PDA

View Full Version : தமிழ் தாய்:



அனுராகவன்
14-08-2014, 01:59 PM
தென்னகத்து மண்ணிலே
தென்பாண்டி முத்துக்கள்
கூட்டி சேர,சோழ,பாண்டிய
வர்க்கத்தினர் காத்த
தமிழே நீ
இல்லையேல்
நாங்கள் பிறந்த
பெயர் யாதென
கண்டோம்..

நாட்டில் செல்வம்
வந்தது உன்னால்..
மாற்றம் வந்தது உன்னால்
மன்னன் சிறந்தான் உன்னால்
கவி படைக்க என்பொல்
பல கவிஞர்கள் தோன்றி
உன்னகது செம்மொழியால்
தென்கத்து மக்களை
வாழ இறைவனிடம்
வரம் பெற்ற தமிழ் தாயே
நீ வாழ்க! எம்மோடு
தமிழர் குலம் சிறக்க
வாழ்த்துவோம்

அனுராகவன்
14-08-2014, 02:02 PM
சான்றோர் வளர்த்த
சங்கம் மூன்று தந்த
உன்னையே நினைத்து
உருகும் புலவர்கள்
அழகு ! நீ அழகு!
சுவைப்பட பாடும்
ஆன்றோர்கள் பலர்
எம் நாட்டில்..

பொங்குதோ உன்
மங்காத இசை யென
நித்தம் என்னை
தாலாட்டு இலக்கிய
இலக்கணம் ரசம்
சொட்டும் ஏட்டிலே
எழுதிய காவியங்கள்...

மண்ணிலே என்
போல் கவிஞர்கள்
வளந்தனர்
உன்னால்...
நெற்கதிற்கள்
பாரினில் உயர்ந்தன
உன் நவரச கீதத்தால்

காலி இடங்கள்
கோயிலாக மாறும்
உன் பாட்டுக்கள் என்றும்
பாண்டிய மண்ணிலே!

கங்கையில் உன்
சங்கம் அமைக்கும்
தாய் தமிழே!
தமிழ் தாயே....!