PDA

View Full Version : இதய நோய்கள் தவிர்ப்போம்!!



Sabeekshana
12-08-2014, 06:15 PM
http://static-img-a.hgcdn.net/Media/_640x360/HG008_heart-angina_FS.jpg



எண்ணெய் உணவை ஏட்டிக்கு போட்டியாய் உண்கையில்
எண்ணி ஒரு கணம் பார்ப்போம்- அதன்
கொலஸ்திரோல் செய்யும் ஆயிரம்
கொடுமைகளை - நம் குருதிச்சுற்றோட்டத்துக்கு!!

காய்கறி பழவகை பற்பல உண்ண -வாழ்
காலம் படிப்படியாய் கூடியே செல்லும்
மனதில் அழுத்தங்கள் பெருகியே செல்ல
மாயங்கள் மட்டுமே வாழ்வில் எஞ்சும்!!

வெல்ல உணவை வேண்டாம் என்போம்
வேதனை தரும் நீரிழிவு தவிர்ப்போம்
கள்ள தனமாய் உண்ணும் சக்கரை
காலனின் வலை என்பதை உணர்வோம்!!

மதுவும் புகையும் மறந்தே போவோம்
மனதில் என்றும் மகிழ்வுடன் வாழ்வோம்
குருதி அமுக்கம் (BP) குறைத்து காத்து
குருதி கலனின் (vessel) உறுதி பேண்போம்!!

உடல் திணிவை உகந்ததாய் மாற்றி
உடல் திணிவு சுட்டி (BMI) உறுதியாய் பேண்போம்
உடல் பயிற்சி தனையே தினம் தினம் செய்து
உற்சாக வாழ்வை என்றும் பெறுவோம்!!

குருதி சுற்றோட்டத்தின் சுதந்திரம் காக்க
சுகாதாரமான ஒரு இதயம் வேண்டும்
கருதியே இதனை நாளும் காத்தால்
கட்சிதமான வாழ்வை பெறுவோம்!!


http://bizweekpopularity.com/wp-content/uploads/2014/07/common-ailments-causes-symptoms-prevention-treatmentunderstanding-heart-disease-y3cwljbc.jpg

அனுராகவன்
12-08-2014, 06:59 PM
அழகாக கவிதை சே. சபீக்ஷனாஅவர்களே!!

M.Jagadeesan
13-08-2014, 03:15 AM
அறிவியல் , மருத்துவம் சார்ந்த கருத்துக்களைக் கவிதை வடிவில் தருகின்ற முயற்சிக்குப் பாராட்டுக்கள் !




மதுவை என்றும் தீண்டாதே !
...மாமிச உணவை உண்ணாதே !
மெதுவாய்க் கொல்லும் புகையிலையை
...மென்று தெருவில் துப்பாதே !
மெதுவடை பஜ்ஜி போண்டாவை
...அதிகம் உணவில் சேர்க்காதே !
இதயம் காக்க வேண்டுமெனில்
...இதுவே உபாயம் அறிவாயே !

Sabeekshana
13-08-2014, 05:16 PM
அச்சலா, "அவர்களே" எல்லாம் தேவையே இல்லை. நான் தம்மை விட வயதினில் சிறியவளே!! "சபீக்ஷனா" என்பதே போதுமானது.

நன்றி தமது பாராட்டுக்கு

ஜெகதீசன் ஐயா, ஒரு அழகிய கவி கொண்டு எனது கவியை மேலும் அலங்கரித்தமைக்கு நன்றிகள்.

அனுராகவன்
14-08-2014, 12:21 PM
அவ்வாறெ சே. சபீக்ஷனா