துணிகளை துவச்சு வச்சிடு. எனக்கு பிடித்த உணவு தயார் செஞ்சுவை!

மனைவியிடம் இருந்து பதில் இல்லை...


கணவன் மற்றொரு அனுப்பினார், "நான் சொல்ல மறந்துட்டேன், எனக்கு சம்பளத்தை அதிகரிச்சிருக்காங்க. உனக்கு மாத இறுதியில், ஒரு புது கார் வருகிறது!"

மனைவி உடனடியாக "வாவ், உண்மையாகவா?" என்று sms அனுப்பினார்

கணவன், "இல்லை, நான் என் முதல் மெசேஜ் கிடைத்தை உறுதி செய்ய அனுப்பினேன்"!
எப்பிடிலாம் யோச்சிகிரங்க

அனுராகவன்
16-08-2014, 04:37 AM
https://scontent-b-fra.xx.fbcdn.net/hphotos-xpf1/t1.0-9/10429488_649868078430385_3863449522961911235_n.jpg

அனுராகவன்
16-08-2014, 04:38 AM
ஒரு கணவர் தன் மனைவிக்கு மொபைலில் இருந்து ஒரு மெசேஜ் அனுப்புகிறார்....
Thanks for making my life wonderful and being a part of my life. Whatever I am is only because of u , u are my Angel, thanks for coming in my life and make it worth living.
You are Great.
மனைவியின் பதில் மெசேஜ் :
மவனே! குடிச்சிருக்கியா ? மரியாதையா அமைதியா வீட்டுக்கு வந்துடு, பயப்படாதே எதுவும் செய்ய மாட்டேன்.
கணவர் : Thank You.

அனுராகவன்
16-08-2014, 04:39 AM
அம்மா தூக்கமே வரல ஒரு கதை சொல்லுமா...
கண்ணா எனக்கும் தூக்கமே வரல, உங்க அப்பா இன்னும் வரல, வரட்டும் ஏன் லேட்டுனு கேப்போம், அபபுறம் பாரு உங்க அப்பன் எத்தன
கதை சொல்றார்னு....

அனுராகவன்
16-08-2014, 04:44 AM
தோழி 1:- என் புருஷனோட டேஸ்டும் சரி செலக்ஷனும் சரி எப்பவுமே படு மட்டமாக தான் இருக்கும்...!
தோழி 2:- அது எனக்கு ஏற்கனவே தெரியும்..!
தோழி 1:- (அதிர்ச்சியுடன் ) "என்னடி சொல்றே..! உனக்கு எப்படி தெரியும்..?"
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
தோழி 2:- உன்னை கல்யாணம் பண்ணி இருக்காரே, அப்பவே தெரிஞ்சுக்கிட்டேன்.....!*
தோழி 1:- ? ? ? ? ? ? ? ? ?

அனுராகவன்
16-08-2014, 04:46 AM
மனைவி : என்ன செய்யறிங்க?

கணவன் : ஒன்னும் செய்யல....

மனைவி : ஒன்னும் செய்யலயா....? நம்மலுடைய கல்யாண சான்றிதழ ரொம்ப நேரமா பார்த்துகிட்டு இருக்கிற மாதிரி தெரியுது.....
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
கணவன் : ம்ம்....இதுல காலாவதி தேதி இருக்கான்னு பார்த்திக்கிட்டுருந்தேன்...

அனுராகவன்
16-08-2014, 04:47 AM
குடித்து விட்டு வீட்டிற்கு வரும் கணவர், தன் மனைவிக்கு தான் குடித்தது தெரிந்து விடக் கூடாது என நினைக்கிறார்.
உடனே தனது லேப்டாப்பை எடுத்து வேலை செய்வது போல் அமர்ந்து கொள்கிறார்.

அப்போது அங்கே மனைவி வருகிறார்.

"குடிச்சிட்டு வந்திருக்கீங்களா...?"

"இல்லையே..."

"பொய் சொல்லாதீங்க... எனக்குத் தெரியும் நீங்க குடிச்சிட்டுத் தான் வந்திருக்கீங்க..."

கணவருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.
"எப்படிக் கண்டுபிடிச்ச...?"

எரிச்சலுடன் மனைவி சொல்கிறார்...

"ம்க்கும்... இதைக் கண்டுபிடிக்க சிபிஐ-யா வரணும் ... அதான் பார்த்தாலே தெரியுதே...."

மேலும், கணவர் ஆச்சர்யத்துடன் கேட்கிறார்...
"எப்படி..?"

"நீங்க லேப்டாப்புனு நினைச்சு மடில வைச்சு வொர்க் பண்ணிட்டு இருக்கறது என்னோட சூட்கேஸ்"

"...?????"

Mano60
17-11-2016, 05:32 AM
கணவன் மனைவி கடி தகவல்கள் அனைத்தும் சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டுகின்றன. அருமை. எனக்கு ஒரு சந்தேகம் தமிழ் மன்றத்தில் முழுமையான ஆங்கில பதிவுகளுக்கு அனுமதி உண்டா?