PDA

View Full Version : நட்பு உள்ள வரை



அனுராகவன்
14-08-2014, 01:46 PM
சோகங்கள் வாழ்வில் இருந்தாலும்,டேய்!வெற்றி ஒன்று கண்டால்

மனதில் உள்ள காயங்கள் என்று ஆறும் ,தினமும் என்னை பாராட்ட

நீ! என் நண்பண்டா..என் தோல் தட்ட வேண்டும் உறவுகளுக்கப்பால்..

அவனும்,நானும் -போகும் பாதை எங்கும் ஒன்றாய் நடக்க வேண்டும்!!





நேரில் பார்தது கிடையாது!போனில்,ஸ்கைப்பில் மட்டுமே உரையாடல்

என் உயிர் பிரியும் போது கூட ,அவன் என் அருகில் இருக்க வேண்டும் !!

அன்னைபோல் என்னை காப்பான் ..எனக்கு ஒன்றால் என்றால் துடித்து போவான்..

புன்னகை பூவாய் மலர்த்தோட்டத்தில் வாடாமலராய் என்றும் நம் நட்பு !!




வண்ண வண்ண மலத்தோட்டத்திலே மலர சூடும் மலரானேன்!

இலக்கணம் காணுவோம் நட்பெனும் உணர்விற்கு உயரிய மகுடமாய்....

எத்தனை உறவுகள் இருந்தாலும் நம்நலத்தில் தன்னலம் கருதாமால்

வாடா மலராய் ,என்றும் இதயத்தில் தொடரும் நம்நட்பு !!




எத்தனை நட்புக்களை கண்டுள்ளேன் அனுபவத்தால் உணர்கிறேன்

கணநேர அழைப்பு !நான் வார்த்தைகளால் வரையறுக்கா முடியாது

உலகிற்கு எல்லா ஜீவனுக்கும் நாம் உருவாக்கும் புது உறவு

ஆயிரம் அர்த்தம் சொல்லும் நல்நட்பாகிய புதிய தலைமுறை.... நம் நட்பு




காகிதப்பூக்கள் கண்டிறிக்கிறேன் சில நேரமும் வாசமலர் அழகு தான்

எதிரிகளும் நல்லவர்களாக மாறுவார்கள் வாடிவிடாதவரை

சற்றென்று நாம் நட்புக்கொள்வோம்!கொட்டும் மழை அழகு தான்

அவர் அவருக்கு போதுமானால்,அளவோடு இருக்கும் வரை!!

அனுராகவன்
14-08-2014, 01:47 PM
அன்பான சொந்தங்கள் ஊட்டிய சோறு உண்ண ஆசை தான்

ஆசையாக படியில் தூங்க ஆசைதான் தினமும் என் மனம் தேடும்

என் வாழ்க்கை ! என்னை புரிந்துக்கொள்ள யார் இல்லையா என்று ஏங்கினேன்

நட்பு ஒரு தரம் வந்துவிட்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும் உயிர் வரை!!




தனிமையான சோகம் நீடித்தால் சொர்க்கம் அழியலாம்

சுமையான உறவுகள் நீடித்தால் பாசம் அழியலாம்

தினம் தினம் அன்பு நீடித்தால் கவலைகள் அழியலாம்

கொட்டும் பணம் வந்தால் உறவுகள் அழியலாம்

உயிரே அழிந்தாலும் கோடி பணம் தந்தாலும் அழியாதது -நட்பு ஒன்றே ...!!!





தோள் கொடுக்க உண்மையான தோழன் இருக்கும் வரை ஆயிரம்

சோகங்கள் வந்தாலும் சுகமே மறக்க நினைப்பன பல-அதனை மீறி

நினைவில் நின்றன சில நினைக்கும் எண்ணங்கள் பல அதில்

நிலைக்கும் எண்ணங்கள் சில​-ஆனால் நண்பா !!

உனது நினைவலைகள் மட்டும் நினைக்கவில் இல்லை மறக்கவும் இல்லை

நில்லைது விட்டன என் மனதில் மகிழ்ச்சியோடு ஆரம்பிக்கும் -முதல் நட்பு...

அனுராகவன்
14-08-2014, 01:48 PM
பயத்தோடு பகிர்ந்து கொள்ளப்படும் இணைய முகவரிகளும்,முகபுத்தகமும்

அவள் தவறாக எண்ணிவிடுவாளோ?என்று யோசித்து,யோசித்து பேசும் தருணங்கள்.

காதல்,கீதல் என உளறுவானோ? என்று குழப்பத்தோடு பேசும் ஆரம்பக்காலங்கள்.

புரிதல் தொடங்கும் நேரத்தில் தானாக மலர ஆரம்பிக்கும் நட்பு மலர்.

புரிந்து கொண்ட பின்,



ஆண்-பெண் வித்தியாசத்தை காணாமல் ஆக்கும் நட்பின் ஆழம்.

தோல்விகண்டு துவலுகையில் புதுத்தெம்பூட்டி,

அடுத்த முயற்சிக்கு அடிதளமிடவைப்பாள் அவனை அவன் தோழி.

ஆடவர் நால்வர் முன் தைரியத்தோடும்,பெண்மை மாறாமலும்,

வாழ வழிகாட்டுவான் அவளுக்கு அவள் தோழன்.




முடிவில்லா முடிவில்-நட்பு வளர்ந்து நிற்கும்? புரிந்து இருக்கமாட்டார்கள் என்னை,

என் தோழியை/நண்பனை விட வேறு யாரும் நன்றாக என்னும் ரீதியில்...!

வளரட்டும் இதுபோல் ஆரோக்கியமாக ஆண்-பெண் நட்பு.

வாழு வாழ விடு !!!




நம் கல்லூரியில் நான் கண்ட முதல் வாசகம் நீ...கண்ட நாள் முதல் நண்பனானாய்......

சின்ன சின்ன குறும்புண்டு,சேட்டைகளுண்டு, நல்ல குணமுண்டு,

படிப்புண்டு, தானுண்டு,தன் உறவுகளுண்டு என்றிருந்தாயடா....

பொறுமையின் நுழைவு வாசலே திடீரென்று ஆற்றோடு போனாயேடா !...

சின்ன வலியையும் கூட தாங்க மாட்டாயேடா !....

அந்த நரகத்தில் நீ எப்படி துடிதுடித்திறுப்பாயோ !வேதனைப்பட்டிருப்பாயோ !பழைய ஞாபகம் !!

அனுராகவன்
14-08-2014, 01:49 PM
உந்தன் மரணப்போராட்டத்தைக் கண்ட அந்த கடவுளுக்கும் காப்பாற்ற மனமில்லையா !..

உன் வீட்டிற்கு சென்றிருந்தேன் நண்பனே..அங்கு நீ சுற்றி சுற்றி வந்த உன் அன்னையும் ,

உன் வீட்டு திண்னையும்,நீ வளர்த்த நாய்களும் உன்னை

எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.....நான் எப்படி புரிய வைப்பேன் நண்பனே நீ இந்த மண்ணுலகில் இல்லையென்று....நான் செல்லுமிடமெல்லாம் உன் கால் தடமும் உன் நட்பு வாசனையும் தானடா....



எல்லாருக்கும் ஆறுதல் கூறிவிட்டேன் என் நண்பனே......

எனக்கு ஆறுதல் யார் சொல்லுவார் இங்கு உன்னைத் தவிர........

சுற்றி சுற்றி பார்க்கிறேன் யாரும் தோல் கொடுக்கல ...

என்றும் உன் நட்பின் நினைவுடன் உன் ஆருயிர் நண்பன்!!!




கண்டதும் கை குலுக்கி கன நேரத்தில் காணாமல் போகும்...மின்னல் நட்பு! ..........

சந்திப்பில் மட்டும் சரசமாடும்-பிறகு சிந்திக்க மறந்து போகும்...

தாமரை இலை மேல் தண்ணீர் நட்பு! ...........காரியம் முடிந்ததும்

வீரியம் குறைத்து விலகிப் போகும்....சந்தர்ப்பவாத நட்பு! .....



தூரத்தில் இருந்தாலும் நெஞ்சின் ஓரத்தில் நினைந்து கசிந்துருகும்...

ஓயாத அலை நட்பு! ......கூட இருந்தே கூடி மகிழ்ந்திருந்து

குழி தோண்டி புதைத்துப் போகும்...கூடா நட்பு! ..........

இன்பமிருக்க இணைந்திருக்கும் துன்பம் வர தூரப் போகும்...

துச்ச நட்பு! ..

அனுராகவன்
14-08-2014, 01:50 PM
நித்தியம் என்று சத்தியம் செய்யும் புரிதலில் பிணக்கு கொண்டு பிரிந்து போகும்....

புத்தி கெட்ட நட்பு! ..........

நட்பின் தொடக்கம் முதல் நாடித் துடிப்பின் அடக்கம் வரை கூடி வரும்....

உயிர் நட்பு!...




தன் வீட்டுக்கெதிராகவும் தன் நாட்டிர்கெதிராகவும் ,

தன் மதத்திற்கு எதிராகவும் ,தன் சாதிக்கு எதிராகவும் ,

மூட நம்பிக்கைகளை ஒழிக்க ,தவறுகளை தடுக்க ,

எவனுக்கும் அஞ்சாமல் ,எழுச்சி கொண்டு எழுவாய் எனில் ,நீயும் என் நண்பனே !!




காலங்கள் மீறி வாழ்வில் அன்பை மையப்படுத்தி

நட்பை முன்னிலை படுத்தி ஆற்றலோடு வாழ்ந்த எங்களுக்கு

பிரிவு என்னும் பெரும் சோகம் !!இன்பமான பயணம்

நின்று போவதால் அதிர்ச்சி !!காலம் என்பது எங்களை

பிரிக்க வந்த எமன் இப்பொழுது பிரிகிறோம் நாங்கள்

நம்பிக்கை உண்டு பாருங்கள்

மீண்டும் சிந்திப்போம் நிச்சயம் ஒரு நாள் ..!!!