PDA

View Full Version : அச்சலாவின் சிரிப்பு,கடிகள்!!அனுராகவன்
14-08-2014, 12:41 PM
நண்பர் 1 : டேய்..... , ரொம்ப அதிகமா எடையை...
காட்டுதுன்னு சொல்லி எடை காட்டும் இயந்திரத்தில்
இரண்டாவது தடவை சரிபார்க்கலாம் என ஏறினது
தப்பாப் போச்சுடா !

நண்பர் 2 : ஏண்டா, கூட்டமா ஏறாதீங்கன்னு சொல்லுதா?

நண்பர் 1 : இல்லடா, ” வீணா என்னை சந்தேகப் படாதே....
சனியனே , ….. திங்குற சோத்தக் குறைச்சு சாப்பிடு “
அப்படீன்னு திட்டுதுடா……

அனுராகவன்
14-08-2014, 12:43 PM
வெட்டி பயல்...

ஒரு வீட்டில் அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

" இதோ பாருங்க.......... உங்களுக்கு கொஞ்சமாவது கவலை இருக்கா. "
" என்ன சொல்றே?

நம்ம பொண்ணுக்கு வயசாகிகிட்டே போகுது. காலாகாலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டாமா?

அவசரப்படாதே. கொஞ்சம் பொறுமையா இரு. நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். ஒருத்தனும் சரியாய் வரலை. கொஞ்சமாவது கண்ணுக்கு லெச்சணமா, பார்க்கிறதுக்கு அழகா, சுயமாய் சம்பாதிக்கிற ஒரு பையன் கிடைக்க வேண்டாமா.

எங்க அப்பா இப்படியெல்லாம் பார்த்திருந்தா எனக்கு கல்யாணமே ஆகி இருக்காது.

கணவர் கப் சிப் ............. ஆகிறார். இந்த நேரத்தில் மகள் உள்ளே வருகிறாள். அவள் பின்னாடியே ஒரு இளைஞன்.

அப்பா...

என்னம்மா... யார் இந்த பையன்

இவர்தாம்பா அவர்

அவர் ...ன்னா

அதுதான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே. அவர்தான் இவர். இவரைத்தான் கல்யாணம் செய்துக்க விரும்புறேன்.

அப்படியா வாப்பா..உட்கார்.

உட்கார்ந்தான்.

உன் கிட்டே சில கேள்விகள் கேட்கலாமா

தாராளாமாய் கேளுங்க. அதுக்காகத்தானே வந்து இருக்கேன்.

இப்போ நீ என்ன செய்துகிட்டு இருக்கே

கடவுளை பற்றி ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்.

அப்படின்னா... உன் எதிர்காலம் பற்றி என்ன திட்டம் போட்டு வச்சு இருக்கே ?
கடவுள் எல்லாத்தையும் கவனித்து கொள்வார்.

சரி உனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை பிறக்குது. அப்பறம் என்ன செய்வே ?

அதையும் கடவுள் கவனிச்சுக்குவார்.

சரி போயிட்டு வா .... அவன் நம்பிக்கையோடு புறப்பட்டு போனான்.

அவன் போன பிறகு அம்மா கேட்டாள்.... பையன் எப்படி?

அப்பா சொன்னார். இவனிடம் பணமும் இல்லை. வேலையும் இல்லை. ஆனால் என்னை கடவுளாக நினைத்து கொண்டிருக்கிறான்.*

அனுராகவன்
14-08-2014, 12:44 PM
ஒருவர் வாரந்தோறும் கோயிலுக்குச் செல்லும்போது அங்கிருந்த ஒரு பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
6 மாதம் கழிந்த பிறகு, அவர் அந்தப் பிச்சைக்காரனுக்கு 75 பைசாக்கள் மட்டும் போட்டார்.
ஒரு வருடம் கழித்தது. இப்போது அவர் அந்தப் பிச்சைக்காரனுக்கு 50 காசுகள் மட்டும் போட்டார். அடுத்த 2 வருடங்களில் இதுவும் குறைந்து அவர் பிச்சைக்காரனுக்கு 25 காசுகள் மட்டுமே போட்டார்.
இத்தனை நாள் பொறுத்த பிச்சைகாரன்(ர்), (அவருக்கும் வயசாகிடுச்சில்ல!) ஏன் இப்படி படிப்படியாக குறைந்த காசுகளைப் பிச்சை போடுகிறார் எனக் கேட்க, அந்த மனிதரும் ஸின்ஸியராக, 'மிஸ்டர் பெக்கர், முதலில் நான் பேச்சிலர், 1 ரூபாய் போட்டேன், பிறகு கல்யாணமாச்சு, பெண்டாட்டியையும் கவனிக்கணும், 75 காசு போட்டேன், பிறகு குழந்தை பிறந்தது, 50 காசு போட்டேன். இப்போ அந்தக் குழந்தையை ஸ்கூலில் சேர்க்கக் காசு சேமிக்க வேண்டியிருக்கு, அதனால் 25 காசு போடறேன்' என்றார்.
பிச்சைக்காரர் யோசித்தார். 'அப்போ என் வருமானத்தில் தான் நீ குடும்பம் நடத்தறேன்னு சொல்லு' என்றார்!!'

அனுராகவன்
14-08-2014, 12:51 PM
எள்ளுன்னா எண்ணெயோட வந்து நிப்பானே உங்க பையன், இப்ப என்ன பண்றான் ?
வீட்டுல கல்யாணப் பேச்சை எடுத்த உடனே கையில் குழந்தையோட வந்து நிக்கிறான்

அனுராகவன்
14-08-2014, 12:53 PM
"ஆனாலும் அந்த நடிகருக்கு ஆசை ரொம்ப அதிகம்"..
எப்படி சொல்லறே?
"ரசிகர் மன்றம் வேண்டாம்; எனக்கு சட்டமன்றம்
அல்லது நாடாளுமன்றம் அமையுங்கன்னு
சொல்லராறே!"......

அனுராகவன்
14-08-2014, 12:54 PM
' இண்டர்வியூ எடுப்பவர்: வேலைக்கு சேரும்போது மாசம் 5000 ரூபாய் சம்பளம்..... ஆறாவது மாசத்திலிருந்து சம்பளம் 8000 ரூபாயாய் தரேன் ''.....

'' அப்ப நான் ஆறாவது மாசமே வேலைக்கு சேர்ந்துக்கிறேன்......''

அனுராகவன்
14-08-2014, 12:56 PM
சத்து குறைந்து போச்சுன்னு டாக்டர் கிட்ட போனேன் .......
.*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
இப்போ என் சொத்து குறைந்து போச்சு.........

அனுராகவன்
14-08-2014, 12:58 PM
"டாக்டர், நான் இந்த ஏரியாலே பெரிய அரசியல்வாதி, தெரியுமா?"..

"அதுக்காக, 'தூக்கம்' வரதுக்கு மருந்து கேட்டா தருவேன்... 'கூட்டம்' வரதுக்கு மருந்து கேட்டா எப்படி சார் !!!......

அனுராகவன்
14-08-2014, 12:59 PM
நம்மாளு ATM ல பணம் எடுக்க போனார். முடியல. ரெண்டு மூணு தடவை முயற்சி பண்ணினார். முடியல. கடுப்பேறி பேங்க்கிற்கு போன் பண்ணி விபரம் சொன்னார்.
அவருடைய கணக்கை சரிபார்த்த டெல்லெர் பொண்ணு சொல்லிச்சு...
" சார்.. உங்க கணக்கில் எந்த பிரச்னையும் இல்லை, பணமும் இருக்கு, ப்ளாக் ஆகவும் இல்ல. பிறகு பணம் வராம இருக்காதே. ஒரு தடவை கூட முயற்சி பண்ணுங்க சார்..."
நம்மாளு மீண்டும் முயற்சி பண்ணினார். பணம் எடுக்க முடியல.
"ஏம்மா.. ATM ல பணம் இல்லையாக்கும்..?"
" இருக்கே சார்.. மத்தவங்க எடுக்கிறாங்களே.... சார் உங்க கார்டு நல்லாதானே இருக்கு..? டேமேஜ் ஒண்ணும் ஆகலையே..?"
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
" என்ன பேச்சும்மா பேசுறே..? கார்டுக்கு டேமேஜ் ஆகிவிட கூடாதுன்னு தானே நேத்து 'லேமினேசன்' பண்ணி வச்சிருக்கேன்...

அனுராகவன்
14-08-2014, 01:04 PM
மாமா உங்க பொண்ணுக்கு எனக்கு ஓரே பிரச்சினையா இருக்கு நீங்க கொஞ்சம் ஊருக்கு வரமுடியுமா..??
அட..!!
என்ன மாப்ல நீங்க, ஒரு நாலு பல்லிய புடிச்சு வீட்டுகுள்ள விடுங்க..!!
என் பொண்ணு பாருங்க எப்படி உங்களுக்கு பொட்டி பாம்பா அடங்கி உங்க பேச்ச கேக்குறானு..!!
இது தெரியாமா நாலு தடவ அடிவாங்கிடேனே மாமா...!!

அனுராகவன்
14-08-2014, 01:06 PM
இந்த புடவைய பில் போடுங்க ?""
"1500 ரூபாய் மேம்""
"30 % discount போட்டிருக்கே?"
"ஆமாம் ..sorry 1050 ரூபா..
"HDFC crdit card ல இன்னொரு 10 % extra போடுவீங்க இல்ல?"
"ஆமாம் இருங்க கால்குலேட் பண்றேன். 945 ரூபாய்"
"இந்தாங்க போன தடவ நீங்க குடுத்த ரூ 200 gift voucher ...இரண்டு கூப்பன் இருக்கு.இப்ப சொல்லுங்க."".
"இருங்க..ம்ம்..945-400 = 545 ரூபா..."
"Regular Customer purchase points ல இன்னும் எவ்ளோ குறையும்?"
"ம்ம் இருங்க உங்க ஃபோன் நம்பர் தாங்க...பார்துட்டு சொல்றேன்..இன்னும் 250 ரூபா குறையும்...அப்ப 545-250 = 295 ரூபா..pay just Rs 295 /-"
"ம்ம் ... 295 ரூபா புடவைய 1500 க்கு விக்கறீங்க இல்ல?.. இத வாங்கிட்டு போக நான் என்ன லூசா? ..போ..ய்..யா"
# யாருகிட்ட?

அனுராகவன்
14-08-2014, 01:07 PM
வகுப்பறையில் ஏதோ துர்நாற்றம்.
ஆராய்நது பார்த்த போது, ஒரு மாணவனின் துவைக்காத சாக்ஸில் இருந்து நாற்றம் வந்தது.
ஆசிரியர் அவனை திட்டி மறுநாள் புது சாக்ஸ் அணிந்து வரும்படி சொன்னார். மறுநாளும் அதே நாற்றம் அதே மாணவனிடம்.ஆசிரியருக்கு பயங்கர கோபம். நேற்று உன்னிடம் என்ன சொன்னேன் என்று கத்தினார்.
பையன் பணிவுடன் சொன்னான்,
"சார் புது சாக்ஸ்தான் போடடு வந்திருக்கேன்"
"பொய் சொல்லாதே" என்று இன்னும் அதிகமாகத் திட்டினார்.
பையன் சொன்னான்,
"தெரியும் சார் நீங்க நம்ப மாட்டிங்கன்னு ... அதான் நேத்து போட்டிருந்த சாக்ஸையும் எடுத்து வந்திருக்கேன்" என்று பழைய சாக்ஸை எடுத்து ஆசிரியரின் முகத்தருகே நீட்டினான்.
அடுத்து என்ன நடந்து இருக்கும்?
பள்ளிக்கூடத்துக்கு ஆம்புலன்ஸ் தான் வந்து இருக்கும்.
பசங்கன்னா சும்மாவா?.

Sabeekshana
14-08-2014, 01:11 PM
டாக்டரை வைத்து எழுதப்பட்ட கடிகள் குறிப்பாக சிரிப்பை தூண்டுகின்றன. :lachen001:

நன்றி அச்சலா

அனுராகவன்
14-08-2014, 01:17 PM
அவன் : (தொலைபேசியில்) டேய்...எங்கடா இருக்க?
இவன் : வீட்லதான் மச்சான்,
அவன் : அப்பாடா... இப்பதான் நிம்மதியா இருக்கு.
இவன் : ஏண்டா என்ன விஷயம்?
அவன் : அதில்லடா.....காலையில பேப்பரை பார்த்தேன்.அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் நகராட்சிகாரங்க புடிச்சுட்டு போனதா போட்டிருந்துச்சு.அதான்...எங்க நீ மாட்டிகிட்டீயோன்னு பயந்தோ போயிட்டேன்

அனுராகவன்
14-08-2014, 01:20 PM
ஒரு அலுவலகத்தில் 3 நண்பர்கள இருந்தனர் . மூவரும் மதிய உணவை ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். தினமும் அவர்கள் ஒரே மாதிரியான உணவை கொண்டுவந்தனர்.
ஒருவர் தயிர் சாதம், ஒருவர் சாம்பார் சாதம், மற்றொருவர் தக்காளி சாதம்.
இப்படி ஒரே மாதிரி சாதத்தை மனைவி கொடுகிறாரெ என வருத்தபட்ட அவர்கள,ஒரு நாள் ஆபிஸ் மாடியிலிருந்து குதித்து விடுகிறார்கள்.
விஷயம் கேள்விப்பட்டு வந்த அவர்களின் மனைவிகள்,
முதல் இருவரை தூக்கிய மனைவிகள் ஐயோ சொல்லியிருந்தால் வேறு சாதம் செய்து கொடுத்திருபேனே என அழுதுள்ளனர்.
ஆனால் மூன்றாம் நபரின் மனைவியோ குழப்பத்துடன் டெய்லியும் இந்தாளுதானே சாப்பாடு செய்து எடுத்துட்டு போவாரு இவரு ஏன் குதிச்சாருன்னு கேட்டாளாம்

அனுராகவன்
14-08-2014, 01:21 PM
ஒரு பொண்ணுக்கு ஆயிரம் கஷ்டம் இருக்கும்...
.
ஒரு ஆணுக்கு ஒரே கஷ்டம்தான் இருக்கும்... அது அந்த பெண்ணாதான் இருக்கும்

அனுராகவன்
14-08-2014, 01:21 PM
ஆசிரியர்: மாணவர்களே
,ஒருவன் ஒரு கழுதையை
அடிப்பதைப் பார்த்து நான் அவனை தடுக்கிறேன் .
இந்த நல்ல குணத்தின் பெயர் என்ன.?
.
.
.
.
.
.
.
.
.
'
'
'
.
.
.
மாணவன்: சகோதர பாசம் சார்...!!! ??

அனுராகவன்
14-08-2014, 01:22 PM
ஆசிரியர்: மாணவர்களே
,ஒருவன் ஒரு கழுதையை
அடிப்பதைப் பார்த்து நான் அவனை தடுக்கிறேன் .
இந்த நல்ல குணத்தின் பெயர் என்ன.?
.
.
.
.
.
.
.
.
.
'
'
'
.
.
.
மாணவன்: சகோதர பாசம் சார்...!!! ??

அனுராகவன்
14-08-2014, 01:23 PM
"உனக்கு ஏது 50 ரூபாய்?''" "ஓர் இடத்தில பாடினேன். 20 ரூபாய் கொடுத்தாங்க''


மீதி 30 ரூபாய்?''


" பாடுறதை நிறுத்துறதுக்குக் கொடுத்தாங்க''

அனுராகவன்
14-08-2014, 01:24 PM
வெயில் காலத்திற்கும் பனி காலத்திற்கும் என்ன வித்தியாசம்?
.
.
.
.
.
..
.
.
..
.
.
.
.
.
.
.
.
எப்படா குளிக்க போறோம்னு யோசிச்சா அது வெயில் காலம்..
ஏன்டா குளிக்க போறோம்னு யோசிச்சா அது பனி காலம்..

அனுராகவன்
14-08-2014, 01:26 PM
தொலைப்பேசி அழைப்பு கட்டண உயர்வால் இரண்டு நண்பர்கள் புறா வளர்த்தனர்..
இவனுக்கு ஏதும் பிரச்சனை என்றால் மற்ற நண்பனுக்கு புறாக்காலில் காகித்த்தை கட்டி அனுப்பி தொடர்புகளில் ஈடுபடுவார்கள்.
ஒரு நாள் புறாவின் காலில் எதுவும் இல்லாமல் ஒருத்தன் அனுப்பி இருந்தான்..
உடனே இவன் காலில் காகித்த்தை கட்டி,
"என்ன மச்சி ஒன்னும் சொல்லாம வெறும் புறாவ அனுப்பி இருக்கே??"
என்று கேட்டான்.
அதற்கு அவன் பதில் எழுதி அனுப்பி இருந்தான்,
"இல்ல மச்சி ... நீ சும்மாதான இருக்கேன்ன்னு மிஸ்ட் கால் பண்ணுனேன்

அனுராகவன்
14-08-2014, 01:27 PM
ஒரு காப்பி எவ்ளோ??
5 ரூபாய்...
எதிர்த்த கடைல 1 ரூபாய் னு தான் னு போட்டு இருக்கு??
அது XEROX கடை டா வென்ன.....

அனுராகவன்
14-08-2014, 01:36 PM
தொலைப்பேசி அழைப்பு கட்டண உயர்வால் இரண்டு நண்பர்கள் புறா வளர்த்தனர்..
இவனுக்கு ஏதும் பிரச்சனை என்றால் மற்ற நண்பனுக்கு புறாக்காலில் காகித்த்தை கட்டி அனுப்பி தொடர்புகளில் ஈடுபடுவார்கள்.
ஒரு நாள் புறாவின் காலில் எதுவும் இல்லாமல் ஒருத்தன் அனுப்பி இருந்தான்..
உடனே இவன் காலில் காகித்த்தை கட்டி,
"என்ன மச்சி ஒன்னும் சொல்லாம வெறும் புறாவ அனுப்பி இருக்கே??"
என்று கேட்டான்.
அதற்கு அவன் பதில் எழுதி அனுப்பி இருந்தான்,
"இல்ல மச்சி ... நீ சும்மாதான இருக்கேன்ன்னு மிஸ்ட் கால் பண்ணுனேன்